பெர்கமு சபையின் காலம் Jeffersonville, Indiana, USA 60-1207 1நல்லது, என்னைப்பொறுத்தமட்டில் அதை அணைத்து விடு வது நல்லது. நல்லது. கர்த்தருடைய ஆராதனையில் மீண்டும் இங்கே இருப்பதற் காக நாம் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நேற்றிரவில் நான் ஆயிர வருட அரசாட்சி வந்துவிட்டது போல உணர்ந்தேன். இங்கே சில கேள்விகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். அவைகளை என்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்வேன். இதோ இது ஜெப உறுமால் என நினைக்கிறேன்... ஜெபிப்பதற்காக. இக் கேள்விகளுக்கு என்னால் முடிந்த அளவுக்கு பதில் அளிப்பேன். 2டாக் அவர்களிடம், என் முகத்தில் கண் கூசும்படி அடித்துக் கொண்டிருக்கிற அவ்விளக்கை அணைத்துவிடும்படி கூறுங்கள். நான் இவ்விதமான ஸ்பாட்லைட்டுகள் என் மேல் அடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நான் இந்த ஸ்பாட்லைட் பிரசங்கிகளில் ஒருவன் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வித விளக்குகள் இல்லாமல் இருப்பது நல்லது என்று கருதுகிறேன். நான் தான் அதைச் செய்யச் சொன்னேன் டாக் அவர்களே. நான் அதைப்பற்றி என் மனதை மாற்றிக் கொண்டு விட்டேன். ஓ சற்றுப் பொறுங்கள். நீங்கள் அந்தப் பக்கமாக அதைத் திருப்பி விட்டு, அதில் வேலை செய்ய வேண்டியுள்ளதா? (சகோ. பிரன்ஹாம் அவர்கள் தன் சகோதரன் டாக் அவர்களோடு உரையாடு கிறார் - ஆசி). ஓ, நல்லது, அப்படியே விட்டுவிடுங்கள். ஓ இல்லை, அதை அப்படி விட்டு விடாதீர்கள். அவ்விதமாக இருப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன். நேராக நம் முகத்தில் கூசுகிற அளவுக்கு மிகவும் பிரகாசமான விளக்கு அடித்துக் கொண்டிருப்பதை நான் சில சமயங்களில் விரும்பு வதில்லை. இப்பொழுது என் முகத்தில் அடிக்காமல், திருப்பி விடப்பட்டதால், என்னால் சரியாக பார்க்க முடிகிறது. நன்றி ஐயா! அது அவருக்கு நிறைய வேலையைக் கொடுத்துவிட்டது. 3இந்த சபைக்காலங்களைப் பற்றி நாம் படிப்பதில், அதை முடிக்கவே முடியாத அளவுக்கு அது இருக்கிறது. இன்றைக்கு நான் இதின்பேரில் படித்துக் கொண்டிருக்கையில், என் மனைவியிடம், “இதிலிருந்து 50 பிரசங்கங்கள் செய்கிற அளவுக்கு இதில் விஷயங்கள் அடங்கியிருக்கின்றன'' என்று கூறினேன். பாருங்கள்? எனவே அவைகளில் உள்ள மிக முக்கியமான சாரமான விஷயங்களைப் பற்றி மட்டும் தொட்டுவிட்டு பின்னால் இதை புத்தக வடிவில் தயாரிக்கையில் இன்னும் கூடுதல் விஷயங்களை அதில் சேர்த்துவிடுவோம். 4சகோதரன் வெஸ்ட் அவர்களே, நான் உங்களை இங்கே காணவில்லை, தாங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நான் ஒரு நல்ல செய்தியைக் கேள்விப்பட்டேன்; அதாவது சகோ.டால்டன் அவர்களின் குடும்பத்தில் கடைசி மகள் கர்த்தருக்குள் வந்து விட்டதாக அறிந்தேன். அப்பெண் பத்தாவதானவள் தானே. ஒன்பது. புதிய ஊழியத்தின் கீழாக அவரிடம், கர்த்தர் அவரது குடும்பம் இரட்சிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். நான் அங்கே நின்றுகொண்டு அக் குடும்பத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் என்ன சொல்லப் போகிறேன் என்பது உனக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் கூறினார், ''உன் குடும்பத்தை நான் உனக்குத் தருகிறேன்'' என்று பாருங்கள்? அவ்வாறே, அவர்கள் ஒவ்வொரு வரும் வந்துவிட்டனர். கர்த்தர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பார்த்தீர்களா? பாருங்கள், அவருடைய வார்த்தைகள் பரிபூரணமாக இருக்கின்றன. அவைகள் ஒருபோதும் தவறுவ தில்லை. ஒரு தீர்க்கதரிசன பாகத்தை நாம் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்திற்கு படித்துக் கொண்டிருப்போம். அந்த சமயத்தில் நாம் தெய்வீக சுகமளித்தல் ஆராதனையை நடத்த விரும்பவில்லை. 5இன்றிரவில் நாம் இந்த பெரிய மூன்றாவது சபைக் காலத்தைப் பற்றி படிக்கையில், அதைப் பற்றி வரலாற்றுக் அதைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகளை எடுத்து பேசப்போகிறேன். அதை நீங்கள் ரசிக் கிறீர்களா? நான் இப்பொழுது நிறைந்து இருக்கிறேன். நான் உண்மையிலேயே எண்ணுவது என்னவெனில், கர்த்தர் எவ்வள வாய் நம்மை ஆசீர்வதித்து, இந்தக் காரியங்களையெல்லாம் நமக்கு அளித்துள்ளாரே, அது எத்தனை அற்புதமாயுள்ளது என்று எதிர்வரும் காலத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைப் பற்றி முன் கூட்டியே நாம் அறியும்படி செய்த அவரை நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் போற்றுகிறோம். அவர் துவக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் அறிந்திருக்கிறார். அதைப்பற்றி நாம் மகிழ்ச்சி யடைகிறோம். ஆகவே, நம்மை அவர் ஆசீர்வதிப்பதற்காக, கர்த்தரை நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். 6நேற்றிரவில், ஆராதனைக்குப் பிறகு, பரிசுத்த ஆவியானவர் நமக்கு மூன்று செய்திகளையும், மூன்று ஆத்துமாக்களையும் கொடுத்தார். சரியாக அவ்வாறே உள்ளது. ஆவியானவர் பேசிக் கொண்டிருந்த போது, பிறகு கடைசி வியாக்கியானத்தில் திரும்பவும் வந்து, 'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்'' என்று வார்த்தைகளை திரும்பவும் உரைத்தார். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்'' என்ற வார்த்தைகளை திரும்பவும் உரைத்தார். ஆவியானவர் சபையிலுள்ள வரங்களின் மூலம் அதையே கூறுகிறார். ஓ சபையானது அதை பயபக்தியுடன் இப்பொழுது கைக்கொள்ளட்டும். அதை பயபக்தியோடு காத்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்! சாத்தான் உங்கள் பக்கமாக வந்து, உங்களை அதினுடைய தீவிர மான ஓரங்களுக்கு விரட்டிவிடுவான். எப்பொழுதும் அது பரிசுத்த ஆவியானவர்தானா என்பதை ஒவ்வொரு தடவையிலும் நிச்சயப் படுத்திக் கொள்ளுங்கள். பேசுவது பரிசுத்த ஆவியாக இருக்கிற தென்றால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அந்தக் காரியத்தைப் பற்றி நேரடியாகவே பேசுவார். அது சபையின் பக்தி விருத்திக்காக கொடுக்கப்பட் டுள்ளது. பாருங்கள்? இவைகளில் நீங்கள் பயபக்தியோடு இருப்பீர்களானால், தேவன் இன்னும் கூடுதலாக உங்களுக்குக் கொடுப்பார். பாருங்கள், இன்னும் கூடுதலாக தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டே போங்கள். 7இன்று சிலர் தொலை பேசியில் அழைத்த, சுகமளிக்கும் ஆராதனைகள் இனி எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டார்கள். இந்த ஆராதனைகளுக்குப் பிறகு அவை முடிந்த உடனேயே, அடுத்த ஞாயிறு மாலையில், நான் சில நாட்களுக்கு வெளியே சென்று தொண்டைக்காக கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோம். அது என்ன தேதியில் வருகிறது என்று தெரிய வில்லை... 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில். அது சரிதானே, சகோதரன் நெவில் அவர்களே? (சகோதரன் நெவில் அவர்கள் “ஆம் ஐயா'' என்கிறார் - ஆசி). 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலையில், வியாதியஸ்தருக்காக ஜெபித்தல் இருக்கும். இங்கேயுள்ள நமது மேய்ப்பன் அவர்களைப் பற்றி நான் அதிகம் கூறுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இல்லை. ஆனால் நீங்கள் யாவரும் அவரைச் சந்திக்கும்படி விரும்புகிறேன். நிச்சயமாகவே அவர் கிறிஸ்துவுக்குள்ளாக மிகவும் உண்மையான சகோதரராவார். மெதோடிஸ்டு பின்னணியில் பரிசுத்தத்தை கடைப்பிடிக்கிற குடும்பத்தில் வளர்த்து ஆளாக்கப்பட்டவர். அவ்விதமான ஒரு சகோதரரை நாம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இங்கிருக்கிற நாம் யாவருமே ஆர்மன் நெவில் அவர்களை நன்கறி வோம். அவருடைய வாழ்க்கை குற்றஞ்சாட்டப்படாததாக இருக் கிறது. நான் இவ்வாறு அவரைக் குறித்து கூறுவது அவருக்கு பிடிக்காது. ஆனால், அவர் உலகைவிட்டு போனபிறகு, அவருக்கு ஒரு மலர் வளையத்தை சாற்றுகிறதைவிட, அவர் இங்கு இருக் கையில் அவருக்கு ஒரு ரோஜா மொட்டையாவது அளிப்பதையே நான் விரும்புவேன். பாருங்கள்? இதுவே அதற்குரிய வேளையா யிருக்கிறது. 8ஓரிரவில் நான் சபைக்கட்டிடத்தைவிட்டு புறப்பட்டு வெளியே செல்லுகையில், ஒருவர், “ஓ சகோ.பிரன்ஹாம் அவர் களே, நான் நிச்சயமாக அப்பிரசங்கத்தை மெச்சுகிறேன்” என்றார். நான் அதற்கு, “தங்களுக்கு நன்றி'' என்று பதிலளித்தேன். அப்பொழுது வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு ஊழி யக்காரர் (இதே கூடாரத்தில் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்தது) 'நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. எவரும் என்னிடம் அவிவிதமாகக் கூறுவதை நான் விரும்புவதில்லை. எல்லா மகிமையுமே தேவனுக்குப் போவதையே நான் விரும்புகிறேன்'' என்றார். நல்லது, அது அவருக்குத் தான் போகிறது'' என்றேன் நான். மேலும் நான், ''அதை நான் விரும்புகிறேன், நான் உண்மை யிலேயே அதை விரும்புகிறேன். நான் உண்மையைக் கூறியாக வேண்டும்'' என்றேன். “நல்லது, மக்கள் என்னைக் குறித்து அவ்வாறு கூறுவதை நான் விரும்பவில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக'' என்றார் அவர். “இந்த விஷயத்தில் எனக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. நான் இந்த விஷயத்தில் நேர்மையோடு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அவ்வாறு இல்லை'' என்று கூறினேன். எவரும் அதை விரும்புவர்... ஒரு சிறு குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டால், அதை நீங்கள் மெச்சினால், அப்பொழுது அது நன்றாக செயல்படும். பாருங்கள்? கொஞ்சம் மெச்ச வேண்டும். பாருங்கள்? தேவனும் எப்பொழுதும், தன் பிள்ளை சரியானதைச் செய்யும்பொழுது, அதை அவர்களிடம் சொல்லவே விரும்புகிறார். தன் பிள்ளை தவறிழைக்கும் போது தேவன் அதைச் சுட்டிக் காட்டுகையில், அவர்கள் சரியானதைச் செய்யும் பொழுது, ஏன் அதை அவர்களுக்குச் சொல்லக் கூடாது? பாருங்கள் 9ஆகவே, நிச்சயமாகவே, நான் இங்கிருக்கிற இந்தக் கூடாரத் திலுள்ள மந்தையின் மேல் சகோதரன் நெவில் அவர்கள் மேய்ப் பராக இருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். அவர் மெதோடிஸ்டு பின்னணியிலிருந்து வந்தவர். தவறான இடத்தில் புசிக்க விரும்பின பொழுது, பரிசுத்த ஆவியினாலே அதைக் கண்டு பிடித்தார். இப்பொழுது இவ்வரங்களைப் பெற்று இயங்குகிறார். எவ்வளவு ஸ்பஷ்டமாக பாஷைகளை அவர் பேச பரிசுத்த ஆவியானவர் அவரை உபயோகப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள். அப்பொழுது அவர் தன் சொந்த சிந்தையை உபயோகிப்பதேயில்லை. அதேவிதமான லயத்தோடு வியாக்கி யானம் பண்ணுதல், பிழையின்றி, சரியான ஏற்ற இறக்கத்தோடு வருவதை கவனியுங்கள். இந்த எளிய சகோதரர் ஜூனியர் ஜாக்சன் அவர்கள், ஜூனியர் ஜாக்சன் அவர்கள், ஜூனி உங்களை நான் புகழாமல் அமைதியாயிருப்பேன். ஜூனி ஜாக்சன் அவர்களுக்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். அச்சகோதரர் நிச்சயமாகவே கர்த்தரிடத்திலிருந்து ஒரு பெரிய வரத்தைப் பெற்றிருக்கிறார். 10எப்பொழுதும் தாழ்மையாகவே இருங்கள். சபையில் ஒவ்வொருவருக்குமே செய்ய வேண்டிய பணி ஏதாவது இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அப்பணியை வேறு ஏதாவது ஒன்றிற் காக தள்ளி வைத்து விடாதீர்கள். உங்களுக்கு இருக்கும் ஊழியம் சபையின் ஏனையோருக்கிருக்கிற ஊழியத்தோடு சரியாக இணைந்து செல்லட்டும். தேவனுக்காகவே அனைத்து காரியங்களும். எல்லோருமே அந்நிய பாஷைகளில் பேசுகிறார்களா? எல்லோருமே வியாக்கியானம் செய்கிறார்களா? ஏதாகிலும் நன்மையானதையே செய்ய முயலுங்கள். எப்பொழுதும் நல்லவர்களாகவே இருங்கள். பொறாமைப்படா திருங்கள், உட்பகை சொள்ளாதிருங்கள், எந்த வித கசப்புக்கும் இடங்கொடாதிருங்கள், ஒருவர் உங்களைக் குறித்து எவ்வளவு கெட்டதாக பேசினாலும் சரி, அவர் எவ்வளவு கெட்டவராயிருந் தாலும் சரி, அவருக்கெதிராக நீங்கள் ஒரு போதும் உங்கள் உள் ளத்தில் தீமையாக எண்ணாதீர்கள். ஏனெனில், அவ்வாறு நீங்கள் எண்ணினால் பிசாசு உள்ளே புகுந்து ஏதாவது வேலை செய்து விடுவான். தெய்வீக அன்பினாலும் அறிக்கையினாலும் அதை மூடிப்போங்கள். ஒப்புரவாகுதலை நாடி, உங்களுக்கு தீங்கு செய்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். ''உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் நீங்கள் விசேஷித்து செய்கிறது என்ன? ஆயக்காரர்களும் அப்படியே செய்கிறார்களே,'' என்று இயேசு கூறினார். பாவிகளும் மற்ற யாவருமே, தங்களிடம் நல்லபடியாக நடந்து கொள்கிறவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்ள முடியும். உங்களுக்கு நன்மையே செய்யாதவர்களுக்கு நீங்கள் நன்மை செய்ய வேண்டும், உங்களுக்கு எந்த உதவியுமே செய்யாதவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யுங்கள். உங்களைப் பற்றி தீதாகப் பேசும் ஒரு மனிதனுக்கு, ஒரு நல்ல வார்த்தையையே அவரைப் பற்றி பேசுங்கள். அதின் மூலமாக உங்கள் இருதயத்தி லிருந்து கசப்பையெல்லாம் அகற்றி விடுங்கள். அன்பிலே நிலைத்திருக்கிற வரையிலும், நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பு கூருவீர்கள். 11நீங்கள் சொல்லலாம், ''நல்லது, அவர்கள் அதைச் செய் தார்களே'' என்று. நாம் நியாயாதிபதி அல்ல. தேவனே நியாயாதி பதியாவார். நீங்கள் அந்த நபரை தள்ளிப் போட விரும்புவீர்களோ? நீங்கள் அப்படிச் செய்வீர்களா? அவர்கள் யாராயிருந் தாலும், நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பமாட்டீர்கள். நீங்கள் அவ்வாறு நடந்துகொள்ள விரும்பமாட்டீர்கள், எனவே அவர்களிடம் தயவு காட்டுங்கள். ''அன்பு திரளான பாவங்களை மூடும்'' ஆம், ஐயா. அன்பு, அந்த சிறந்த, கிறிஸ்தவ, தெய்வீக அன்பு. ஒரு மனிதன் உங்களிடம் வந்து, உங்களை 'உருளும் பரிசுத்தர்'' என்றும், இன்னும் பல்வேறுவிதமான பெயர்களை உங்களுக்கு சூட்டி அழைத்தால், கோபமாக நடந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு உங்களால் செய்ய முடியாவிடில், அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள். ஆனால் அந்த நபரிடம், ''சகோதரனே, ஒருவேளை நான் இதைப் புரிந்த கொண்ட வண்ண மாக நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது நான் உணருகிற வண்ணமாக நீங்களும் உணரு வீர்கள்'' என்று அவரிடம் மிகவும் இனிமையாக பேசும் நிலைக்கு வர வேண்டும். பாருங்கள்? அந்த அளவுக்கு உங்கள் இருதயத்தின் தன்மை இருக்க வேண்டும். இவ்வாறு செய்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். கிழக்கு மேற்கிலிருந்து எப்படி தூரமாயிருக்கிறதோ, அதுபோல் ஒருவேளை நாம் வேறுபட்டிருந் தாலும், அது எந்தவித வித்தியாசத்தையும் ஏற்படுத்திவிடுவதில்லை. 12நான் அன்றிரவில் என் சகோதரன் மெல்வின் என்பவனைப் பற்றி கூறினேன், அதைப்போல் இது உள்ளது. அவன் நல்ல கட்டுமஸ்தான ஆள், உயரமானவன், மஞ்சள்நிற தலைமுடியை உடையவன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உடன் பிறப்புக்கள் என்று கண்டு கொள்ளுகிறதற்கு ஏதுவாக அவன் தோற்றம் இருக்காது. நாங்கள் உருவத்தில் ஒத்திருக்க மாட்டோம். எங்களுக்குள் வேறுபட்ட நாட்டங்களும், விருப்பங்களும் உண்டு. இருந்த போதிலும், அவனுடைய தாயார் எனக்கும் தாயார் தான். அவனுடைய தந்தையார் எனக்கும் தந்தைதான், பாருங்கள்? ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் நாங்களிருவரும். நாங்கள் வித்தியாசமானவர்களாக இருக்கிறோம். மெல்வின் கிறிஸ்தவனல்ல. அவன் பேஸ்பால் விளையாடவும், குதிரை பந்தயத்தையும் விரும்புகிறவன். அவனுக்கு சாக்லேட் பை என்றால் ரொம்ப பிடிக்கும். நான் நிச்சயமாக அவனிலிருந்து வேறுபட்டவன். எனக்கு மீன்பிடித்தல், மற்றும் வேட்டை ஆடுதல் முதலியவை விருப்பமானவை. அவன் நான் விரும்புகிறவை களையே திரும்பிக்கூட பார்க்க மாட்டான். அவனுக்கு விருப்பமான வைகளில் நான் ஈடுபடமாட்டேன். நான் “செர்ரி பை' -ஐ விரும்புகிறேன். அவனோ ”சாக்லேட் பை“ - ஐ விரும்புகிறான். 13நான் ஜாடையாக இதைக் கூறுவதாக எண்ண வேண்டாம், எங்கோ ஓரிடத்தில், ஒரு கூட்டத்தில் நான், சாக்லேட் பை பிடிக் கும் என்று கூறிவிட்டேன். அடுத்த நாள் இரவில் சுமார் ஐந்து சாக்லெட் பை - வந்துவிட்டன, அல்லது செர்ரி பை நான்கைந்து வந்துவிட்டது. சகோதரிகள் அவைகளை தயார் செய்து, எனக்குக் கொண்டு வந்து விட்டனர். என்னே! அன்றிரவில் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஆனால் நான் அந்த விதமான அர்த்தத்தில் சொல்லவில்லை. பாருங்கள்? எனவே, உங்களுக்கு வித்தியாசத்தைக் காண்பிக்கவே இதை சொல்லுகிறேன். ஆனால் அவன் எப்படியிருந்தாலும், என்னு டைய சகோதரனாக இருக்கிறபடியினாலே, நான் அவனை நேசிக் கிறேன். அவன் கிறிஸ்தவனாக இல்லை, ஏனெனில் காரியங்களை வேறொரு வெளிச்சத்தில் பார்க்கிறான். நானோ கிறிஸ்துவின் ஒளியிலே காரியங்களைப் பார்க்கிறேன். இருந்தபோதிலும் கூட அவன் என்னுடைய சகோதரன் அல்ல என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் நாங்கள் ஒரே குடும்பத்தில் உடன் பிறந்த சகோதரர்கள். 14நேற்று மாலை, நான் கடைசியாக ஒரு மேற்கோளைக் கொடுத்தேன். இந்தக் கூட்டத்தில் மர்மமான இரகசியமான, அநேகரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரியங்கள் கிடைக்கும் என்று கெண்டக்கியில் வந்த முதல் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு உள்ளவைகளை நீங்கள் அறிவீர்கள். ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? அது ஒலி நாடாவில் உள்ளது. நேற்றிரவில் அவைகளில் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. எனவே, ஒரு விநாடி நேரத்திற்கு அப்படியே நின்றுவிட்டது போல் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் அதைக் கிரகித்துக் கொண்டீர்கள் என்று நிச்சயமாயிருக்கிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தாமே அந்த விஷயத்தைக் கொண்டு வந்தார். ''வேதத்தில் நித்தியமான நரகம் என்பது இல்லை“ என்பது தான் அது. நித்தியமான நரகம் என்பது ஒன்று கிடையாது. நித்தியமாக நீங்கள் நரகத்தில் எரிந்து கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது, அங்கே நீங்கள் முற்றிலும் ஒழிந்து போகாமல் இன்னும் உயிருடன் நித்தியமாக எரிந்து கொண்டேயிருப்பதற்காக, நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். ஒரேயொரு நித்திய ஜீவன் தான் உண்டு, அதுதான் தேவனுடையது. பாருங்கள்? ஆகவே, நித்தியமான நரகத்தைக் குறித்து வேதம் போதிக்கவேயில்லை. ஆனால் வேதமோ சதாகாலங்களிலும் எரியும் நரகம்'' பற்றித்தான் போதிக்கிறது. சதாகாலமும் என்றால், அது ஒருவேளை 10,000 மில்லியன் ஆண்டுகளுக்கு இருக்கலாம், எனக்குத் தெரியாது. ஆனால் அது காலவரையறைக்குட்பட்டது. அது முற்றிலும் இல் லாமல் ஒழிந்து போகத்தான் வேண்டும். நான் இந்த செய்தியை இங்கே தான் முதலில் கொண்டு வர வேண்டியது உள்ளது. எனவே மற்ற சபைகளில் இதைப் பற்றி நான் உரைக்கவில்லை. இன்னும் பல விஷயங்கள் நான் உரைப் பதற்காக என்று உள்ளன, அவைகளை நாம் ஒவ்வொரு இரவிலும் பார்ப்போம். 15ஆனால் இப்பொழுது, இன்றிரவிலிருந்து, உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ள ஆரம்பியுங்கள். பாருங்கள், பரிசுத்த ஆவியானவரில் உங்கள் சிந்தை தோய்ந்ததாக இருக்கட்டும். சத்தியத்தை நீங்கள் கேட்டு, அதை நீங்கள் ஒத்துக் கொள்ள முடியாமற்போனால், நீங்கள் போய், ''பாவம் சகோ.பிரன்ஹாம். நிச்சயமாக அவருக்கு தெரியவில்லை, நான் அவருக்காக ஜெபிக்கப் போகிறேன்'' என்று சொல்லுங்கள். நீங்கள் அதைச் செய்தால், அப்பொழுது எது சத்தியம் என்பதை கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்துவார். நீங்கள் எனக்காக அனுதாபப்படுங்கள், என்னை புறம்பே தள்ளி விடாதீர்கள். அதுவும் ஒருவேளை உண்மையாக இருக்கக் கூடும். ஆனால், ஓ, இந்தவிதமாக நான் சிந்திப்பதில் மிகவும் நல்ல அருமையான வேளையை உடைய வனாக நான் இருக்கிறேன். ஆகவே நான் இவ்வாறு கூறுவதன் காரணம் என்னவெனில், இரு துருவமாக இருப்பவர்களை சௌஜன்யமாக இருக்க வைப்பதற்காகத்தான். நான் ஒரு வேளை தவறாக இருக்கக் கூடும். ஏதாவது ஒன்றில் தொடர்பற்ற பாகங்கள் இருக்கக் கூடும். அதை நான் முற்றிலுமே அறிந்திராமல் இருக்கக் கூடும். ஒருவேளை நீங்கள் அதை அறிந் திருக்கக் கூடும். கர்த்தர் அதை எனக்குக் காண்பிக்கும்படி எனக்காக ஜெபியுங்கள். 16இப்பொழுது, எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக் கொண்டேயிருங்கள்; பிசாசானவன் ஏதாவது கசப்பை எங்காவது காண்பிக்கும்படி அவனுக்கு இடங்கொடுத்து விடாதீர்கள். பாருங்கள்? இந்த வேளையில் உங்கள் ஆத்து மாக்களை சுத்தமாயிருக்கும்படி காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இவ்வுலக வரலாற்றின் இறுதிக்கட்டமான வேளைகளில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். பாருங்கள்? எந்தவித சந்தேகத் திற்கும் இடமின்றி, நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். நண்பர்களே. நாம் இந்த சபைக் காலங்களைப் பற்றி படித்துக் கொண்டு வருகையில், ஒரு வேளை இன்றிரவில், அவைகளில் அநேக காரியங்களை, வெகு விரைவில் பார்க்கப் போகிறோம். ஏறத்தாழ, நாம் கடந்த காலத்திற்குள் திரும்பிச் சென்று, இவற்றின் பின்னணியை நாம் பெற்றுக் கொள்வோம். அதை வைத்துக் கொண்டு இதை முடிவுக்குக் கொண்டு வரலாம். இன்றிரவில் சில உண்மையான ஆவிக்குரிய காரியங்களை நாம் வெளிப்படுத்து வோம். இக்காரியத்தில் உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் வேதவாக்கியங்களை கவனியுங்கள். அது வேத வாக்கியத்தில் இருக்க வேண்டும். வேத வாக்கியங்களின் மூல மாக இருத்தல் வேண்டும். பாருங்கள்? “நான் உயர்நிலைப் பள்ளி யில் கல்வி கற்றேன், நான் வேதக் கல்லூரியில் கற்றேன், நான் கல்லூரியில் கற்றேன்'' என்றெல்லாம் கூறிக்கொண்டு, வேத வாக் கியத்தின் வெறும் அறிவை மட்டும் பெற்றிருந்தால் போதாது. அதினால் எந்தவிதப் பயனும் இல்லை. பரிசேயர் மற்றும் வேத பாரகர் அனைவரும் அதையே செய்தார்கள். அதின் மூலம் அவர்கள் இயேசுவைப் பற்றி அறிகிற அறிவில் ஒரு மில்லியன் மைல்கள் தூரமாய் இருந்தார்கள். பாருங்கள்? 17வேதவாக்கியங்கள், வேதவாக்கியங்களைப் பற்றிய வெளிப் பாடு ''ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டு, கற்றுக் கொள்ள விரும்பும் பாலகருக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.'' எனவே, நீங்களும் நானும், நாம் யாவரும் பாலகராக ஆகி, நம்முடைய இருதயங்களை காலியாக வைத்து, அவரிடம், ''கர்த்தாவே, எங்களுக்குச் சொல்லும், நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்'' என்று சொல்லுங்கள். அதன்பிறகு, ஆவிக்குரிய கண்ணோட்டத்தை பிடித்துக் கொள்ளுங்கள். இதை நினைவில் கொள்ளுங்கள். இன்றிரவிலிருந்து கூறப்படும் வார்த்தைகளின் பேரில் உள்ள ஆவிக்குரிய கண்ணோட்டத்தை பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நாம் மிகவும் பெரிய இரகசியமான சபைக் காலத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம். 18அவ்வளவு தான் என்று எண்ணுகிறேன். நாளை இரவு அடுத்த சபைக் காலத்தைப் பற்றி பார்ப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாளைக்கு நமக்கு இவைகளைப் பற்றி பார்க்க ஏராளமான நேரம் இருக்கிறது என்று நான் நிச்சயமாக உள்ளேன். அதன்பிறகு நாளை இரவும் கூட. ஆனால், அநேகர் வேலை செய்து கொண்டு இருப்பார்கள் என்பதைப் பாருங்கள். எனவே நான், இச் செய்தியின் மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியமானவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள நான் முயலுவேன். மேலும், இங்கே பேசப்பட்டவைகளில் முக்கியமான அம்சங்களை தொட்டுக் காண்பித்து விடுவேன். நீங்கள் அவைகளை குறிப்பெடுத்துக் கொண்டு அவைகளை வீட்டில் போய் ஆராயுங்கள். நான் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள். அவருடைய விசுவாசிக்கும் பிள்ளைகளாகிய நம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. 19நாம் இப்பொழுது துவக்குவதற்கு முன்பாக, நீங்கள் எழுந்து நிற்பது உங்களுக்கு கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏன் எழும்பி நின்று ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா? இயேசு சொன்னார்: “நீங்கள் நின்று ஜெபிக்கையில், 'பரமண்டலங்களி லிருக்கிற எங்கள் பிதாவே... எங்களுக்கு மன்னியும்' என்று ஜெபியுங்கள்'' என்று பார்த்தீர்களா? கிதியோன் ஒரு தடவை, தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவர்களான ஒரு கூட்டத்திற்கும், அப்படிக் குனியாமல் நின்று கொண்டு தண்ணீரைக் குடிக்கிறதான ஒரு கூட்டத்திற்கும் இடையே தனக்கென ஒரு சேனையைத் தெரிந்து கொண்டான். பார்த்தீர்களா? விக்கிரகங்களுக்கு முன்பாக முகங்குப்புற வீழ்ந்து வணங்கின வர்கள் குனிந்து தண்ணீரை எடுத்துக் குடித்தார்கள். அவர்கள் தனக்கு சேனையாக இருப்பதற்கு உரியவர்கள் அல்ல என்று கிதியோன் அறிந்து கொண்டான். மற்றொரு கூட்டத்தினர், நிமிர்ந்து நின்று, எப்பொழுதும் தங்கள் கண்களால் ஜாக்கிரதையாக கவனித்துக் கொண்டிருக்கிறவர்களையே தனக்கு சைன்யமாக இருக்கத் தெரிந்து கொண்டான். அவ்விதமாகத்தான், நாமும் நின்று கொண்டு ஜெபிக்கிறோம். முழங்கால்படியிட்டு ஜெபிப் பதையும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நின்று கொண்டு ஜெபிப்பதில் நமக்கு ஏதோ உள்ளார்ந்த அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நாம் இப்பொழுது தலைகளை வணங்கி, இருதயங்களிலும் வணங்கி ஜெபிப்போமாக. 20கிருபையுள்ள பரம பிதாவே, நாங்கள் இப்பொழுது பய பக்தியுடன் உமது நீதியின் சிங்காசனத்தை அணுகுகிறோம். நாங்கள் நீதியை அருளும்படி கேட்டுக் கொண்டு உம்மிடம் வரவில்லை. ஏனெனில், அப்படிக் கேட்டால், நாங்கள் யாவரும் பட்சிக்கப் பட்டு விடுவோம். ஆனால் நாங்களோ, 'இரக்கம் தாரும், ஓ கர்த்தாவே'' என்று கெஞ்சிக் கொண்டு உம்மிடம் வருகிறோம். இன்றிரவில் எங்கள் மேல் உம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றியருளும். ஏனெனில், நாங்கள் தகுதியுள்ளவர்களா யிருக்கிறோம் என்று அல்ல, நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்தும், அதை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதினிமித்த மாகவே. இவ்விண்ணப்பத்தை எங்களுடைய நாமத்தினாலே கொண்டு வரவில்லை (ஏனெனில் எங்களுடைய நாமம் அதற்குப் போதுமானது அல்ல). எங்களிடம் நியாயம் இல்லை, எங்களிடம் எதுவுமேயில்லை. எங்களுடைய அதிகபட்ச நீதியெல்லாம் உமது பார்வையில் அழுக்கான கந்தையாவே இருக்கும். எனவே நாங்கள் பணிவுடன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே வருகிறோம்; அவரை எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து, அவருடைய உடன்படிக்கையின் இரத்தத்தை எங்கள் இருதயங்களில் பூசிக் கொண்டவர்களாய், ''தேவனே, துன்பவேளையில் இரக்கத் திற்காக கெஞ்சும் பாவிகளாகிய எங்களிடம் இரக்கமாயிரும்'' என்று கேட்கிறோம். ஒரு நாளில் கடைசி பிரசங்கமானது பிரசங்கிக்கப் பட்டிருக்கும், அந்த நாள் எப்பொழுது என்று எங்களுக்குத் தெரியாது. கடைசி நேரத்தில், ஆகாயத்தில் ஒரு ஆரவாரம் உண்டாகும், பிரசங்க பீடத்தில் வேதப்புத்தகமானது மூடப்பட் டிருக்கும், கரங்கள் குவிக்கப்பட்டிருக்கும், எக்காளமானது தொனிக்கும், சூரியன் அஸ்தமித்து போகும். ஓ தேவனே! அப்பொழுது என்னை, நித்திய கன்மலையே, அந்த வேளையில் மறைத்துக் கொள்ளும். 21இப்பொழுது உமது மூலமாய் அல்லாமல் வேறு எவ் விதத்திலும் நாங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றதை நாங்கள் காண்கிறோம். வேதம் நிறைவேறுகிறதை நாங்கள் பார்க்கிறோம். இஸ்ரவேல் விழித்துக் கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம். சபைக்கு வந்துள்ள செய்தியை பார்க்கிறோம். மகத்தான காரியங்கள் வெளிப்படுத்தப் படுகிறதும், ஏழு முத்திரைகள் திறக்கப்படுகிறதுமான வேளையில் நேரமானது ஏறத்தாழ முடிவடைந்து இருக்கிறது. தேவனே, தேவனே, ஓ தேவனே, எங்களிடம் இரக்கமா யிரும், இரக்கத்திற்காக நாங்கள் கெஞ்சுகிறோம். மேலும் உம் முடைய ஊழியக்காரன் என்னும் முறையில், இன்றிரவில் தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் இரக்கம் வேண்டி கெஞ்சுகிறேன். எங்களுக்குள், தங்கள் ஆத்துமாவில் பாவத்தையுடைய ஒரு நபர் கூட இங்கு இருக்க வேண்டும், தேவனே, இப்பொழுதே அவ்வாத்துமா கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தாலே சுத்திகரிக்கப்பட்டு, அதினால், நாங்கள் யாவரும் ஆகாயத்திற்கு அப்பால் தொலைவில் உள்ள அந்த பரம சந்தோஷ வாசஸ்தலத்தில் சந்திக்கட்டும். பிதாவே, இன்றிரவில், இவ்வேதவாக்கியத்தை நான் அணுகுகையில், ஓ நான் பாத்திரவனாக இருக்கவில்லை. எங்களில் எவரும் பாத்திரவான்களல்ல, தேவனே. நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்பதை அறிக்கையிடுகிறேன், பிதாவே. ஆனால் நாங்கள் பயபக்தியுடன், பரிசுத்த ஆவியானவர் தாமே வெளிப் படுத்திக் கொடுக்க வேண்டி, அவரையே சார்ந்து கொள்ளுகிறோம். நாங்கள் எங்களுக்கு நீர் அளித்திருக்கும் மூளை அறிவின்படி, சரித்திரத்தை திறந்து பார்க்கையில், பரிசுத்த ஆவியானவர் எங்கள் இருதயங்களில் ஆவிக்குரிய கண்ணோட்டத்தை அளிப்பாராக. பிதாவே, இதை அருளும். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் உமக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்.) 22வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் இரண்டாம் அதிகாரத்தில் மூன்றாம் சபைக்காலத்தை... (ஒரு சகோதரி அந்நிய பாஷைகளில் பேசுகிறார் - ஆசி). என்னை மன்னிக்கவும். பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம் முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியி லேயும் செய்யப்படுவதாக. நீர் எங்களோடிருந்து, எங்களை ஆசீர் வதித்து, மக்கள் மத்தியில் உள்ள இந்த துன்பமான வேளையில், நாங்கள் ஞானமுள்ளவர்களாகவும், சிறந்த சிற்பா சாரிகளாகவும் இருக்க எங்களுக்கு உதவி செய்யும், பிதாவே. குழப்பமும் மற்றும் இன்னபிற காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், கர்த்தாவே, உம்முடைய தலை சிறந்த ஊழியக்காரர்களாக இருக்க, கிறிஸ்துவின் நாமத்தினால், எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். நீங்கள் அறிந்து கொள்ளத்தக்கதாகத் தான் நான் அதை முதலிலேயே கூறிவிட்டேன். வார்த்தைக்கு உரிய வியாக்கியானம் வரவில்லை என்பதைக் கவனித்தீர்களா? நம்முடைய சகோதரி சந்தேகத்துக்கிடமின்றி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். வார்த்தையானது வந்ததற்குப் பிறகு, அவர்கள் செய்தியைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அச்செயல், அதற்குரிய ஒழுங்கை விட்டு விலகிய செயலாக இருக்கிறது. சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும் சரி, உங்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கையில், உங்களால் அடக்கி வைத்திருக்க இயலாது என்பதை நான் அறிவேன், அது சரிதான், அது எப்படியிருக்கிற தென்றால்... அல்லது, நீங்கள் ஒன்றைக் கூறிக் கொண்டிருக்கையில் இன்னொருவர்... பாருங்கள் அது சரிதான். ஆனால் ஒரு வேளை, நாங்கள் ஆரம்பிக்கிறதற்கு முன்பாகவே, நீங்கள் அதைப் பற்றி உணர்ந்து கொண்டிருக்கக் கூடும். அதனால் தான், ஆவியானவர் கிரியை செய்யும்போது, அது திரும்ப வருகிறது, தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கி யிருக்கிறதே. அது நீங்கள் தான். 23மறுபடியும், உங்களை அவர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கக் கூடும், பாருங்கள், (அவர் அவ்வாறு செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.) ஆராதனையானது முடிந்த பிறகு, பாஷை பேசியதன் வியாக்கியானம் வருவதற்காக அப்பொழுது பார்த் திருங்கள். ஏனெனில், அப்பொழுது அது, சரியாக, அதற்கான ஒழுங்கின்படி இருக்க வேண்டும். ஆனால் நாம் இப்பொழுது வார்த்தையை அணுகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இங்கே பாருங்கள். எனவே, அது உண்மையிலேயே தேவனிடத்திலிருந்து வந்ததாகத் தான் இருந்தது. அதை நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசித்து உணருகிறேன். பின்னால் வரவேண்டியது முன் பாகவே வந்துவிட்டது. ஆனால் பரிசுத்தாவியானவர்... அதற்குரிய வேளை அதுவல்ல. சபைக்கென ஒரு செய்தியை தேவன் சகோ தரிக்குக் கொடுத்தால், ஆனால் இப்பொழுது அவர் தனது செய் தியை கொடுக்க கிரியை செய்து கொண்டிருக்கிற வேளையாக வல்ல வோ இருக்கிறது. அவர் தன்னைத்தானே குழப்பிக்கொள்ளமாட் டார் என்பதைப் பாருங்கள். அவர் எல்லாவற்றையும் ஒரு ஒழுங் குக்குள் வைக்கிறார். அதுவே சரி என்பதை நீங்கள் ஒவ்வொரு வரும் புரிந்து கொள்கிறீர்கள் என்பதை நிச்சயமாக அறிகிறேன். 24வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் இரண்டாம் அதிகாரத்தில், பெர்கமு சபையினை நாம் இன்றிரவில் ஆரம்பிக் கிறோம். 12ம் வசனத்தைப் பார்ப்போம். நேற்றிரவில் 11ம் வசனத்தோடு விட்டிருந்தோம். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ள வன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.” வெளி.2:11. நாம் முதலாவது சபையின் காலத்தில் தான் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமானது ஆரம்பித்தது என்று பார்த்தோம். தேவன் தன்னையே வெளிப்படுத்தினார்... இயேசு தன்னை சர்வ வல்லமையுள்ள தேவனாக வெளிப்படுத்தினார். தேவனுடைய எந்தவொரு பாகமாகவோ, துண்டாகவோ தன்னை வெளிப்படுத்த வில்லை. அவரே தேவனாயிருக்கிறார், அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை வெளிப்படுத்தினார். 25கடந்த இரவில் நாம் பார்த்த அச் சபைக்காலத்தைப் பற்றிய செய்தியில், அவர் வாசலில் நின்று, சபைக்கு இக்காரியங்களை எழுதினார் என்று பார்த்தோம். அவர்களிருக்கும் வறுமையைப் பற்றி அவர் அவர்களுக்கு சொன்னார். ஆனால் அவர்கள், தேவன் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் போதகக்காரர்கள் மத்தியில் இருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார். கடந்த இரவில், அவர்கள் அணிந்து கொள்ள இரத்த சாட்சிகளின் கிரீடத்தை பெறுவதைப் பற்றிப் பார்த்தோம். அவர்கள் மரணமடையப் போகிறதைக் குறித்து அஞ்ச வேண்டாம் என்றும், தான் அவர்களுடன் இருப்பதாகவும் உரைத்தார். முடிவில் அவர், ''ஜெயங் கொள்ளுகிறவன்!'' என்றார். “ஜெயங் கொள்ளுகிறவன் எவனோ அவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை'' என்று கூறினார். 26ஒரு மரணம் இருக்கிறதென்று நான் அறிந்திருந்தால், அப்பொழுது எங்கோ இன்னொரு மரணமும் இருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நாம் அடைகிற ஒரு மரணம் இப்புவியில் மாம்சத்தில் அடைவதாகும். இரண்டாவது மரணம், ஆவியில் ஆத்துமாவில் அடைகிற மரணமாகும். “பாவஞ்செய்கிற ஆத்துமா சாகவே சாகும்''. மரிப்பது என்றால், முழுவதுமாக எல்லாவற்றி லிருந்துமே அகன்று ஒன்றுமில்லாமற்போய், ஒழிந்து போகுதல் என்பதாகும். மரணம் என்றால் முழுவதும் நீங்கிப் போதல், முழுவதும் அகற்றப்படுதல், மறைந்து போதல், நமக்குப் பிரிய மானவர்கள் மரிக்கும் பொழுது, அவர்கள் நாம் அறிந் திருக்கிற மட்டில், நிலைத்திருக்காமற் போகிறார்கள். அதை நாம் மரணம் என்றழைக்கிறோம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் மரிப்பதில்லை. கிறிஸ்தவன் மரிக் கிறான் என்பதற்கான ஒரு வேதவாக்கியமும் இல்லை; ஏனெனில் அவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான். முடிவாக அவனது ஆத்துமா ஒரு நாளில் மரிக்கும். ஆனால் ஒரு கிறிஸ்தவன் மரிக்கையில், அவன் தானே திரும்ப வருவதற்காக இயேசுவோடு காத்துக் கொண்டிருக்கிறான். ஓ, இன்று இராத்திரியில் இத்தரிசனத் தின் இறுதியில் அதைப் பற்றி பார்ப்பதற்கு எனக்கு நேரம் இருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பற்றி பார்ப்பதற்கு நாம் திரும்ப வருவோம். அதில் நீங்கள், எவ்வாறு அந்த இரண்டாம் மரணத்தின் காரியமானது கொண்டு வரப்படுகிறது என்பதை காணலாம். இன்று இராத்திரியில் நாம் படிக்கப் போகும் இதே அதிகாரத்திலேயே அதே காரியமானது கொண்டு வரப்படுவதை காணலாம், அது மிகவும் அழகான முறையில் பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. 27இவ்விரவில், விரைவாக இக்கடிதத்தை நாம் படிக்கப் போகிறோம். ஏனெனில் என்னிடம் வரலாற்று ரீதியான சில தகவல்கள் உள்ளன, அவைகளை நாம் முதலில் காண விரும்பு கிறோம், உங்களை வெகு நேரம் இங்கே வைத்துக் கொள்ளாமல் இருக்க முயலுவோம். இந்த ஆராதனைகள் முடிவுற்ற பிறகு, எந்த நேரத்திலும், எவ்வாறு அவைகள் பிரயோகம் செய்யப்பட் டிருக்கிறது என்பதை நீங்கள் காணும்படியாக, நான் உங்களுக்காக விரைவாக வாசிப்பேன். சகோ.மெர்ஸியர் அவர்களிடம் அவைகள் யாவும் உள்ளன. நான் அவைகளை அவரிடம் ஒப்படைத் திருக்கிறேன். அவர் அந்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருப்ப தினால், அதில் உங்களுக்கு தேவையானதை உங்களுக்கு அவர் கொடுக்க முடியும். அது சரியாக இருக்குமல்லவா, சகோ. மெர்ஸியர் அவர்களே? 28வெளிப்படுத்தின விசேஷம் 2ம் அதிகாரம் 12ம் வசனம் முதல். “பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்; இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடி கொண்டிருக்கிற இடத் திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்தியப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப் பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை, இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்ப வனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக்... (எபேசுவில் கிரியைகளாயிருந்து, இங்கே போதகமாக ஆகி விட்டது, நான் அன்று இரவில் எவ்வாறு அது அதனிடம் அணுகி வந்து விட்டது என்று கூறிக் கொண்டிருந்தேனே, ஞாபகம் இருக்கிறதா? கிரியைகளாக எபேசுவில் இருந்தது, இப்பொழுது போதகமாக ஆகிவிட்டது)... கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத் திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன் னிடத் தில் வந்து, என் வாயின் பட்டயத்தால்... (உண்மையான சபையோடு அல்ல)... அவர்களோடே யுத்தம் பண்ணு வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறை வான மன்னாவைப் புசிக்கக் கொடுத்த அவனுக்கு (அவனுக்கு!) வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி, வேறொருவனும் அறியக் கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.“ வெளி.2:12-17 தேவன் தாமே இதனுடன் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டித் தந்து, நமக்கு உதவி செய்வாராக. 29இந்த சபையின் பின்னணியைப் பார்ப்போம். இது மூன்றாம் சபைக்காலம் ஆகும். இது பெர்கமு என்றழைக்கப்படுகிறது. இச் சபைக்காலம், கி.பி.312 முதல் 606 முடிய நீடித்திருந்தது. இக்காலம் கள்ளப் போதகம், சாத்தானின் பொய், போப்பு மார்க்க ஆட்சியின் அஸ்திவாரமிடுதல், சபையும் அரசும் விவாகம் செய்து கொள்ளல் ஆகியவை இடம் பெற்ற காலமாகும். இச்சபையின் காலத்தில் அளிக்கப்படும் பலன்; மறைவான மன்னாவும், வெண்மையான குறிக்கல்லும் ஆகும். இந்த சபைக் காலத்திற்குரிய தூதன், நட்சத்திரம் யாரெனில், பரிசுத்த ஆவியானவர் எல்லா வகையிலும் அதைச் செய்வதற்காக என்னை அனுமதித்ததின் பேரில், நான் பரிசுத்த மார்ட்டின் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளேன். அக்காலத்தில் வாழ்ந்த ஏனைய பரிசுத்தவான்களைப் பற்றியும் நான் அச்சமயத்தில் படித்ததில், அவர்கள் யாவருக்குள்ளும் இவரை தெரிந்து கொள்ள, அதற்கான வெளிப்பாடு எனக்கு அளிக்கப்பட்டது. பரிசுத்த மார்ட்டின் ஒரு தேவ மனுஷனாயிருந்ததால் நான் அவரை தெரிந்து கொண்டேன். என்னுடைய கருத்துப்படி, அதே காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பேட்ரிக் என்ற அப்போஸ்தலரை விட, பரிசுத்த மார்ட்டின் பத்து மடங்கு சிறப்பான அளவுக்கு அப்போஸ்தலனாயிருந்தார். பரிசுத்த பேட்ரிக் பரிசுத்த மார்ட்டினுடைய மருமான் ஆவார். பரிசுத்த மார்ட்டினுடைய சகோதரி, பரிசுத்த பேட் ரிக்கின் தாயார் ஆவார். எனவே, பரிசுத்த மார்ட்டின் பரிசுத்த பேட்ரிக்கின் மாமன் ஆவார். 30பரிசுத்த மார்ட்டின் கி.பி.315 முதல் கி.பி.399 வரையில் வாழ்ந்து வந்தார். அந்நாட்களில் வாழ்ந்த வந்த ஏனைய பரிசுத்த வான்கள் எல்லாரிலும், பரிசுத்த மார்ட்டினை நான் தெரிந்து கொண்டதற்கான காரணம் என்னவெனில், அவர் உறுதியாக நிலை நின்று, விட்டுக் கொடுக்காமல் இருந்தது தான். தேவனுடைய ஆவியின் அசைவின் கீழ், நான் அதை... கத்தோலிக்க சபை மார்ட்டினை பரிசுத்தவானாக நியமிக்க வில்லை. அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மார்ட்டினை நாம் தேர்ந் தெடுப்பதற்கு அதுவே இன்னொரு காரணமாகும். ஹூம் ஹூம் நாம் பார்க்கிற இவர்கள் யாவரையும், அவர்கள் ஆவிக்குரிய ஊழியத்தை உடையவர்களாக இருந்ததினால், ஆதியில் இருந்த நிக்கொலாய் மத சபை நிராகரித்தது. நான் இங்கு வரைந்திருக்கிற சித்திரத்தின்படி, சபையானது நெருக்கப்பட்டது, நிக்கொலாய் மதஸ்தரின் போதகத்தை பெரும்பான்மையினர் கைக்கொள்வதாக இருந்தனர். உண்மையான சபையானது சிறுபான்மையினராகவே எப்பொழுதும் போல் இருந்தது. நாம் துவக்கத்திலிருந்தே குறிப்பிட்டு வந்தது போல, இயேசு கூறினார்: “பயப்படாதே, சிறு மந்தையே, உனக்கு இராஜ்யத்தைக் கொடுக்க உன் பிதாவானவர் பிரியமாயிருக்கிறார்'' என்று. எனவேதான், நான் இராஜ்யத்தை, ஆவிக்குரிய இராஜ்யம் உண்டு. அதைப் பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த இராஜ்யத்திற்கு ஒரு இராஜா இருக்கிறார். அவர் பரிசுத்த வான்களின் (பரிசுத்தமாக்கப்பட்டவர்களின்) இராஜாவாக இருக் கிறார். அவரே அவர்களை வழி நடத்துகிற இராஜாவாக இருக்கிறார். 31சபைக் காலங்களிலேயே மிகவும் மகத்தான அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்களுள் பரிசுத்த மார்ட்டினுடையதும் ஒன்று. பரிசுத்த பவுல் முதற்கொண்டு தொடர்ந்து வந்த காலங்களில் வாழ்ந்த மகத்தான ஆவிக்குரிய மனிதர்களுள் பரிசுத்த மார்ட்டினும் ஒருவர் ஆவார். அவர்... அவருடைய ஜீவியத்தில் நடந்த முதலாம் அற்புதங்களில் ஒன்று என்னவெனில்... அவர் ஒரு இராணுவ வீரராக இருந்தார் என்று நம்புகிறேன். ஒரு நாள் அவர் நடந்து வந்து கொண்டிருக்கையில், சாலையில் ஒரு மனிதன் குளிரினால் நடுங்கிக் கொண்டு படுத்துக்கிடந்தான். நல்ல சமாரியன் உவமையில் ஆசாரியனும், லேவியர்களும் காயமடைந்தவனைப் பார்த்துவிட்டு, ஒதுங்கிச் சென்றது போல், இந்த மனிதனைப் பார்க்கிறவர்கள் யாவரும், விருப்பமுள்ளவர்களும், விருப்பமில்லாதவர்களும், உதவிடாமல் ஒதுங்கிப்போனார்கள். ஆனால் பரிசுத்த மார்ட்டின் வந்தபோது, ஒரு கிறிஸ்தவ விசுவாசி என்ற முறையில் தனக்குள்ள கடமையை உணர்ந்து கொண்டவராய், தான் அணிந்திருந்த மேலங்கியை தன் பட்டயத்தால் இரண்டாக வெட்டி, ஒரு பாகத்தை அப்பிச்சைக்காரனிடம் போர்த்திக் கொண்டு போனார். அந்த இராத்திரியிலே, மார்ட்டின் பிச்சைக்காரனுக்கு போர்த்தி விட்ட தனது பாதி மேலங்கியை இயேசு கிறிஸ்து போர்த்திக் கொண்டு இருக்கிறவராய், தரிசனத்தில் காட்சியளித்தார். அன்று முதல் அவரது ஊழியம் தொடங்கியது. இவரது இச்செயல், “இந்தச் சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை நீங்கள் எனக்கே செய்தீர்கள்'' என்ற வேத வாக்கியத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது. 32எனவே அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாருக்காவது எதையாவது செய்தால், அதை நீங்கள் கிறிஸ்துவுக்கே செய்கிறீர்கள். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள் ளுங்கள். நாம் யாவரும் இதை சேர்ந்து சொல்லுவோம். (சகோ. பிரன்ஹாமும், சபையாரும் சேர்ந்து ஒருமித்து இதைச் சொல்லு கிறார்கள் - ஆசி.) 'நீங்கள் மற்றவர்களுக்கு எதைச் செய்கிறீர் களோ, அதை கிறிஸ்துவுக்கே செய்கிறீர்கள்''. பிறன் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறாரோ, அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் உங்கள் பிறனைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ, பாருங்கள், அதுவே ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறது. 33அதுவே அவரது வாழ்க்கையில் நடந்து முதலாம் அற்புத மாகும். அதுவே அவரது ஊழியத்தின் துவக்கமுமாகும். அவரைப் பற்றி கூற வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு. ஆனால் எனக்கு நேரமில்லை. ஏனெனில் நாளை இரவும் நீங்கள் இங்கே வந்துவிட வேண்டும் என்றும், ஒவ்வொரு இரவிலும் தவறாது நீங்கள் வந்து விட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். எனவே உங்களை அதிக நேரம் இங்கே தாமதிக்க வைக்க விரும்பவில்லை. சரி, அவரது வாழ்க்கையில் நடந்த அடுத்த அற்புதத்தை நாம் இந்த இரவில் பேசத் தெரிந்து கொண்டேன். அவர் முழுவதுமாக அஞ்ஞானத்தை இடித்து கீழே தள்ளினார். மேலும் அவர் ரோமன் சபையை உறுதியுடன் எதிர்த்து நின்றார். முதல் ரோமன் சபையின் பிஷப்புகளோடு அவர் முழுவது மாக ஒவ்வாதிருந்தார். அவர்... அவர்கள் லௌகீகமாக நடந்து கொண்டு வந்தனர். எனவே அவர்களை அவர் எதிர்த்து நின்றார். அவர் உறுதியாக அவர்களுக்கு எதிர்த்து நின்றார். அந்தப் பயங்கர மான காலத்தில் மார்ட்டின் உயிரோடிருந்தது ஒரு அற்புதமாகும். 34ஒரு நாள் மார்ட்டின் அஞ்ஞான தேவர்களின் விக்கிரகத் தோப்பு ஒன்றை வெட்டி அழித்துக் கொண்டிருந்தார். ஒரு அஞ்ஞான பலிபீடத்தை வெட்டி கீழே சாய்த்தார். அந்த அஞ்ஞான பலிபீடத்திற்கருகில், அஞ்ஞானிகள் புனிதமென்று கருதிய ஒரு மரம் இருந்தது. அதை அவர் வீழ்த்துவதற்காக வெட்டி கொண்டிருந்தார். அப்பொழுது அதனருகில் நின்றிருந்த அஞ்ஞானிகள் ஆத்திரமடைந்து கொதித்தெழுந்தனர். அவர் அவர்களிடம் ஒரு சவால் விடுத்தார்: ''என்னை இந்த மரத்தில் கட்டுங்கள். பின்பு, இம்மரத்தை வெட்டி சாயுங்கள். இந்த மரத்தை வெட்டினால் எந்தப் பக்கம் சாயுமோ அந்தப் பக்கத்தில் என்னைக் கட்டிவிடுங்கள். நான் தேவனுடைய மனிதனாக இல்லையென்றால், அப்பொழுது மரமானது வெட்டப்படும்பொழுது என் பக்கமாக சாய்ந்து என்னை நசுக்கிக் கொல்லட்டும், நான் தேவனுடைய மனிதனானால், அப்பொழுது, மரம் வெட்டப்படும் போது, இயற்கையின் பிரமாணத்திற்கு எதிராக, என் தேவனால் மரமானது எதிர்திசையில் சாயும்படி சுற்றிவிடப்பட்டுவிடும்'' என்றார். சரியானதொரு சவால் இது! அதை ஏற்றுக் கொண்ட அஞ்ஞானிகள், மார்ட்டினை மரத் தோடு வைத்துக் கட்டி, அது விழும்போது, மார்ட்டின் பக்கமாக விழுந்து அவரை நசுக்கிக் கொல்லட்டும் என்று எண்ணி அதற் கேற்றவாறு, மரத்தை வெட்டினார்கள். வெட்டப்பட்ட மரமானது சாய ஆரம்பித்தபொழுது, இயற்கைக்கு மாறாக எதிர்த்திசையில் திருகிக் கொண்டு சாய்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வர்களை நசுக்கிக் கொன்றது. தேவன் மலையின் மேல் மரத்தை திருகிவிட்டார். இது ஓர் அற்புதம், அவரது கூட்டத்தில் எப் பொழுதும் அற்புதம் நிகழ்ந்தது. 35நான் பேச நினைத்த இன்னொரு அற்புதம் என்னவெனில்; இறந்துபோன குழந்தையின் மேல் தன் உடலைக் கிடத்தி, அதற்காக சிறிது நேரம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அக்குழந்தை உயிரோடு எழுப்பப்பட்டது. மிகவும் தலைசிறந்ததாக எனக்கு விளங்கும் இன்னொரு அற்புதம் என்னவெனில்: ஒரு அரசனுக்கு முன்பாக இது நடந்தது. அவ்வரசன் தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மக்களை கொல்வதற்கு இருந்தான். அம்மன்னன் முதல்ரோமன் சபையின் அத்தியட்சகருடைய வலதுகரமாக விளங்கினான். முதல் ரோமச் சபையின் அத்தியட்சகர் (bishop) என்பது போப்தான். போப் என்று அழைக்கப்படுவதற்கு முன்னால், ரோமன் சபையின் அத்தியட்சகர் என்றே ஆதியில் அழைக்கப்பட்டார். அவன் பெயர் டமசுர் (Damasur) என்பதாகும். அம்மன்னன் கிறிஸ்தவர்களில் யாரையெல்லாம் பிடித்துக் கொலை செய்ய முடியுமோ, அவர்களை யெல்லாம் கொன்று குவித்தான். இம்மன்னனின் மனைவி ஒரு அஞ்ஞானியாயிருந்தாள். அவளுடைய இருதயத்தின் மேல் அந்தகாரம் குடிகொண்டிருந்தது. அப்பொழுது இந்த, பரிசுத்தமாக்கப்பட்ட பரிசுத்த மார்ட்டின், கிறிஸ்தவர்களை கொல்வதை நிறுத்த வேண்டுமென அவர்களுக்காக பரிந்து பேச வந்தார். அக்கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படக் கூடாது என்று அவர்களுக்காக பரிந்து பேசுவதற்காக இம்மன்னனை காணச் சென்றபோது, அவனுடைய மனைவி அதை அவனுக்கு அறிவித்தாள். அவன் ஒன்றும் செய்ய மறுத்துவிட் டான். ஏனெனில் இவன் இந்த போப்புக்கு வலதுகரமாக விளங்கினான்; எனவேதான் அவன் பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்ட கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தான். 36ஆனால் பரிசுத்த மார்ட்டின் மன்னனை நேரில் கண்டு பேச விரும்பினார். காவலாளிகள் வாயிலில் அவரை தடுத்து நிறுத் தினார்கள். பரிசுத்த மார்ட்டின் முகங்குப்புற விழுந்து, அங்கேயே கிடந்து, உள்ளே போ என்று தேவன் தன்னிடம் சொல்லும் வரைக்கிலும் ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் எழும்பிய பொழுது, அவருக்கு முன்பாக பூட்டப்பட்டிருந்த கதவுகள் தாமாகவே திறந்து கொண்டதால், அவர் அதினுள்ளே நடந்து சென்றார். இது உண்மையான வரலாறு ஆகும். யாரோ கண்டவர் களெல்லாம் இதை எழுதிவிடவில்லை. அதில் ஏதாவது உண்மை யைக் கண்டறியாமல் தப்பபிப்பிராயமாக எழுதி இருந்தால் அப்பொழுது, அது சபையால் சொல்லப்பட்ட விஷயம் என்று தள்ளிவிடலாம். போப்பு மார்க்க சபையினரால் எழுதப்பட் டிருந்தால் அவர்கள் இவைகளை குறிப்பிடவே மாட்டார்கள். ஆனால், வரலாறு சத்தியத்தையே குறிப்பிடுகிறது. 37ஆக, இந்த மனிதன், பரிசுத்த மார்ட்டின், திறவுண்ட கதவுகள் வழியாக அரண்மனைக்குள் காவலாளிகளைக் கடந்து சென்று, நேரே அம்மன்னனுக்கு முன்பாகவே போய் நின்றார். தேவனுடைய ஊழியக்காரனை கனம் பண்ண அம்மன்னன் விரும்பவில்லை. அவ்விதம் செய்வது முறையானது அல்ல. எனவே அம்மன்னன் மார்ட்டினுக்கு மரியாதை செலுத்தாமல் தன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். தேவன் அப்பொழுது என்ன செய்தார் தெரியுமா? மார்ட்டின் மன்னனோடு பேச முயன்று கொண்டிருந்தார். அரசனோ, தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு விட்டான். எனவே தேவன் தன்னுடைய ஊழியக் காரனுக்கு அந்த அஞ்ஞானி மரியாதை கொடுக்கும்படி செய்தார். அவன் உட்கார்ந்திருந்த சிங்காசனத்தில் திடீரென்று தீப்பிடித்து, அமர்ந்திருந்த அரசனின் மேல் சுட்டு விட்டதால், அது அவனை எழுந்திருக்கப் பண்ணினது. 38இது 'நைசீன் கௌன்சில்' (Nicene Council) என்ற புத்த கத்தில் எழுதப்பட்ட வேதகால வரலாறு ஆகும். அம் மன்னன் தேவனுடைய ஊழியக்காரனை கனம் பண்ண வேண்டியதா யிருந்தது. தேவன் அவனை எழுந்து நிற்கச் செய்தார். அரசன் அமர்ந்திருந்த சிங்காசனத்தை அது சுட்டெரித்துவிட்டது. அக்கினி அவருடைய சரீரத்திலிருந்து புறப்பட்டு இருக்கையின் அடிப் பாகம் தீப்பிடித்துக் கொண்டதால், உட்கார்ந்திருந்த மன்னன் குதித்து எழுந்து நிற்க வேண்டியதாயிற்று. தேவனுக்கென்று ஒரு வழியுண்டு, அவ்வழியில் தான் அவர் செயல்புரிவார் என்று அறிந்து கொள்ளுங்கள். “இந்தக் கல்லுகளினாலே தேவன் ஆபிர காமுக்கு பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' அதே தேவன் இன்று இரவில் நம் மத்தியிலும் வாசம் பண்ணுகிறார் . அதே தேவன் தான். சரி. இன்னொரு அற்புதத்தைப் பற்றி சொல்லிவிட்டு அத்தோடு முடித்துக் கொள்கிறேன். என்னிடம் இன்னும் சில உள்ளன. இந்த ஒரு குறிப்பிட்ட அற்புதமானது எனக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். ஒரு நாள் மார்ட்டின் தன் சபையின் ஜனங்களுக்காக செய்தி கொடுக்க தேவ சமூகத்தில் காத்திருந்து தன்னுடைய படிக்கும் அறையில் ஜெபித்துக் கொண்டு இருந்தார். 39மார்ட்டின் ஒரு பெரிய மனிதனாயிருந்தார். அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட இந்த சபையை, வழி நடத்தி... ஓ அவர் ஒரு... அவர்கள் யாவரும் ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும் படி செய்தார்; தன் முழு சபையாரும் அதைப் பெற்றிருக்கச் செய்தார். தேசம் முழுவதிலும் கிறிஸ்தவர்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்கள். பாருங்கள், தேவன் தன் தூதனிடம் பேசுகிறார். தூதன் சபையின் ஜனங்களிடம் பேசுகிறார். அப்பொழுது அது தான் நடக் கிறது. பாருங்கள். அவர் ஜனங்களையும், தூதனையும் தேவனுக் குள்ளாக ஒரேவிதமாக வைக்கிறார். பாருங்கள், அந்த குழு வினரின் பரிசுத்த ஆவியானவர் நிரம்பி வழிகிறார். கிறிஸ்தவர்களை அவர்கள் அநேக வேளைகளில் கொலை செய்த போது, அவர்களிலிருந்து தனியாக அவர்களது ஊழியக்காரரை நிறுத்தி, ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரையும் கொன்றார்கள். என்னென்ன கொடுமைகளையெல்லாம் அவர்கள் கிறிஸ்தவர் களுக்குச் செய்தார்கள்! அவர்களை சுட்டெரித்தனர். மரக்கட்டை களில் அவர்களை ஆணியறைந்து, காட்டு நாய்களை அவிழ்த்து விட்டு அவர்களை பின்புறப் பகுதியிலிருந்து கடித்து மாம்சத்தை தின்னும் படி செய்தனர். அவர்கள் மரிக்கும் முன்னரே அவர்களது குடல்கள் வெளியே இழுக்கப்பட்டு விடுமாறும் செய்தனர். பெண்களை எடுத்து, வலது மார்பகத்தை அறுத்து விட்டு, அப்படியே நின்றபடியே இருக்க வைத்து இதயம் துடிதுடிக்க, இரத்தம் சொட்ட சொட்ட, பதைபதைக்க அப்படியே தலைகீழாக விழுந்து மரித்துப் போகும்படி செய்தனர். நிறைகர்ப்பிணிகளின் வயிற் றைக் கீறி, குழந்தைகளை வெளியே எடுத்து, தாய்மார்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கச் செய்து, அந்த சிசுக்களை பன்றிகளுக்கு இரையாகக் கொடுத்தார்கள். இவ்வாறு எல்லா விதமான கொடுமைகளையும் அவர்களுக்கு இழைத்தார்கள். 40கிறிஸ்தவத்தை பின்பற்றுவதாக அறிக்கை செய்கிற மக்கள் இவ்விதமான கொடுமைகளையெல்லாம் செய்வார்கள் என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள். ஆனால் கவனியுங்கள்; ''உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்கு தொண்டு செய் கிறேன் என்று நினைக்குங் காலம் வரும்'' என்று வேதத்தில் இயேசு கூறினாரே. இதைச் சொன்ன அதே இயேசுவானவர், மீண்டும் கடைசிக் காலத்தில் இப்படியிருக்கும் என அதை ஆவியினால் முன்னுரைத்திருக்கிறார். அது வந்தாக வேண்டும் இந்த மற்ற காரியங்கள் வேதத்தோடு பூரணமாக சரியாக ஒத்து இருக்கையில், இது வரலாற்றின் மூலமாக மிகவும் சரியாக வேத வாக்கியங் களோடு பொருந்துகிறதா இல்லையா என்பதைக் கவனித்துப் பாருங்கள். இவ்வாறு நடக்கும் என்று தேவன் கூறினார். அது அவ்வாறே நடைபெற்றது என்பதைக் கூற வரலாறு இங்கே உள்ளது. பாருங்கள், மிகவும் சரியாக இருந்திருக்கிறது. அப்படி யானால், நாம் வாழ்கிற இந்த லவோதிக்கேயா சபைக் காலத்தில் அதற்கெதிராக உரைக்கப்பட்டுள்ள ஆபத்துகள் மற்றும் காரியங்களைப் பற்றி நாம் என்ன செய்யப் போகிறோம்? 41ஒரு நாள் மார்ட்டின் அறையில் ஜெபித்துக் கொண்டிருக் கையில், சபையார் காத்திருந்தனர். அச்சமயத்தில் ஒரு பிச்சைக் காரன் வந்து அவரது கதவைத் தட்டினான். அவர் ஜெபிக்கிற அலுவலாக இருந்த போதிலும் அவனுக்கு கதவைத் திறந்தார். அப்பிச்சைக்காரன் தனக்கு தன் நிர்வாணத்தை மறைக்கவும், குளிருக்கு உடுத்தவும், ஒரு ஆடை வேண்டும் என்று வேண்டினான். மார்ட்டின் அவனை தலைமை உதவிக்காரரிடம் (Chief Deacon) அனுப்பினார். தலைமை உதவிக்காரர் அப்பிச்சைக் காரனிடம் எரிச்சலைக் காண்பித்து, அவனை வெளியே துரத்தினார். அப் பிச்சைக்காரன் மீண்டும் பரிசுத்த மார்ட்டினிடமே திரும்பி வந்து, உதவிக்காரர் தன்னை துரத்தி விட்டதைப் பற்றிக் கூறினான். அந்த சமயத்தில் தலைமை உதவிக்காரர் அங்கு வந்து, மார்ட்டினிடம், 'உங்கள் சபையார் உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீர் அவர்களை காக்க வைத்துக் கொண் டிருக்கிறீர்களே!'' என்று சற்று காட்டமாகக் கூறினார். ஆனால் மார்ட்டின் ஜெபத்தில் தரித்திருந்தார். தேவனால் நடத்தப்பட்டு, பிரசங்கிக்க அவர் புறப்படுகிற வரைக்கிலும், அவர் ஜெபத்தில் தரித்திருப்பதே நல்லது. 42இந்தப் பிச்சைக்காரன் மீண்டும் மார்ட்டினிடம் வந்தபோது, பரிசுத்த மார்ட்டின் தன்னுடைய சொந்த நல்ல ஆடையை கழற்றி அப்பிச்சைக்காரனுக்கு கொடுத்துவிட்டு, தலைமை உதவிக் காரரை அனுப்பி தனக்கு இன்னொரு ஆடையைக் கொண்டு வரும்படி சொன்னார். ஆகவே தலைமை உதவிக்காரர் வேறு வழி யில்லாமல், ஒரு ஆடையைக் கொண்டு வந்து, அதை பரிசுத்த மார்ட்டினுக்கு அணிவித்தார். மார்ட்டின் தான் கொடுத்து விட்ட தன்னுடைய நல்ல உடைக்குப் பதிலாக, அதைவிட சாதாரண ஒரு உடையையே உடுத்திக் கொண்டு மக்களின் முன்னால் வந்தார். இது உணர்த்துவது என்னவெனில், உங்களிடத்திலிருக்கும் மிக நல்லதையே கொடுங்கள். உங்களுடைய ஜீவனைக் கொடுங்கள். உங்களுடைய நேரத்தைக் கொடுங்கள். உங்களுடைய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு கொடுங்கள் என்பதைத் தான் கிறிஸ்துவில் ஜீவித்த அதே ஆவியானவர் உங்களிலும் ஜீவிக்கிறார். அது உங்களுடைய அயலகத்தாரிடமும் நீங்கள் இடை படுகிற மக்களிடமும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணவேண்டும். அப்பொழுது கிறிஸ்துவைப் போலவே உங்கள் வாழ்க்கை அமைந்து, கிறிஸ்து செய்த அதே கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். 43கடைசியாக, நிழல்களில் கிடத்தப்பட்டிருந்த மக்கள் சுகமடைந்தனர். அவர்களைச் சுற்றி தேவனுடைய அன்பின் வல்லமை அவ்வளவாய் சூழ்ந்திருந்தது. சபையோர் கூறினார்கள். “பரிசுத்த மார்ட்டின் அந்த சாதாரண அங்கியை உடுத்திக் கொண்டு வந்து பிரசங்கித்த போது, அவரைச் சுற்றிலும் ஒரு ஒளி பிரகாசிப்பதைக் கண்டோம்'' என்று. பார்த்தீர்களா? பாருங்கள், அவர் சரியான காரியத்தைச் செய்தபடியினால் இவ்வாறு நடந்தது. எப்பொழுதும் சரியானதையே செய்யுங்கள். தேவனுக்கென உள்ள எங்களுடைய கடமையைச் சரிவர செய்யுங்கள். சரியானதையே சிந்தியுங்கள். உங்களுக்கென உள்ள கடமை அதுவே. நீங்கள் பிழையற்ற விதத்தில் இயங்க வேண்டும். இப்பொழுது இதை நாம் ஆரம்பிக்கப் போகிறோம். இதன் பேரில் வேதபூர்வமான விளக்கங்களை நாம் பெறுவோம். இங்கே இது மிகவும் வலுவான காரியமாக உள்ளது. “பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில், இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது'' வெளி.2:12 44இன்றிரவில் அவர் மீண்டும் தன்னுடைய தெய்வீகத்தைக் குறித்து தெரியப்படுத்த கூறுவதை நீங்கள் கவனிக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு சபைக் காலத்திலும், அவருடைய மகிமையான நிலை விவரிக்கப்பட்டுள்ளது. ஏழு நட்சத்திரங்களைக் கையில் ஏந்திக் கொண்டிருந்தவர் இந்த சபைக் காலத்தில், “இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்'' என்று கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள். ”வெண்கலம் போன்ற பாதங்களை உடையவர்'', 'அக்கினி ஜுவாலையைப் போன்ற கண்கள்'' இவ்வாறெல்லாம் அவர் தன்னுடைய தேவத்துவத்தைப் பற்றி தெரியப்படுத்துகிறார். “இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர்'' என்ற வசனத்தில், தேவத்துவத்தைப் பற்றிய விஷயம் எங்கே இருக்கிறது?'' என்று நீங்கள் கேட்கலாம். ''பட்டயம்'' என்பது “வார்த்தை ''யைக் குறிக்கும். நாம் ஆரம்பத்தில், அவருடைய தெய்வீகத்தைக் குறித்து படிக்கையில் எபிரேயர் 4ம் அதிகாரத்தில் இருபுறமும் கருக்குள்ள பட்ட யத்தைப் பற்றிப் பார்த்தோம். ''தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும் இருக்கிறது'' என்று எபி.4:12ல் பார்த்தோம். அதுவே தேவ னுடைய வார்த்தை. அப்படித்தானே? இப்பொழுது இதற்கான வியாக்கியானங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். ”வார்த்தை'யைப் பற்றி யோவான் எழுதின சுவிசேஷம் 1ம் அதிகாரத்தில் பார்ப்போம். “ஆதியிலே வார்த்தை இருந்தது'' அது தான் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தது. அது சிருஷ்டித்தது. அது சரிதானே? ''அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'' ''அந்த வார்த்தையாகிய தேவன் மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினார்.'' அது சரிதானே? அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார்'' 45ஆதியில் இருந்தவர் இதோ இங்கே நின்று கொண்டிருக் கிறார். “நான் தான் தேவனுடைய வார்த்தை என்பதை இந்த பெர்கமு சபையின் தூதனுக்குச் சொல்லுங்கள்'' என்கிறார். ஓ, நாம் அவரை வெளிப்படுத்தின விசேஷத்தில், இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை உடுத்தியவராய், சிரசில் கிரீடம் சூட்டியவராய் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறினவராய், அவரது தொடையில் ”தேவனுடைய வார்த்தை'' என்ற நாமம் எழுதப்பட்டவராய் வருகிறதை காண்கிறோம். ஓ, நான் அதை விரும்புகிறேன். அவரே வார்த்தை, அவரே தேவனுடைய வார்த்தை. அவர் தானே வார்த்தை என்பதை, ஆதியில் இருந்த இந்த தேவன் தன்னைப்பற்றி தெரியப்படுத்துவதை நாம் காண்கிறோம். அவர் ஜீவிக்கிற வார்த்தையானவர் என்றால், அப்பொழுது இந்த வேதாகமத்தில் எழுதப்பட்ட வார்த்தை அவரது பாகமாகும். நீங்கள் இந்த எழுதப்பட்ட வார்த்தையை அவருக்குள்ளாக ஏற்றுக் கொள்வீர்களானால், அப்பொழுது வார்த்தையானவர் விசுவாசத் தினால் உங்களுக்கு வருகிறார் (எழுதப்பட்ட வார்த்தை ஜீவிக்கிற வார்த்தையாக உங்களுக்குள் வாசம் பண்ணுகிறது). ஓ! அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். வார்த்தையானது உங்களுக்குள் வருகிறது. இப்பொழுது உடனே பரிசுத்த ஆவியானவரால் அது உயிர்ப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுக்கு உண்மையாக ஆகிறது. இந்த மலையைப் பார்த்து 'பெயர்ந்து போ'' என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அது பெயர்ந்து போகும்'' அது என்ன? ஏனெனில், தெய்வத்துவம் உள்ள நீங்கள் இப்பொழுது பேசுகிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வாறு கூறுகிறது. நீங்கள் சந்தேகப்படாமலிருந்தால், நீங்கள் உரைப்பது நிறைவேறியே தீரும். உங்களிலிருந்து லௌகீகமான காரியங்கள் அனைத்தையும் முழுவதுமாக கழித்து வெளியே தள்ளி விட்டால், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் ஒரு முழுமையான தேவனுடைய குமாரனும், தேவனுடைய குமாரத்தியுமாக ஆவீர்கள் (உள்ளே லௌகீகம் இல்லை, அல்லது ஆக்கினை இல்லை, சந்தேகம் இல்லை). அந்தவித நிலை என்னவாயிருக்கும்? இனி நீங்களல்ல, உங்களிலுள்ள தேவன் என்ற நிலை உண்டாகும். அப்பொழுது அவருடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, அது ஒரு வாக்குத்தத்தமாக இருக்கிறது. ''பிதாவே, இது உம்முடைய வாக்குத்தத்தம்'' என்று கூறுகையில், ஏதோ ஒரு அசைவு உண்டாக வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? 46அந்த விவகாரம் எப்படியிருக்க வேண்டும் என்று தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிற வரையிலும், நீங்கள் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? அது என்னவிதமான விவகாரம் என்று வெளிப்படுத்தப்பட்டு அறியும் பொழுது, அப்பொழுது நீங்கள் இயேசுவைப் போல் உரைக்க முடியும். அவரே வார்த் தையாயிருக்கிறார் அல்லவா? ஆனால் இயேசுவாகிய மனிதன், தேவன் வாசம் செய்த அக்கூடாரமாகிய அவர், “பிதா எனக்குக் காண்பிக்கிறதெதுவோ அதையே நான் செய்கிறேன்'' என்று கூறினார். உங்களுக்கு வார்த்தையானது முதலில் பிரத்தியட்சமாகாமல் இருக்கிற வரையிலும் நீங்கள் வார்த்தையைப் பெற்றிருக்க வில்லை. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? 'அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது'' என்று மக்களில் சிலர் கூறுவது ஆச்சரியமல்ல, ஏனெனில் அவர்களுக்கு வார்த்தையானது பிரத்தி யட்சப்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞானஸ்நானத்தைப் பற்றிய வெளிப்பாட்டை அவர்களால் கண்டு கொள்ள முடியாதது ஆச்சரியமல்ல, ஏனெனில் வார்த்தையானது அவர்களுக்கு இன்னமும் பிரத்தியட்சப்படவில்லை. வேறுவிதமாக மக்கள் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்கள் என்பதற்கு ஒரு வேதவாக்கியம் கூட அவர்களுக்கு இல்லை. 47பரிசுத்த ஆவியைப் பொறுத்தமட்டில், வேதம் கூறுகிற தென்னவெனில், “பரிசுத்த ஆவியினாலேயேயன்றி, ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது'' என்று அப்படி யிருக்க, மக்கள் பரிசுத்த ஆவி சரியென்று விசுவாசிப்பதே இல்லை. பாருங்கள்? அவர்களுக்கு அது அருளப்படவில்லை. ஏனெனில் இயேசு கூறினார்: 'என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளா விட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுத்தவை யாவும் (கடந்த காலம்) என்னிடத்தில் வரும்''. ஓ இது அழகாக இருக்கவில்லையா? ”என் பிதா எனக்குத் தந்தவர்கள் யாவரும் என்னிடத்தில் வருவார்கள். கேட்டின் மகன் கெட்டுப் போனானேயல்லாமல் வேறு எவரும் கெட்டுப் போவ தில்லை. நான்... (கேட்டின் மகன் அதற்காகவே பிறந்தான்). என் பிதா எனக்குத் தந்தவர்களை நான் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்றார். ஓ, என்னே! உலகத்தோற்றத்திற்கு முன்னரே, அடிக்கப் பட்ட ஆட்டுக் குட்டியின் ஜீவபுஸ்தகத்தில் நமது பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை அங்கே காண்கிறோம். ஓ, இது அழகாக இல்லையா? நாம் எவ்வாறு சந்தேகப்பட முடியும்? 48ஓ தேவனே, எங்கள் நடுவிலிருந்து சந்தேகத்தை எடுத்துப் போடும். பெலவீனமான எங்களுடைய மனுஷீக இருதயங்களை, கொஞ்சம் கூட அங்கே சந்தேகம் என்பதே இல்லாத அளவுக்கு, விருத்தசேதனம் செய்தருளும். அதுவே என்னுடைய வேண்டுதலா யிருக்கிறது. எல்லா சந்தேகங்களையும் நீக்கிப் போடும், கர்த்தாவே. நான் இனிமையானவனாக, பணிவுள்ளவனாக, தேவனுடைய ஒரு ஆட்டுக்குட்டியாக இப்பூமியில் நடமாட எனக்கு அருள்புரியும். அவர் நடந்தது போல் நானும் நடக்கட்டும். அவர் பேசுகிறது போல் நானும் பேசட்டும். அவரது நோக்கங்களைப் போலவே எனது நோக்கங்களும் இருக்கட்டும். மற்றவர்கள் என்னில் இயேசுவை காணட்டும். நான் என்னையே இழந்து, அதை உம்மில் நான் காணட்டும், கர்த்தாவே. நான் என்னையே முற்றிலுமாக இழந்து போய், அதை நான் கிறிஸ்துவுக்குள்ளாக காணச் செய்யும். சந்தேகம் என்பதற்கு கொஞ்சம் கூட இடமேயில்லாதபடி, அவர் கூறுவதை விசுவாசிக்கும்படி என்னை கிறிஸ்துவுக்குள்ளாக முழுவதுமாக மறைத்துக் கொள்ளும். 49இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு, “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்! நான் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்தீர்களா? தேவனுக்கு மகிமை!'' என்று கூறாதிருங்கள். நீங்கள் இன்னும் அதைப் பெறவில்லை என்பதைத் தான் அது காண்பிக் கிறது. அவர் அவ்விதமாகச் செய்யவில்லை. அவர் தன் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு, ''நான் என்ன செய்வேன் தெரியுமா? ஆம் ஐயா, நான் தான் குமாரன்'' என்று கூறவில்லை. அவர் எதற்கும் புகழ்ச்சியை எடுத்துக் கொள்ளவில்லை. அவர் எல்லாப் புகழையும் தேவனுக்கே கொடுத்தார். அவர் மிகவும் பணிவுடனும், இனிமையாகவும் நடந்து கொண்டார். மக்கள் அவரைச் சூழ எப்பொழுதும் இருக்க விரும்புகிற அளவுக்கு, அவரைச் சுற்றி அவ்வளவு இனிமையான சூழ்நிலை இருந்தது. அவர் தன் சத்துருக்களை மிகவும் நேசித்தார். அவர்களுக்காக அடிக்கடி ஜெபித்தார். அவர் செய்தது போல நாம் மற்றவர்களுக்கு செய்வ தற்காக, உங்களுக்கும் எனக்கும் அவர் முன்மாதிரியாக இருக்கிறார். இப்பொழுது நாம் பெர்கமு சபையைப் பற்றிய இரண்டாவது வசனமாகிய 13ம் வசனத்தைப் பார்ப்போம். “உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக் கொண்டிருக் கிறதையும்... என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் நான் அறிந்திருக்கிறேன்.” வெளி.2:13 50சாத்தானின் சிங்காசனம் இருக்கிற இடத்தில் அவர்கள் குடி யிருந்த போதிலும், அவர்கள் இயேசுவின் நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ''என்னைப் பற்றும் விசுவாசத்தை மறுதலியாமலிருக்கிறதை'' என்பதைப் பாருங்கள். என்னவித மான விசுவாசத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்? ஆதியில் உள்ள பெந்தெகொஸ்தேயின் விசுவாசத்தையே கொடுத்தார். அக்காலத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் விசுவாசம் உடையதா யிருந்தது. அதினால் ஒரு ஸ்தாபன சபையானது எழுப்பப்பட்டுக் கொண்டு இருந்தது. ஸ்தாபனக் கட்டுப்பாட்டுடன் ஒரு சபை யானது உருவாகியது. ஆனால் உண்மையான சபையைப் பார்த்து தேவன், “நீ அவர்களைவிட்டு விலகி இருக்கிறாய். நான் அவர் களுடைய கிரியைகளை வெறுப்பதுபோல் நீயும் வெறுக்கிறாய், என்னுடைய நாமத்தை நீ மறுதலிக்கவில்லை. அவர்களுடைய அந்த கோட்பாடுகளின் பின்னால் நீ சென்றுவிடவில்லை. நீ ஒழுங் கானபடி என்னுடைய நாமத்திற்காக உறுதியாக நின்றாய், ஆதி யில் இருந்தது போல, இன்னமும் நீ அந்த விசுவாசத்தைக் கொண் டவளாய் இருக்கிறாய்'' என்று கூறினார். ஓ, நான் அதை விரும்பு கிறேன். “சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.'' வெளி.2:13 51“சாத்தானின் சிங்காசனம்'', இந்த இடத்தில் நான் ஒரு நிமிடம் நிறுத்தப் போகிறேன். இந்த விஷயங்களின் பேரில் நாம் நமது முழுக் கவனத்தையும் செலுத்தி இதை ஆராய்வோம். நீங்கள் அதை கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். இப்பொழுது நீங்கள் அதைப் பற்றி நிச்சயமுடையவர் களாயிருங்கள். ''சாத்தானின் சிங்காசனம்''. சாத்தானின் சிங்காசனம் எங்கேயுள்ளதென்று தேவன் ஆதியாகமத்தில் அறி வித்தார். அங்கே அது பாபிலோனிலிருந்தது. அது எப்பொழுதும் சாத்தானின் சிங்காசனமிருந்த இடமாக இருந்தது. மேலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது. ஆனால், பாபிலோனானது, தன்னை ''அஞ்ஞான மார்க்கம்'' என்றிருப்பதை ”போப்பு மார்க்கம்'' என்று மாற்றிக் கொண்டு விட்டது என்பதை நீங்கள் காணலாம். சாத்தானுடைய சிங்காசனம் பெர்கமுவில் ஒரு பெரிய ஒன்றை ஸ்தாபிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்தது. பாபிலோனில், பெர்சியர்கள் மேற்கொள்ளும் முன், இருந்த கடைசி மன்னனின் பெயர் அட்டாலஸ் என்பதாகும். கல்தேய மன்னர்கள் இராஜாவும் ஆசாரியனுமாக இரு பதவிகளை வகித்தவர்களாக இருந்தார்கள். பெர்சியர்கள் படையெடுத்து, பாபிலோனைக் கைப்பற்றி, அட்டாலஸ் என்ற பாபிலோனிய மன் னனை துரத்தியபோது, அவன் பாபிலோனிலிருந்து பெர்கமுவுக்கு ஓடி வந்தான். ஆகவே பாபிலோனிய குருக்களாட்சியானது தனது சிங்காசனத்தை பாபிலோனிலிருந்து இப்பொழுது பெர்கமுவுக்கு குடிபெயர்ந்துவிட்டு அட்டாலஸ் என்ற அந்த பாபிலோனிய கல்தேய மன்னன், அவர்களுக்கு இராஜா - மதகுரு என்ற ஸ்தானத்தை வகித்தான், பெர்சியர்கள் வந்து பாபிலோனை கைப்பற்றிய போது, அங்கிருந்து கல்தேயர்களும், அவர்களின் அரசன் அட்டலாஸும் துரத்துண்டு ஓடிப் போய் பெர்கமுவில் தங்கள் சிங்காசனத்தை ஸ்தாபித்தார்கள். ''சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்''. இப் பொழுது புரிந்துகொண்டீர்களா? 52''சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடி யிருக்கிறதையும்“ என்று ஆண்டவர் கூறிய பொழுது, வரலாற்று ரீதியாக இவ்வசனத்தின் நிறைவேறுதலாக எங்கே, என்ன நடந்தது என்பதைக் காணவே நான் சபைச் சரித்திரத்திற்குள் நுழைந்து இவ் வரலாற்று குறிப்புக்களை கண்டெடுத்தேன். “சாத்தானின் சிங்காசனம்'' என்ற அக்குறிப்பிட்ட இடம் எங்கே இருக்க முடியும் என்று நான் எனக்குள் சிந்தித்துக் கொண் டிருந்தேன். அப்பொழுது தான் நான், இந்தப் பாபிலோனின் பெரிய அரசன் தன் நாட்டை வென்றெடுத்து பெர்சியர்களுக்கு முன்பாக துரத்துண்டு ஓடிப்போன பொழுது (இது தானியேலின் தரிசனத்தின்படி நடந்த ஒரு காரியமாகும்) அவன் ரோமாபுரி யிலுள்ள இந்த கரமாகிய பெர்கமுவுக்கு வந்து, அங்கே தனது தலைமைப் பீடத்தை ஏற்படுத்திக் கொண்டான். சாத்தான் தனது தலைமைப் பீடத்தை பாபிலோனிலிருந்து பெர்கமுவுக்கு மாற்றிக் கொண்டான். அங்கே தானே (எதிர்காலத்து) புதிய பாபிலோனை சாத்தான் ஸ்தாபிக்கப் போகிறான். நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம் என்பதற்கான ஒரு பின்னணியை பெற்றுக் கொண்டு விட்டோம். அந்தியப்பா என்ற இந்த அருமையான சகோதரனை அங்கே தான் அவன் கொன்றான். 53பின்பு அவன் தன்னுடைய செயல்முறையை மாற்றிக் கொண்டான். முதலில் அவன் கிறிஸ்தவர்களை உபத்திரவப் படுத்துகிறவனாக இருந்தான். ஓ, கிறிஸ்தவ வழியை அவன் எவ் வளவாய் வெறுத்தான். அவன் தானே ஒரு மதகுரு - இராஜாவாக இருந்தான். சுபாவத்தில் விக்கிரக தேவர்களை வணங்கும் தேவனற்ற அஞ்ஞானியாக இருந்தான். பிறகு அவன் தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு கான்ஸ்டன்டைன் என்ற அரசனுடன் இணைந்து கொண்டு கிரியை செய்ய ஆரம்பித்தான். கான்ஸ்டன்டைன் அரசன் எப்பொழுதும் நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் (Knights of Colombus) என்ற ஸ்தாபனத்தின் மூலகர்த்தா என்று கருதப்படுகிறான் (இப்பொழுது அது முழு வதும் போப்பு மார்க்கத்தின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறது), அது தான் அந்த இரத்தம் சிந்தத்தக்கதான ஒரு பிரதிக்ஞையைக் கொடுத்தது. நான் பயபக்தியோடும், மரியாதையோடும் சொல்லு வது என்னவெனில், வரலாற்றில் நான் படித்த வரைக்கிலும், எனக்குத் தெரிந்தவரை, கான்ஸ்டன்டைன் ஒருபொழுதும் மனந் திரும்பி இரட்சிக்கப்பட்ட மனிதன் அல்லவே அல்ல. 54ஓர் இரவில் அவன் ஒரு சொப்பனங் கண்டான். அதில் அவன் ஒரு சிலுவையை கண்டான். இதன் காரணமாக அவன் யுத்தத்தில் வெற்றி பெற்றுவிடுவான் எனக் கூறினான். அவன் கிறிஸ்தவர்களிடம், தான் யுத்தத்தில் ஜெயிப்பதற்காக ஜெபித்துக் கொள்ளும்படியும், தான் ஜெயித்தால் தானே கிறிஸ்தவனாக ஆகி விடுவதாகவும், கிறிஸ்தவர்களுக்கு அதுவரை கொடுக்கப்பட்டு வந்த உபத்திரவங்களை நிறுத்தி அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தான். அவன் அன்றிரவில் படுத்து நித்திரை செய்து சொப்பனங் கண்ட அந்த பாலத்தின் கரையிலிருந்து எதிர்ப் பக்கத்து முனையில் நான் நின்று பார்த்தேன். அவன் அங்கு சொப்பனங்கண்டு விழித்து, எழுந்து, தன் கேடயத்திலும், தனது வீரர்களின் கேடயங்களிலும் வெண்மை நிறத்தில் சிலுவையை வரைந்தான். அங்கே தான் நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் என்ற நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. அது ரோமன் கத்தோலிக்க ஆதிக்கத்திற்குப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் ஒருபோதும் பக்தி மார்க்கத்துக்குகந்த எந்தவொரு காரியமும் செய்யவில்லை. அவன் மார்க்க சம்மந்தமாக செய்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரேயொரு காரியம் பரிசுத்த சோஃபியா ஆலயக் கட்டிடத்தின் மேல் ஒரு சிலுவையைப் பொறித்ததே. ஆனால் அவன் ஒரு அரசியல்வாதியாக இருந்தான். அவன் ரோமாபுரியில் அரசனாக இருந்தபொழுது, அவனும் இந்த அஞ்ஞான மதகுருவும் சேர்ந்து கொண்டு, குருக்களாட்சியின் பட்சமாய் சாய்ந்து கொண்ட கிறிஸ்தவ மார்க்கத்தையுடைய நிக்கொலாய் மதஸ்தர் என்றழைக்கப்பட்டு அவ்வேளையில் வெது வெதுப்பாய் இருந்த சபையை ஒருங்கிணைத்து உருவாக்கினார்கள். நாம் தானே, எபேசு மற்றும் சிமிர்னா சபைக் காலங்களில் நிக்கொலாய் மதஸ்தரைப் பற்றி ஏற்கனவே படித்தோம். 55நிக்கொலாய் மதஸ்தருடைய 'கிரியைகளாக' முந்தின சபைக் காலங்களில் விளங்கியவை. இப்பொழுது இச்சபை காலத்தில் நிக்கொலாய் மதஸ்தருடைய 'போதகமாக' ஆகி விட்டது. ஆதியில் அது 'கிரியைகள்' என்றிருந்தது. அங்கே அவர்கள் உள்ளே நுழைய முயற்சி செய்தார்கள். ஆனால் இங்கே இந்த மூன்றாம் சபையின் காலத்தில் அது “போதகமாக'' ஆகிவிட்டது. இப்பொழுது அவர்களுக்கு தலைமை மதகுரு மற்றும் பிரபலமான வர்களெல்லாம் உண்டு. இந்த சபைக்காலத்தில் தலைமை மத குருவை போப் என்று இன்னமும் அழைக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரதான அத்தியட்சகர் (Archbishop) மற்றும் பல கீர்த்தி வாய்ந்த பட்டங்களை சூட்டி அழைத்தார்கள். அவர்களுடைய உபதேசமானது சம்பிரதாய ரீதியில் உள்ளதாக இருந்தது. அவர்கள் ஆவியினால் நிறைந்த, பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்ட சபையினைவிட்டு தூரமாய் விலகிக் கொண்டே போனார்கள். ஆவியினால் நிறைந்திருந்த சபையை அவர்கள் அப்படியே சிறு கூட்டமாக போக விட்டுவிட்டார்கள். அவர்கள், இவர்களைப் போல் பெரிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ள ஒத்துக் கொள்ளாததால், அவர்களை ''மததுரோகிகள்'' என்று அழைத்தனர். ஆனால் உண்மையான சபையோ, பரிசுத்த ஆவியின் வல்லமையின் ஆளுகை வரம்புக்குள் சுயாதீனராக இருக்கவே விரும்பினர். ஏனெனில் கிறிஸ்து, அவர்களுக்கு இராஜா என்றும், அவர்களோடு இருப்பேன் என்றும் வாக்குத்தத்தம் செய்திருந்தார். ஓ! அவரே அவர்களின் இராஜா. 56உண்மையான சபையானது ஒரு போதும் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. தான் ஒரு குழுவினரால் ஆளப் படவோ... இப்பொழுது நீங்கள் அவர்களை எப்படி அழைக் கிறீர்களோ எனக்குத் தெரியாது. அவர்கள் கார்டினல்கள், அத்தியட்சர்கள், போப்புகள், பிழையே செய்ய முடியாதவர்கள் என்பதாக இருக்கிறார்கள். பிழையே செய்ய முடியாதவர் ஒரேயொருவர் தான் உண்டு என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் நமது இராஜாவாக இருக்கிறார்; இப்பொழுது பரிசுத்த ஆவியின் ரூபத்தில் நம்மோடு இருக்கிற இயேசு கிறிஸ்து தாமே அவர். தேவன் நம்மில் இருக்கிறார். நமது மத்தியில் வாசமாயிருக்கிறார். நம்மை வழிநடத்திச் செல்லுகிறார். அவர் நம்மை ஜீவத் தண்ணீரண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர் தம்மை யாரென்று வெளிப்படுத்துகிறார். ஆதிகாலத்து பரிசுத்தர்களுக்கும், இரத்த சாட்சிகளுக்கும், தாமே சிருஷ்டிப்பின் தேவனாகிய கர்த்தர் என்றும், பிணியாளிகளை சொஸ்தமாக்குகிறவர், மரித்தோரை உயிரோடு எழுப்புகிறவர், தரிசனங்களை காண்பிக்கிறவர், பிசாசு களைத் துரத்துபவர் என்று காண்பித்துக் கொண்டிருந்தது போல, நமக்கும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். 57வரலாற்றில் எந்தவொரு இடத்திலும், நிக்கொலாய் மதஸ் தரின் சபை அத்தியட்சகர்கள் எவரும், எந்த ஒரு சமயத்திலும், எங்காவது மரித்தோரை உயிரோடு எழுப்பியதுண்டா என்ற சான்றை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏனெனில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவர்களின் இருதயத்தில் வாசம் பண்ணவில்லை. இந்த நிக்கொலாய் மதஸ்தரின் சபை மதகுருக்கள் தான், பின்னால் ரோமன் சபையின் போப்பின் குருக்களாட்சி முறையை ஏற்படுத்தினார்கள். அவர்கள் தங்களுடைய வழிகளில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டு, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்குவதற்காக விலகிப் போய், அதின் மூலம் தங்களுடைய சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்டார்கள். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபையோ தன்னில் கிறிஸ்துவின் வல்லமையைப் பெற்று இருந்தது. ஆனால் உண்மையான சபை ஆவியானவரோடு நிலைத்து நின்றது. நீங்கள் புரிந்து கொள் கிறீர்களா? சரி. 58இந்த கான்ஸ்ட ன்டைன் அரசன் தன் இராஜ்யம் பிளவு படாமல் இணைந்து இருப்பதற்காக இந்த ஒரு காரியத்தைச் செய்தான். அவன் இந்த நிக்கொலாய் மதஸ்தரைத் தெரிந்து கொண்டு, அவர்களிடம் போனான். (இவர்கள் தான் கிறிஸ்தவ வழியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்கள்). நீங்கள் அதை தெளிவாக புரிந்து கொண்டீர்களா? அவர்கள் வெறும் பெயர்க் கிறிஸ்தவர்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமலேயே தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள். ஓ, உங்களுக்குள் இந்தக் காரியம், நீங்கள் இதை அசட்டையாக விட்டு விடாதபடி, ஆழமாகப் பதிய வேண்டும் என்று நான் விரும்பு கிறேன். பாருங்கள்? அது, பரிசுத்த ஆவியைப் பெறாத கிறிஸ்தவ பெயர் சூட்டிக் கொண்ட மதஸ்தாபனமாகும். அவர்கள் பெயரளவில் கிறிஸ்தவர்களாயிருந்தனர். அவர்கள் கூடிய வருதலால் கிறிஸ்தவர்கள் என்று காண்பித்துக் கொண்டனர். அவர்கள் இராப்போஜனம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் நியமங்களை ஆசரித்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் தலைமையை, அவருடைய வழிநடத்துதலை அவர்கள் நிராகரித்தனர். அவர்கள் மத்தியில் அற்புத அடையாளங்கள் இருக்கவில்லை, அவைகள் கடந்த காலத்தில் நடந்ததாக அவர்கள் கூறிக்கொண்டனர். ஒரு ஆளுகைக்காகவே தாங்கள் ஒரு சபையை நிறுவிட வேண்டி யுள்ளது என்று கூறினர். என்னவிதமான ஆளுகை என்பதைப் பற்றி இன்னும் ஒரு நிமிடத்தில் பார்ப்போம். பாருங்கள்? 59எனவே பரிசுத்த ஆவியைப்பெற்ற சபையானது, அவ்வித மான காரியங்களில் இருந்து தன்னை விலக்கியே வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், பெர்கமுவில், அக்காலத்துக்கென்று சொல்லப்பட்டவைகள் யாவும், அச்சபைக் காலத்துத் தூதனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில் இதைச் செய்வது தூதனுக் குரிய பொறுப்புதான். ஆனால் கான்ஸ்டன்டைன் மெய்க் கிறிஸ்தவ வழியைப் பற்றி கொஞ்சமேனும் அக்கறையுள்ளவனாய் இருக்கவில்லை. அவன் தன்னுடைய அஞ்ஞான முன்னோர்களின் வழியையும், அவனது அஞ்ஞான சபையையும் கொண்டுவர விரும்பினான். நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் மற்றும் போதகங்கள் ரோமா புரியில் ஆழமாக வேரூன்றிப் போய் ஒரு பெரிய ஆடம்பரத் தோற்றத்தையுண்டாக்கியது. அதில் இருந்த மக்கள் அநேகர் பெயரளவில் தான் கிறிஸ்தவ விசுவாசிகளாக, வெறும் ஆசார ரீதியில் இருந்தார்கள். உண்மையான சபை சிறுபான்மையினராக இருந்தது. எப்பொழுதும் அப்படியே இருந்தது. எப்பொழுதும் அப்படியே இருக்கும். அது ஆழமாக உங்களுக்குள் ஊறிப் பதியட்டும். அதற்காக ஒரு நிமிடம் காத்திருக்கிறேன். ஞாபகத்தில் வைத்திருங்கள். உண்மையான சபை எப்பொழுதும் சிறு கூட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. அது மற்ற சபைகளிலிருந்து வெளியே தள்ளப்பட்டவர்களின் கூட்டம். உண்மையான சபை ஒரு போதும் சடங்காச்சார மத ஸ்தாபனமாக ஆகவில்லை. அது புவியில் வாழும் காணக்கூடாத இயேசு கிறிஸ்து வின் சரீரமாகும். அதன் உறுப்பினர்களுக்குள் பரிசுத்த ஆவி யானவர் அசைவாடிக் கொண்டிருக்கிறார். எனவே, கிறிஸ்துவை நீங்கள் இயக்கமற்ற ஒரு ஸ்தாபனமாக ஆக்க முடியாது. நீங்கள் அவரை அவ்வாறு செய்ய முடியாது. இப்பொழுதுள்ள லவோதிக்கேயா சபையின் காலத்திற்கும் இதே நிலையை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டு மென்று நான் விரும்புகிறேன். இவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் உரைக்கிற ஒவ்வொரு வார்த்தையும், ஒலிநாடாவில் பதியப்பட்டிருக்கிறது. தேவனுடைய உண்மையான சபை ஒரு போதும் ஸ்தாபனமாக ஆக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை சிந்தையில் வைத்திருங்கள். 60கத்தோலிக்க சபை தான் உலகிலேயே முதலாவதாக ஏற்பட்ட ஸ்தாபனமாகும். அதற்கு முன்பாக ஸ்தாபனம் ஏதுமில்லை. கத்தோலிக்கர்கள் இன்று கூறுகிறபடி, அதுதான் “தாய்ச்சபை' ஆகும். அதுதான் ''தாய்'' சபையாகும். ஸ்தாபன சபைகளுக்கெல்லாம் தாய் அவள்தான். வேதம் அவளை அவ்வாறே அழைக்கிறது. எனவே நீங்கள் அதைக் குறித்து சர்ச்சை செய்ய முடியாது. அவர்கள் ''அதுவே தாய்ச்சபை” என்று சொல்லும் பொழுது, அது சரிதான். அவள் தான் தாய்ச்சபை. வெளிப்படுத் தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் அவளை சித்தரித்து காண்பிக்கப் பட்டுள்ளது. நாம் நேரடியாகவே அவளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். சரி. 61கான்ஸ்டன்டைன், தன் இராஜ்யபாரத்தை பெலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தை மனதில் கொண்டவனாய், (ரோமாபுரி எப்பொழுதும் அவ்வாறே செய்கிறது, உலகத்தின் திறவுகோல்களை தன்னிடம் பெற்றிருக்க அது விரும்புகிறது) தன் அஞ்ஞான மதத்தின் கொள்கைகளை கொண்டு வந்து, கிறிஸ்தவ போதனைகளை அகற்றிவிட விரும்பினான். இவ்வாறு செய்து எப்படியாயிலும் அவர்களை ஒருங்கிணைத்து, அதன்மூலம் தனது இராஜ்யபாரத்தை பிளவுபடாமல் பலப்படுத்திக் கொள்ளவும், தன் இராஜ்யம் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்கவும் விரும் பினான். அது கான்ஸ்டன்டைன் அரசனை உலகிலேயே தலை சிறந்த அரசன் என்று ஆக்கிவிடும். மனந்திரும்பின விஷயத்தில் அவன் ஒரு அரசியல்வாதி யாகவே இருந்தான். ஆனால் அவன் தேவனுடைய பரிசுத்தவான் அல்லவே அல்ல. (ஆனால் சிலர் அவனை அவ்வாறு ஆக்க முயற்சிக்கிறார்கள்). அவன் அவ்வாறு இல்லை. அவன் ஒரு போதும் கிறிஸ்தவ சத்திய வழிக்குக் கொஞ்சமாவது ஒத்து இருக்கும் எந்தவொரு கிரியையும் செய்ததாக எனக்குத் தென் படவில்லை. அவன் நிக்கொலாய் மதஸ்தரின் சபை ஒன்றில் ஒரு சிலுவையை ஸ்தாபித்தான். கிறிஸ்தவத்திற்கு சம்மந்தம் உள்ளது போல் காண்பித்த அந்த கிரியை ஒன்றுதான் அவன் செய்ததாகும். ஆனால் அது எனக்கு கிறிஸ்தவமாக தென்படவில்லை. அன்றிரவில் அவன் சிலுவையை சொப்பனத்தில் கண்டபோது, அவன் வீரர்களின் கேடயங்களில் சிலுவை அடையாளத்தைப் பொறித்தான். கிறிஸ்தவர்கள், அவன் யுத்தத்தில் ஜெயிக்க வேண்டும் என ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், அதனால் அப்படிச் செய்தான். அவன் அப்படிச் செய்தது, அவனது இராஜ்ய பாரத்தை பெலப்படுத்தும் என்பதினால் தான். இதை அவன் செய்வதற்காக, அவன் இந்த நிக்கொலாய் மத கிறிஸ்தவ சபையினுள், அஞ்ஞான வழிபாட்டு முறைகளைக் கொண்டு வந்தான். அவன், உருவாகிட்ட அதை, சடங்காச்சார சம்பிரதாய முறைகளைக் கொண்ட ஸ்தாபன சபை என்று தான் அழைப்பேன். அவன், இந்த நிக்கொலாய் மதஸ்தரின் சபைக்குள் அஞ்ஞான வழிபாடுகளை கொண்டு வந்தான். அதுவே கத்தோலிக்க மதம் பிறக்க அடிகோலியது. 62சகோதரனே, நான் இப்பொழுது வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஆயிரக்கணக் கான கத்தோலிக்க சிநேகிதர்கள் உண்டு. பிராடெஸ்டெண்டுகள் எனக்கு நண்பர்கள் போல இவர்களும் நண்பர்கள். ஆனால் ப்ராடெஸ்டெண்டுகள் அவர்களைப் பார்த்து சப்தமிட முடியாது. இன்றிரவு முடிகிற வரையிலும் பொறுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? ப்ராடெஸ்டெண்டுகளும் அதே காரியத்தைத்தான் செய்தார்கள் என்பதை நீங்கள் காணப்போகிறீர்கள். பானையானது கொப்பரையைப் பார்த்து, எண்ணெய் பிசுக்காய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. இதுவும் அப்படித்தான் இருக்கிறது. அதே ஆவிதான் அவர்கள் மத்தியிலும் நிலவி வருகின்றது. நான் ஏன் ஸ்தாபனத்தை கண்டனம் பண்ணி வருகிறேன் என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளப் போகிறீர்கள். ஏனெனில் அது தவறாக இருக்கிறது. என்னிலிருக்கிற ஆவியானவர் அவைகளுக்கெதிராக சப்தமிடுகிறார், அப்பொழுது என்னால் அதைப்பற்றி வாயை மூடிக்கொண்டு இருக்க முடியவில்லை. 63பெரிய ஊழியக்காரர்களும், மதத் தலைவர்களும் என்னிடம், “நீங்கள் உங்கள் ஊழியத்தைக் கெடுத்துக் கொள்வீர்கள். உங்க ளுக்கு சம்மந்தமில்லாததை எல்லாம் நீங்கள் செய்து கொண் டிருக்கிறீர்கள். அது உங்களுடைய வேலையல்ல. தேவன் உங்களை வியாதிப்பட்டவர்களுக்கு ஜெபிக்கத்தான் அழைத்தார், சகோ.பிரன்ஹாம் அவர்களே'' என்று கூறியிருக்கிறார்கள். தேவன் பிணியாளிகளுக்கு ஜெபிப்பதற்காக என்னை அழைத்ததுவுமல்லாமல் அதைவிட மேலான காரியத்திற்காகவும் என்னை அழைத்திருக்கிறார். பிணியாளிகளுக்காக ஜெபிப்பதன் மூலம் மக்களுடைய கவனத்தை ஈர்த்துக் கொள்ள முடிகிறது. அது அவ்வளவுதான். அதோடு அது முடிந்து விடுகிறது. பிணி யாளிகளுக்காக ஜெபிப்பது ஒரு சிறு காரியமாகும். செய்தி இருக்கிறதே, அது தான் நாம் முக்கியமாக பேசிக் கொண்டிருக்கிற காரியம் ஆகும். மற்ற காரியங்களெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். வியாதிப்பட்டிருக்கும் ஒரு மனிதன் வியாதியி லிருந்து குணமடைந்து, பிறகு மீண்டும் அவன் மரிக்கலாம். ஆனால் தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதனோ, நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறான். ஆகவே, தேவன் வெறுமனே சுற்றித் திரிந்து வியாதியஸ்தரை குணமாக்கிக் கொண்டு மட்டும் செல்லு வதில்லை. அந்த வரமானது சபையிலே, உள்ளூர் சபையிலே உள்ள ஒன்று. வரங்கள் சபையின் வழியாக கிரியை செய்து கொண்டே போகிறது. பாருங்கள்? ஆனால் நித்திய ஜீவனோ அதைவிட மேலானது. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். சரி. கிறிஸ்தவர்களைக் கவரவும், அஞ்ஞானிகளைக் கவரவும் வேண்டி அவர்களை ஒன்று சேர்த்து இணைத்து, ஒரு சபையாக உருவாக்கி, கத்தோலிக்க சமயம் பிறந்தது. 64என்னுடைய அறையில் யாரோ ஒருவர் கொடுத்த ஒரு தாளில் குறிக்கப்பட்ட குறிப்பொன்றை மறந்து வைத்து விட்டு வந்துவிட்டேன். ஓ, அதை நான் கொண்டு வந்திருக்க வேண்டு மென்று விரும்புகிறேன். அதில், இதேவிதமான காரியத்தை இன்றைக்கும் எவ்வாறு செய்து வருகிறார்கள் என்பது விவரிக்கப் பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் நீங்கள் அந்த மனிதனை தேர்ந்தெடுத்ததின் மூலம் அதைச் செய்ய ஆரம்பித்தீர்கள். இப் பொழுது அவர்கள், கத்தோலிக்கரைப் பாதிக்காத வரையிலும், யூதரைப் பாதிக்காத வகையிலும், ப்ராடெஸ்டெண்டுகளைப் பாதிக்காத வகையிலும் இருக்கத்தக்கதான, எல்லோரும் ஒத்துக் கொள்கிற மாதிரி உள்ள ஒரு வேதாகமத்தை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்களாம். எல்லோருக்கும் ஏற்ற மாதிரி உள்ள ஒரு வேதாகமம் அவர்கள் தயாரிக்கப் போகிறார்கள். இன்னொரு கான்ஸ்டன்டைனின் தந்திரத்தைக் கண்டீர்களா? வரலாறு திரும்பு கிறது. அதைப் பற்றி அன்றொரு இரவில் நான் ஒரு குறிப்பை படித்துக் காட்டினேன். அதை நீங்கள் கேட்டீர்களல்லவா? அக்குறிப்பை நான் வீட்டில் விட்டு வந்து விட்டேன். அவர்கள் நீண்ட காலமாக அம்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு வரு கிறார்கள். 22-வது போப் யோவான், அனைத்து மகள் சபைகளையும், தாய்ச்சபையிடம் திரும்பி வந்துவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். மகள் வந்து விடுவாள். அவர்கள் வந்துவிடுவார்கள். மகள் ஏற்கனவே திரும்பி வந்து விட்டாள். அவள் அங்கே உள்ளே வந்துவிட்டாள். அவர்கள் திரும்பி போக வேண்டிய தேவையில்லை. ஏனெனில் ஏற்கனவே, அவர்கள் அம்மாவிடம் திரும்பிப் போய் விட்டார்கள். 65நான் கூறியது போல, “இந்த தேசம் கூறியது: திருவாளர் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டால், கத்தோலிக்கர்கள் மேற் கொண்டு விடுவார்கள்'' என்று. மேற்கொண்டுவிடுவார்களா? நீண்டகாலத்திற்கு முன்பாகவே அவர்கள் அதைச் செய்துவிட் டார்கள். ஆனால் நீங்கள் தான் அதை அறியவில்லை. அவர்களுடைய ஆசிரியர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள்? எவ்வாறு அவர்கள் தங்களுடைய பள்ளிகளுக்கு இதெல்லாம் கிடைக்கும்படி செய்து கொண்டு, கத்தோலிக்க சமயாசாரக் கோட் பாடுகளை எவ்வாறு தங்கள் பள்ளிகளில் கற்பிக்கிறார்கள்? வரி செலுத்துகிற நீங்கள் அதற்காகவும் செலுத்துகிறீர்கள்? தேவையற்ற ஒன்றுக்கு வரி செலுத்துகிறீர்கள். உங்கள் கண்களுக்கு முன்பாக இக்காரியம் நடைபெறுகிறது என்பதைப் பாருங்கள். ஓ, அவன் எவ்விதமாய் கிரியை செய்திருக்கிறான்! வேதம் கூறுகிறது; அவன் முகஸ்துதிகளினால் அதை எடுத்துக் கொள்வான் என்று. அவன் அவ்வாறே செய்தான். இன்னும் அநேக காரியங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். நான் இத்தோடு நிறுத்திக் கொண்டு விஷயத்திற்கு திரும்பிப் போக வேண்டும். கான்ஸ்டன்டைன், தான் ஏற்படுத்தின காரியங்கள் தடையின்றி தொடர்ந்து நடந்துகொண்டே போக, அவன் சபைக் குள்ளாக, அஞ்ஞானிகள் மற்றும் கிறிஸ்தவர்களின் கவனத்தை கவரும்படியாக, ஏராளமான உலகப் பிரகாரமான பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்தினான். நீங்கள் ஆவிக்குரிய சிந்தையைக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் சிந்திக்கிறீர்களா? இது இவ்வேளைக்குரிய செய்தியாக இல்லையா? சபையில் சூதாட்ட சீட்டு விளையாட்டு, விருந்துகள், கார்சாவி மாற்றிக்கொள்ளும் களியாட்டு, என இப்படியாக அவர்கள் ஒன்றாக கலக்க, இவை யெல்லாம் உள்ளன. அந்த வல்லரசை இப்படியாக மீண்டும் ஒன்று சேர்த்து, ஒரு குறிப்பிடத்தக்க ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள கிரியை நடக்கிறது. இப்பொழுதே நடக்கிறது. 66அது வரலாறாக இருக்கிறது. இதில் எவருக்கும் எந்தவித சுயநலமும் இலாப நோக்கும் கிடையாது. என்ன நடந்ததோ அதை பாரபட்சமில்லாமல் வரலாற்றாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிக்கொலாய் மதஸ்தருடைய சபையை ஒருங்கிணைக்க, சபை ஐக்கியமாக இருப்பதற்காக, அவன் உலகப் பிரகாரமான உல்லாசப் பொழுதுபோக்குகளை சபையில் கொண்டு வந்தான். ஆனால் அவனால் மறுபடியும் பிறந்த சபையைத் தொடவே முடிய வில்லை. ஆனால் மத ஆசாரங்களைக் கொண்ட நிக்கொலாய் மதஸ்தரின் சபையோ அதற்கு பலியாகியது. நமது ப்ராடெஸ்டெண்டு சபைகளில் இன்று என்ன இருக் கிறது? இரவுநேர சமுதாய விருந்துகள், களியாட்டுகள், சறுக்கி விளையாடுதல், (ஓ, என்னே !), துணி விற்றல் மற்றும் இன்ன பிற காரியங்கள் உள்ளன. அது உண்மையென்று நீங்கள் அறிவீர்கள். அனைத்து ப்ராடெஸ்டெண்டு சபைகளும் அதைப்பற்றிய விஷயத் தில் குற்றமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறதென்றால், அது சத்தியமாயிருக்கிறது. 67இவ்விதமான இரவு நேர சமுதாய விருந்துகளையும், நடன நாட்டிய நிகழ்ச்சிகளையும் அடித்தளத்தில் நடத்துகிறார்களே, இதெல்லாம் தங்களுடைய சபைப் போதகருக்கு, தசமபாகம் கொடுப்பதற்குப் பதிலாக, அதற்குப் பிரதியாக ஏதாவது கொடுத் துத் தீர்ப்பதற்காகத்தான். இவையெல்லாம் தேவனுடைய திட்டம் அல்ல. மக்கள் தங்கள் தசமபாகங்களை செலுத்த போதிக்கப்பட் டிருந்தால் அதுவே சிறந்தது ஆகும். அது தேவனுடைய திட்ட மாயிருக்கிறது. தேவனுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் மனிதனோ, தன்னுடைய திட்டத்தை தேவனுடைய திட்டத்தோடு கலப்படம் செய்துவிடுகிறான். 68இவ்வாறெல்லாம் அக்காலத்தில் அவர்கள் செய்து, தங்களை ஒருங்கிணைத்து, ஆதிக் கத்தோலிக்க சபையை உருவாக்கினார்கள். அதன்பிறகு அந்த முதலாவதான நிசாயா ஆலோசனை சங்கத்தில் அதைப் பற்றி நான் படிக்கையில், நான் முழங்கால்படியிட்டேன். மகத்தான நிசாயா ஆலோசனை சங்கம் கி.பி.325ல் கூடிய பொழுது, யாவரும் ஒன்றாக இணைக்கப்பட்டனர். அத்தியட்சகர்கள், கிறிஸ்தவ விசுவாசப் பிதாக்கள் எனப்பட்டவர்களும் நிசாயாவில் கூட்டி சேர்க்கப்பட்டனர். அது கி.பி.325ல் நிசாயா என்ற இடத்தில் நடந்ததால் தான் நிசாயா ஆலோசனை சங்கம் என்றழைக்கப்படு கிறது. 1500 பிரதிநிதிகள் இந்த மாபெரும் மகாசபைக்கு வந்து கலந்துகொண்டனர். வந்திருந்த பிரதிநிதிகளில் சபையின் மக்கள் அத்தயிட்சர்களைவிட அதிகமாக இருந்தனர். அதாவது ஐந்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் சபை ஜனங்களும், அத்தியட்சகர்களும் முறையே இருந்தனர். ஆனால நிக்கொலாய் மதத்தினராகிய குளிர்ந்துபோன, சடங்காச்சார சபை மற்றும் கான்ஸ்டன்டைனின் அரசியல் ரீதியிலான வஞ்சகத் திட்டத்தின் மூலமாக உண்மை யான சபையானது தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் வென்றார்கள். அதின் பேரில், (மனிதன் பரிசுத்த குருத்துவ ஒழுங்கின் மூலம்) எல்லா அதிகாரமும் அத்தியட்சர்கள், கார்டினல்கள், போப்புகள் ஆகியவர்களுக்கு கையளிக்கப்பட்ட, பரிசுத்த ஆவியானவர் கூட் டத்தைவிட்டு அகற்றப்பட்டார். 69கடந்த தேர்தலில் இதேவிதமான வஞ்சகச் செயலை ஜனநாயகக்கட்சி செய்தது. அது உண்மை . குடியரசுக் கட்சியினருங் கூட அதேவிதமாக கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றி நான் சொல்லிக் கொண் டிருக்கிறேன். கலிபோர்னியா மற்றும் ஏனைய இடங்களிலும் ஒரு விதமாக ஓட்டுப் போடும் இயந்திரங்களை நிறுவியிருந் தார்கள். அதில் நீங்கள் நிக்சனுக்கு வாக்களித்தால், கென்னடிக்கும் ஒரு வாக்கு பதிவாகிவிடுமாம். அந்த அளவுக்கு வஞ்சகமாக அதைச் செய்திருந்தார்கள். அதைப்பற்றி நிரூபித்து விட்டார்கள். (எட்கர் ஹூவர் என்பர்). இப்பொழுது அந்த தவறு நிரூபிக்கப்பட்டு விட்டது. அப்படியிருந்தும் ஏன் இன்னமும் அவர்கள் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? நாம் அப்படிப்பட்டதான ஒரு வேளையில் ஜீவித்துக் கொண்டிருக் கிறோம். நாம் கடைசி காலத் தில் இருக்கிறோம். அவர்கள் மோசடியாக இதைச் செய்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட போதிலும், அதைப்பற்றி ஏதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். 70அது அன்றைக்கு இருந்த வஞ்சக திட்டமாக இருந்தது. இன்றைக்கு அதன் மறுபிறப்பையும் இக்காலத்தில் பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட மனிதனை தேர்ந்தெடுக்கவும், ஒரு போதகத்தை நம்பவைத்து ஏற்றுக் கொள்ள வைக்கவும். இவ்வஞ்சகம் கிரியை செய்கிறது. நிக்கொலாய் மதஸ்தருடைய போதகம், முன்பு ''கிரியை''களாக மட்டுமே இருந்து வந்தது. இப்பொழுது அது “போதகம்'' ஆகிவிட்டது. ஆனால் ஸ்மித்தின் நாட்களில் ஒரு கிரியைகளாக இருந்தது, இப்பொழுது போதகமாக ஆகிவிட் டது. அல் ஸ்மித்தின் நாட்களில் ஒரு கிரியைகளாக இருந்தது, இப்பொழுது போதகமாக ஆகிவிட்டது. உ-ஊ, உ-ஊ. இப் பொழுது இங்கே நம்மேல் வந்து இருக்கிறது. ”ஓ அவன் ஒரு கவர்ச்சிகரமான ஜனாதிபதியாக திகழுவான்'' என்கிறார்கள். அதைப் பற்றி என் மனதில் எந்த சந்தேகமுமில்லை. அடுத்த பதவிக் காலத்திற்காக, அவன் இந்த அஞ்ஞானிகளையும் சடங்காச்சார கிறிஸ்தவர்களையும் ஒன்று சேர்த்து இணைத்து வைப்பான். கார்டினல்களையும், போப்புகளையும் ஒன்று சேர்ப்பதற்காக, அவர்கள் ஒரு வேதாகமத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆங்கிலிகன் சபையின் ஆர்ச் பிஷப் அவர்களை, இங்கிலாந்தில் இருந்தபொழுது சந்தித்தேன். அவருடன் நான் கைகுலுக்கினேன், சம்பாஷித்துக் கொண்டிருந்தேன். ஒரு விதமான விசித்திரமான அங்கியுடுத்தியவராக அவர் இருந்தார். ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆங்கிலிகன் சபை ஆர்ச் பிஷப் தான் போய் போப்பை சந்தித்தார். அது என்ன? நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். 71எனவே தான் நான் எங்கே ஒரு மேடையில் நின்றிருந்து, பிரசங்கித்து, வியாதியஸ்தரக்காக ஜெபிக்கிறதற்குப் பதிலாக, இங்கே நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் யாவரையும் நான் இங்கே இந்த மேடையில் இருந்து சந்திக்க இயலாது. (இந்த செய்திகள் ஒவ்வொன்றாக வருகின்றன). எனவே தான் நாம் இச் செய்திகளை ஒலி நாடாவில் பதிவு செய்து உலகம் முழுவதும் அனுப்பி, அவர்களை எச்சரித்து, விசுவாசத்திற்கு திருப்புவதற்காக செய்து கொண்டிருக்கிறோம். ஆதி கிறிஸ்தவ காலத்தின் இறுதியில், வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்திற்கு முன்னால் உள்ள யூதாவின் நிருபம் எழுதப்பட்டது. பரிசுத்த யூதா இயேசுவின் வளர்ப்பு சகோதரன், அதாவது இயேசுவோடு உடன் வளர்க்கப்பட்ட சகோதரன் என்று கருதப்படுகிறது. 'பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாக போராட வேண்டும்'' என்று யூதா எழுதினான். கர்த்தராகிய இயேசுவின் மரணத்திற்குப் பின்னால் அவர்கள் விசுவாசத்தை விட்டு வழி விலகிப் போனார்கள். இப்பொழுதோ அவர்கள் இன்னும் எவ்வளவு அதிதூரமாக விலகிப் போய்விட்டார்கள்! பாருங்கள்? 72இந்த முதலாவதாக நிசாயா ஆலோசனை சங்கம் கி.பி.325ல் நடைபெற்றது. சுமார் 1500 பிரதிநிதிகளும் அத்தியட்சகர்களும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் சபையை, ஜனங்களை, அந்தக் குழப்பமான, கொந்தளிப்பான நிலையில் இருந்த அந்த ஆலோசனை சங்கத்தில், மதகுருக்கள் கை ஓங்கி, அவர்கள் இவர்களை கட்டப்படுத்தி விட்டார்கள். அவர்கள் மக்களை தடுத்தாட்கொண்டு, நிக்கொலாய் மதஸ்தர் சபையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, அந்த சார்பாக வாக்களித்தார்கள். இதனால் சபைக்கு இருந்த அதிகாரமானது அத்தியட்சகர்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்கள் தான் சபையை ஆளவேண்டும் என்றும், அவர்கள் தான் வார்த்தையின் பேரில் எந்தவொரு வியாக்கியானமும் செய்ய வேண்டும் என்றும் ஆக்கப்பட்டது. இன்றைக்கு கத்தோலிக்க சபையில் உள்ள நிலையை நீங்கள் கவனித்தீர்களா? ''வேதத்தை வாசிக்க உங்களுக்கு அனுமதி கிடையாது. அதற்கு வியாக்கியானம் கொடுப்பது உங்களுக்கு அடுத்தது அல்ல. அத்தியட்சகர் தான் செய்ய வேண்டும்'' என்ற நிலை உள்ளது. அது எங்கிருந்து வந்தது என்று பாருங்கள். இப் பொழுது நிக்கொலாய் மதஸ்தர் எவ்வாறு தந்திரமாக மெல்ல தவழ்ந்து ஊர்ந்து உள்ளே நுழைவதற்கு முன்னால், எப்படியிருந் தார்கள் என்பதை நீங்கள் காண முடியும். அங்கேயே தான் அது பிறந்தது. அது உண்மை . அது கிறிஸ்தவ வேஷம் போட்டது. இன்னமும் அப்படியேதான் உள்ளது? அதன்பிறகு ப்ராடெஸ்டெண்டுகள் அதே மாதிரியாக இருக் கிறார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில், வேதம் கூறுகிறது, ''தாயும் அவளுடைய குமாரத்திகளும்'' என்று. கர்த்தருக்கு சித்தமானால் கொஞ்ச நேரத்தில் அதைப் பற்றி பார்ப் போம். இன்றைக்கும் அதேவிதமாகத்தான் உள்ளது. அவர்கள் கைவசப்படுத்திக் கொண்டு விட்டார்கள். கான்ஸ்டன்டைன் பிலேயாமின் உத்தியையே கடைப்பிடித்தான். 73இப்பொழுது நீங்கள் உங்களால் முடிந்த அளவு இதை மிகவும் கவனமாக கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கே, தேவன் வேதத்தில் இவ்வாறு கூறுகிறார்; ''என் விசுவாசத்தை நீ பற்றிக்கொள்'' என்று. “... சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப் பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போகதத்தைக் கைக்கொள்ளு கிறவர்களும் உன்னிடத்தி லுண்டு”. (அப்படிப்பட்டவர்கள் இங்கே இல்லை, அங்கே இருந்தார்கள். “பெர்கமு சபையில் அங்கே உன்னிடத்தில் இருக்கிறார்கள்'') வெளி.2:14 பிலேயாம் கையாண்ட அதே உத்தியைத் தான் கான்ஸ்டன் டைனும் கையாண்டான். நிசாயா ஆலோசனை சங்கம் கூட்டத் திற்குப் பிறகு, அவர்கள் ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். நிசாயா கூட்டத்தில், அத்தியட்சகர்களை சபைகளின் மேல் ஆதிக்கம் செலுத்த வைத்து, சபையிடமிருந்து அனைத்து அதிகாரத்தையும் பறித்துவிட்டார்கள். ''சபையார் தங்களுக்கென சிந்தித்துப் பார்க்க தேவையில்லை. வேதவாக்கியங்களை வியாக்கியானிக்கவும் அவர் களுக்கு எந்த உரிமையும் இல்லை'' என்று ஆக்கப்பட்டது. வேத வாக்கியங்களைப் பற்றி வியாக்கியானிக்கவும் மற்றும் இன்ன பிற காரியங்களையும் செய்யயும் மதகுருவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. 74இறுதியாக, சிறிது காலத்திற்குப் பின்பு, அவர்கள் ஒரு பிரதான குருவை ஏற்படுத்தினார்கள். அவன் தான் போப், பிரதி-குரு. ஆனால் இப் பொழுது, “எல்லா ஞானமும் அறிவும் மதகுருவுக்கே உரித்தான தாகும். எனவே சபையார் வேதத்தைப் படிக்க வேண்டியதில்லை; அவர்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை'' என்ற அளவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். வெளிப்படையாகச் சொன்னால், வேதபுத்தகம் அவர்களிடத்தி லிருந்து தங்களுக்கென எடுத்துக் கொண்டு விட்டார்கள். அது நல்லதாக காட்சியளித்ததால், சபையின் மக்களுக்கென அவர்களே இதைத் தெரிந்துதெடுத்து விட்டார்கள். அவர்கள் ஐசுவரியவான்களாக இருந்தபடியால், அந்தக் காரியம் நல்லதுபோல் தோன்றியது. அந்தப் பெரிய நிசாயா ஆலோசனை சங்கம் கூட்டத்தில் கான்ஸ்டன்டைன் அத்தியட்ச கர்களுக்கு அருமையான கட்டிடங்களைக் கொடுத்தான். அவனிடம் ஏராளமான பணமும் பெரிய பெரிய கட்டிடங்களும் இருந்தன. அவன் அவைகளிலிருந்து சபைக்கென, அவர்கள் சபை வீடுகளாக உபயோகிக்கும்படி கொடுத்தான். ஓ, அவை அருமையான கட்டி டங்கள். அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவைகளை அவன் சபைக் கென்று கொடுத்தான். 75அதுவுமல்லாமல், அவ்வரசன், அந்த அத்தியட்சகர்களை மகத்தான பெரிய அங்கிகளினால் உடுத்துவித்து, நல்ல உள்ளாடை களையெல்லாம் செய்வித்தான். அதுவுமன்னியில், பெரிய கட்டி டத்தை கட்டி, அதில் அவர்களை விக்கிரகம் போல் அமர வைத் தான். அவர்கள் அமர்ந்திருக்கிற இடத்திற்குக் கீழாக, சலவைக் கற்களால் ஆன பீடங்களையும் உண்டாக்கினான். அஞ்ஞான வழிபாட்டில் காணப்படும் முறைமைகளை அப்படியே கடைப் பிடித்து, அவற்றிற்கு கிறிஸ்தவ சாயம் பூசி, அதில் அத்தியட்சகரை வைத்துவிட்டான். பாருங்கள். அவர்கள் விக்கிரகத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் அத்தியட்சகரை வைத்துவிட்டனர். பாருங்கள், அவனுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அதே காரியம், அவனை தேவனாக ஆக்கிவிட்டனர். அத்தியட்சகரை அங்கே ஏற்படுத்தி, அவன் சொல்வதே சட்டம் என்று ஏற்படுத்தி, அவன் சொல்வதே சட்டம் என்று ஏற்படுத்தி, அவனை மிக அலங்காரமாக உடுத்தி, ஒரு தெய்வம் போல் மக்களுக்கு காட்சி யளிக்கத்தக்கதாக வைத்தார்கள். அவர்களுடைய அஞ்ஞான தேவர்களைப் போல் அத்தியட்சகர் காட்சியளிக்க வைப்பதை செய்யாமல், இயேசு அணிந்திருந்தது போல ஒரு அங்கியை அவனுக்கு உடுத்துவித்தனர். பாருங்கள்? அத்தியட்சகரை ஒரு விக்கிரகத்தைப் போல் தோற்றமளிக்கும்படி உட்கார வைத்தனர். ஓ, அன்றைக்கு இருந்த அஞ்ஞானி ஒருவன் என்ன சொல்லியிருப்பான் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம். “நல்லது, அங்கே நம்மோடு பேசி நமக்கு பதிலளிப்பதற்கு ஒருவர் இருக்கிறார், எனவே அந்த ஆலயத்திற்குப் போவோம். நாம் இது வரைக்கிலும் பேசமாட்டாத ஒரு விக்கிரகத்தோடு மட்டும் பேசிக் கொண்டிருந்தோமே'' என்று. 76கிறிஸ்தவர்கள் எவ்வாறு எண்ணியிருப்பார்கள் என்பதை கற்பனை செய்யுங்கள்; ''நல்லது, அது ஒரு அருமையான காரியம் தான். நாம் விரும்பும் எந்தவொரு காரியத்தையும் நாம் செய்து கொள்ளலாம். ஏனெனில் நம்முடைய தேவன் அங்கிருக்கிறார். அவரிடத்தில் நாம் பேசலாம். அவரும் நமக்கு மறுமொழி கொடுப்பார், நாம் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்ல. நாம் பாவம் செய்தால் நாம் அதைப்பற்றி அவரிடம் போய் அறிக்கை செய்துவிடலாம். ஏதாவது கொஞ்சம் அவருக்கு நாம் கொடுத்தால் போதும், அல்லது சிறிது நோவீனோ செய்தாலும் போதும் இவைகளையெல்லாம் செய்து விட்டால் அப்பொழுது நாம் சுத்தமாகி விடுகிறோமே. எனவே மறுபடியும் புறப்பட்டுச் சென்று, விருப்பப்படி நாம் செய்து கொள்ள நாம் விடுதலைடையந் திருக்கிறோம். எதைப்பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை'' என்று கூறியிருப்பார்கள். மாம்ச சிந்தையுள்ள மனிதனுக்கு இன்னமும், ''ஓ, அது நன்றாகத் தான் காணப்படுகிறது, நிச்சயமாக'' என்று சொல்லுகிற அளவுக்கு அது இருக்கிறது - ஆனால் மறுபடியும் பிறந்த தேவ பிள்ளையிடம் நீங்கள் அதை நுழைத்துவிட முடியாது. உங்களால் மறுபடியும் பிறந்த தேவபிள்ளையை அந்த வழிக்கு மாற்ற முடியாது. அவன், தான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந் திருக்கிறான், அவரிடத்தில் அவன் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறான். பின்னானவைகளை மறந்து, முன்னான வைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி அவன் தொடருகிறான். ஆமென்! ஓ, நான் எவ்வளவாய் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்! 77சலவைக்கல் பலிபீடம் அவனுக்கு கீழாக அமைக்கப்பட்டது. பிரமாதமாக உடுத்தியிருந்த, சொகுசான சபை. ஓ, என்னே , எல்லாம் நேர்சீராயிருந்தது. இந்த பலிபீடம் சலவைக் கற்களால் கட்டப்பட்டு, மிகவும் அழகாக இருந்தது. நீங்கள் அதைப் பார்க்க வேண்டும். அதேவிதமாகத்தான் இருக்கிறது. பொன்னினாலும், முத்துக்களினாலும், ஆபரணங்களினாலும் பலிபீடம் அலங்கரிக் கப்பட்டிருந்தது. அது அழகாயிருந்தது! நிக்கொலாய் மதஸ்தருக் கும், அஞ்ஞானிகளுக்கும் ஏற்றதாக அது அமைந்திருந்தது. அவன் என்ன செய்தான் என்று பார்த்தீர்களா? அவன் அஞ்ஞானிகளின் அனுஷ்டான ஆசாரங்களையும், அஞ்ஞான கொள்கைகளையும் எடுத்துக் கொண்டான், கிறிஸ்தவ மார்க்கத்தையும் எடுத்துக் கொண்டான். நிக்கொலாய் மதத்து கிறிஸ்தவர்களோ, வெறும் சடங்காச்சாரமானவர்களாகவும், அறியாமையுள்ளவர்களாகவும் வித்தியாசமாக நடத்தப்படுவதற்காக பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர்களாகவும் இருந்தார்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவர்களுக்கென ஒரு தேவனை பூமியில் உண்டாக்கி, அவர்களுக்கென்று ஒருபலி பீடத்தையுண்டாக்கி, அவர்கள் பாவங்களை மன்னிக்க அங்கே அமரத்தக்கதான ஒரு தேவனையும் உண்டாக்கிக் கொடுத்தான். நீங்கள் ஆவிக்குரியவர்களா? நான் சொல்லுவதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அது என்னவென்று பாருங்கள். பாவமானது பூமியில் பாவமன்னிப்பை கொடுத்துக் கொண்டிருந்தது. நான் இதை என்னுடைய சிந்தையிலிருந்து எடுத்துக் குறிப் பிடவில்லை. அது வரலாறாக இருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன் மற்றும் கெட்டிஸ்பெர்க் யுத்தத்தைப் பற்றி யும் நான் குறிப்பிட்டால் அது எந்த அளவுக்கு உண்மையாக இருக்குமோ அதை போல் இதுவும் இருக்கிறது. வரலாற்றில் பக்கம், எண் இவைகளை நான் குறிப்பிட்டுக் கூற முடியும். தூய்மை யானதாக வரலாறும் இருக்கிறது. நான் குறிப்பிடுகிற இவைகளெல்லாம் வரலாற்று ரீதியாக இருக்கிறது. 78சபையில் ஏற்படுத்தப்பட்ட இக்காரியங்கள் ஜனங்களுக்கு மிகவும் ஏற்படையதாய் இருந்தது. ஆனால் மறுபடியும் பிறந்த சபைக்கு அல்ல. இல்லை, ஐயா! அவர்கள் அங்கே ஒரு மனிதனை அத்தியசட்கராக நியமித்து, அவன் அனுஷ்டான ஆசாரங்களுக்கான மந்திரங்களை உச்சாடனம் செய்யும்படி செய்தார்கள். அதினால் பூரண சுவிசேஷம் முழுவதும் வெளியே தள்ளப்பட்டது. இன்றைக்கும் அவ்வாறே அது செய்யப்படுகிறது. அந்த காலங்களில் நடந்த காரியங்கள்யாவும் அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு காலத்திற்குள்ளும் நீடித்து பரவி வந்தது, பாருங்கள். வேறு ரூபத்தில், வேறு நாளுக்குள் என்று இருந்தது. ஓ, அவர்கள் அங்கே ஒரு பெரிய கனவானை தேவனைப் போல் வைத்த போது, அவன் சில ஆசாரமான ஜெபங்களை சொல்லி வந்தான். அஞ்ஞானிகள் தங்களுடைய இறந்து போன முன்னோர் களிடம் வேண்டுதல் செய்து வந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். ஒரு ப்ராடெஸ்டெண்டு சபையானது நின்று கொண்டு, “நான் பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையையும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுகிறது. மெதோடிஸ்டுகளே, ப்ரெஸ்பிடேரியன்களே, லூத்தரன்களே, உங்கள் முகங்களை மூடிக் கொள்ளுங்கள். மரித்த ஆவியோடு பரிந்து பேசுகிறதாகச் சொல்லுகிற எச்செயலும், செத்த ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் பிசாசுக்கடுத்த உபதேசமாகும். ஆனால் இப்பொழுது ப்ராடெஸ்டெண்டுகள் கத்தோலிக்கரைப் பார்த்து பரிகசிக்க முடியாது. ஏனெனில் அவர்களும் இதே காரியத்தையே செய்கிறார்கள். கத்தோலிக்கரின் இந்த சர்வ பரிகார சர்வ பிரயோஜன அறிக்கையை இவர்களும் விசுவாசித்து அதைச் செய்கிறார்கள்; கத்தோலிக்க முறையிலேயே தண்ணீர் ஞானஸ் நானத்தையும் கொடுக்கிறார்கள். சரியான ஒழுங்கிலே வாழ முயலும் மக்களை இவர்கள் புறக்கணித்து, அவர்களை கேலி செய்கிறார்கள். தேவனுடைய வல்லமையால் ஆரவாரிக்கும் மக்கள் நிறைந்த ஒரு சபைக்குச் சென்று, அங்கே வெளியே நின்று கொண்டு அவர்களை பரிகசிக்கிறார்கள். இவையனைத்தும் செய்கிறார்கள். 79பாருங்கள், ஆவிகள் மரிப்பதில்லை. மக்கள் மரிக்கிறார்கள். ஆனால் ஆவிகள் மரிப்பதில்லை பாருங்கள். பரிசுத்த ஆவி மரிக்க முடியாது. அது இயேசுவிலே இருந்தது. இப்பொழுது அவரது சபையில் இருக்கிறது. அது தொடர்ந்து, அவர் தமது சபைக்காக திரும்ப வருகிற வரைக்கிலும், அவர்களில் நீடித்தும் இருக்கும். ஏனெனில் அவருடைய ஒரு பாகமாக அவர்கள் இருப்பதினால் தான். பாருங்கள்? கிறிஸ்தவர்களை அன்றைக்கு துன்பப்படுத்தினார்கள், அவர்களை அந்நாட்களில் பரிகசித்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு ஜீவிக்கிறார்கள். தேவன் தன்னுடைய மனிதனை பூமியிலிருந்து எடுக்கிறார், ஆனால் தன்னுடைய ஆவியை பூமியை விட்டு எடுத்துக் கொள்ளவில்லை. பிசாசு தன்னுடைய மனிதனை எடுத்து விடுகிறான். ஆனால் ஆவியையோ பூமியி லிருந்து எடுப்பதில்லை. இயேசுவின் மரணத்தை தீர்ப்பளித்த அந்த ஆசாரியர்கள், அவரை குறிசொல்லுகிறவர் அல்லது பிசாசு என்று அழைத்தார்கள்; அவர்கள் பெரிய பக்திமான்கள். அது உண்மை . அவர்கள் வேத வாக்கியத்தை எழுத்தின்படியே அறிந்திருந்தார்கள். ஆனால் அதற்குரிய உண்மையான வியாக்கியானத்தையோ அறியாதிருந் தார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த அபிப்பிராயத்தை உடையவர்களாய் இருந்தார்கள். எனவே அவர்கள் வேறு எதற்கும் செவி கொடுக்க மாட்டாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் அவரைக் கண்டபொழுது, இயேசுவைக் குறித்து ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கூறினவைகளை நிறைவேற்றத்தக்கதாக இயேசு அப்படியே சரியாக இருந்தபோதிலும், அதை எவ்வாறு அவர்கள் காண தவறினார்கள்! அவர்கள் குருடாயிருந்தார்கள். நாம் இரட் சிப்புக்கான தருணத்தை அடையும்படி, தான் அவர்களை ஒரு நோக்கத்திற்காக குருடாக்கினார் என்று தேவன் கூறினார். 80இப்பொழுது வேதம் மீண்டும் இதை முன்னுரைத்துள்ளது; பெந்தெகொஸ்தேயின் யுகத்தில் நாம் இருக்கிறோம். இக்காலத்தைப் பற்றி, “நிர்வாணி, நிர்ப்பாக்கியமுள்ளவன், குருடன், அதை அறியாமலிருக்கிறான்'' என்று சொல்லப் பட்டுள்ளது. பிலதெல்ஃபியா சபையில், சபை சடங்காச்சாரம் இருந் தது. ஓ, சடங்காச்சாரமான பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரி யன்களே, பெந்தெகொஸ்தேயினரே, நீங்கள் அங்கே இருப்பதைப் பாருங்கள். சில சமயங்களில் இங்கே உட்கார்ந்து இருக்கிற உங்களை நான் குறிப்பிடுகிறதில்லை. என் செய்தி ஒலி நாடாவில் பதியப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அது எங்கே போகிறது என்பதை நான் அறிவேன். பாருங்கள்? மனந்திரும்புங்கள்! வேதத்திற்குத் திரும்புங்கள்! கிறிஸ்துவிடம் திரும்பி வாருங்கள்! 81சரி, பூரண சுவிசேஷம் வெளித்தள்ளப்பட்டது. சபையில் இருந்த அடையாள அற்புதங்கள் இல்லாமற் போய்விட்டன. தங்கள் நடுவிலிருந்து பரிசுத்த ஆவியைப் பெற்ற மக்களை அவர்கள் வெளியே தள்ளிய பொழுது, அற்புத அடையாளங்கள் இருந்த அப்படியொரு நாளே இருந்ததில்லை என்று மறுதலிக்கவும் செய்தார்கள். இன்றைக்கும் அதே காரியத்தைத் தான் செய் கிறார்கள். அவ்வாறே இன்னும் செய்கிறார்கள். அதனுடைய ஆவியை உங்களால் காண முடியவில்லையா? நான் ஆரம்பத்தில் கூறியவாறு, நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள். தேவன் தாமே உங்களது இருதயத்தை திறப்பாராக. முன் கூட்டியே ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். உட்கார்ந்து செவி கொடுத்து, “பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வெளிப்படுத்தும், நான் காண் கிறேன். அதோ அது அவ்வாறேயுள்ளது'' என்று கூறுங்கள். 82மத அனுஷ்டானங்கள், எங்கே அவையுள்ளன? பாப் டிஸ்டுகள், ப்ரெஸ்பிடெரியன்கள், ஏன் பெந்தெகொஸ்தேயினர் கூட, மதசடங்குகளை உடையவர்களாக ஆகிவிட்டார்கள். ஒரே யொரு காரியம் என்னவெனில், பியானோவை அடித்து வாசித்து, மேலும் கீழும் குதித்து ஆரவாரிக்கிறார்கள். பியானோ இசை நின்றதும், வெளியே போகிறார்கள். அங்கிருந்து வெளியே புறப் பட்டுப் போய், திருடி, ஏமாற்றி, பொய் சொல்லி மற்றும் இன்ன பிறகாரியங்களைச் செய்கிறார்கள். ஆனால் உண்மையான வர்களோ அப்படியில்லை. இவர்களுக்கு வம்புச் சண்டை போடவும், போதுமான முன்போகம் உண்டு. மற்றவர்களைப் பற்றியும், மற்ற காரியங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே யிருப்பார்கள். பாருங்கள்? மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரெஸ்பிடேரி யன்கள், கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஆனால் இந்த லவோதிக்கேயாவின் காலத்தில் உள்ள பெந்தெகொஸ்தே சபையுங்கூட அவ்வாறுதான் உள்ளது. ஓ, உங்களுடைய முற்பிதாக்ககள் பெற்றிருந்த அந்த உன்னத நிலைக்கு நீங்கள் ஏன் திரும்பி செல்லக்கூடாது? நம்மை சுத்தி கரித்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்பக் கூடியதும், கிறிஸ் துவை நம்மண்டை கொண்டு வரக்கூடியதுமான உண்மையான பெந்தெகொஸ்தே அனுபவத்திற்கு நாம் ஏன் திரும்பி வரக் கூடாது? அதுவே நமக்குத் தேவையாயிருக்கிறது. அதே அனு பவம்தான் இன்றைக்கும் நமக்குத் தேவை. 83பெர்கமு என்ற வார்த்தைக்கு, ''விவாகம் செய்து கொண்ட என்று அர்த்தமாம். சடங்காச்சார ரீதியில் இருந்து வந்த நிக்கொலாய் மதஸ்தருடைய பெயர்க் கிறிஸ்தவ மதமானது, அரசியல் ரீதியிலான அரசாங்கத்துடன், அஞ்ஞான சடங்காச்சாரங் களுக்குள் விவாகம் செய்து கொண்டுவிட்டது. அஞ்ஞான சமய அனுஷ்டானங்கள், அந்நாளில் அவ்விவாகம் தான் கத்தோலிக்க சபையின் பிறப்பைக் கொண்டு வந்தது. கத்தோலிக்க சபை நிசாயா ஆலோசனை சங்கத்தில் தான் தோன்றியது என்பதை எவரும் அறிவர். அதற்கு முன்பாக அது தேனால் நிக்கொலாய் மதஸ்தர் என்று அழைக்கப்பட்டது. அதனுடைய அர்த்தம் ''சபையை வென்று அடக்கியாளுதல்'' என்பதாம். அவர்கள் அதைச் செய்த பொழுது, மக்கள் மத்தியில் ஆவியானவரும், பாஸ்ட்ர்க ளும் இருக்க அவர்கள் விரும்ப வில்லை. பாஸ்டர்கள் என்றால் மேய்ப்பர்கள் என்று அர்த்தமாம். 84“ஏன் மதகுரு ஒரு மேய்ப்ப னாக இருக்க முடியாது-'' என்று நீங்கள் கேட்கலாம். என்னவிதமான உண்வை அவர் உங்களுக்கு தருகிறார்? பெந்தெகொஸ்தே நாளில் உண்டானது போன்ற அதே விளைவுகளை நீங்கள் பெற்றுள்ளீர்களா? நிச்சயமாக இல்லையே. ”மரியே வாழ்க'' என்ற கோஷம் பெந்தெகொஸ்தே நாளில் எங்கே காண்கிறீர்கள்? நோவீனோக்களும், தெளித்தலும், ஊற்றுதலும், திரித்துவ தேவ நாமத்தினால் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால்) செய்கின்றார்கள். அவைகளை நீங்கள் பெந்தெகொஸ்தே நாளில் எங்காவது காண் கிறீர்களா? “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்பதை இஸ்ரவேல் வீட்டார் அறியக்கடவர்கள்'' என்று இயேசு கூறினார். இப்படி யிருக்க, இந்த போதகங்களை எங்கே நாம் பெற்றோம்? அது துவக்கத்தில் நிக்கொலாய் மதஸ்தருடைய கிரியைகள், பிறகு போதகமாக ஆகி, பிறகு கத்தோலிக்கம் உருவாகிட காரண மாகியது. 85“நான் அவர்களில் ஒருவனாக இருக்கவில்லை என்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன்'' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் அதைப்பற்றி ரொம்பவும் உறுதியாக இருக்க வேண்டாம். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் நிக்கொலாய் மதஸ்தரின் கிறிஸ்தவ மார்க்கத்தை நினைவில் கொள்ளுங்கள். அந்த கதையை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? இதற்கு மேற் கொண்டும் நாம் பார்க்கும் முன்னர், கவனமாக செவி கொடுங்கள். இன்றிரவில் நாம் நடு இராத்திரி வரை தங்கியிருக்க வேண்டி யிருந்தாலும், அதை நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அது உனது ஆத்துமாவைப் பற்றிய விஷயமாயிருக்கிறது. ”ஓ, நான் இன்ன சபையைச் சேர்ந் தவன்'' என்று கூறக்கூடும். அது அதுவல்ல. நீங்கள் பரிசுத்த ஆவி யையே பெற்றிருக்கவில்லை, சகோதரனே. நீங்கள் எத்தனை சபைகளைச் சார்ந்திருந்தாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் இழந்து போகப்பட்டு இருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நீங்கள் மறுபடியும் பிறந்திருக்காவிடில், நீங்கள் இழந்து போகப்படுவீர்கள். ஏனெனில் உங்களுக்கு நித்திய ஜீவன் இல்லை. நித்திய ஜீவனைப் பெற்றவர்களை மாத்திரமே தேவன் எழுப்புவார். ஏனெனில் அந்த ஒரு ஜீவன் மட்டுமே ஒழிந்து போகாமல் நிலைத்திருக்கும். 86ஒரு சோள விதையானது... நான் ஏற்கனவே இங்கே வானொலியில் விவசாய நேரத்தில் செய்யப்பட்ட ஒரு ஒலி பரப்பைப் பற்றி கூறியிருக்கிறேன். ஹென்றிவில் என்ற இடத் திலிருந்து உள்ள மெதோடிஸ்டு பிரசங்கியாராகிய அந்த பழங் காலத்து சகோதரன் ஸ்பர்ஜனை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத் திருக்கிறீர்கள்? ஒரு அற்புதமான குணாதிசயம் படைத்தவர் அவர். நாங்கள் ரெட் ஃபர்னிஷ்-ன் அங்காடியில் ஐஸ்கிரீம் விற்கும் கடையில் அமர்ந்து ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்டிருந்தோம். அப் பொழுது எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கூட்டத்தைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது வானொலியில் விவசாய ஒலிபரப்பின் நேரமாக இருந்தது. ரெட் கடையில் இருந்த வானொலிப் பெட்டியை அவர்கள் திருப்பிய பொழுது, ஒலிபெருக்கியின் வாயிலாக விவசாயம் சம்மந்தமான அந்த ஒலிபரப்பு லூயிவில்லில் இருந்து ஒலிபரப்பப்பட்டதாக இருந்தது. இயந்திரத்தின் மூலமாக செயற்கையாக, தேவையான பெட்ரோலியம், கால்ஷியம் இவைகளை செலுத்தி, செயற்கை சோளமானது உற்பத்தி செய்யப்பட்டதைப் பற்றி அதில் கூறினார்கள். அதை 4-ஹெச் க்ளப் என்ற நிறுவனம் கண்டு பிடித்ததாக கூறினார்கள். அந்த இயந்திரத்தைக் கொண்டு, செயற்கையான முறையில் சோளத்தை உருவாக்கி, அது இயற்கையான சோளத்திலிருந்து சிறிதுகூட வேறுபடாமல் அதைப் போலவே இருக்கும்படி செய்திருக்கிறார்களாம். 874-ஹெச் என்ற விவசாய விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடமானது அதை உருவாக்கியுள்ளது. அவர்கள் உருவாக்கிய அந்த சோளத்தை, இயற்கையாக நிலத்திலிருந்து உற்பத்தி செய்யப் பட்ட சோளத்தைப் போலவே, சோள அவல் மற்றும் சோள ரொட்டி செய்யப் பயன்படுத்தலாம். நீங்கள் அதை ஆராய்ச்சிக் கூடத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கே இந்த செயற்கையான வித்தையும், இயற்கையான சோளத்தையும் நீங்கள் உற்று நோக்கினால் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திக் காண முடி யாதபடி இரண்டும் ஒன்றுபோல் இருக்கின்றனவாம். செயற்கை யிலும் இயற்கையிலுள்ளதைப் போலவே, அதே அளவு பெட் ரோலியம், கால்ஷியம், ஈரப்பசை மற்றும் இன்னும் என்ன வெல்லாம் இயற்கையான ஒரு தானிய மணியில் இருக்குமோ, அவைகள் யாவும் அப்படியே செயற்கையான வித்திலும் இருக் கின்றன. வானொலி நிகழ்ச்சியில் பேசியவர் கூறினார்; நிலத்தில் இயற்கையாக விளைந்தது எது என்றும், இயந்திரம் உற்பத்தி செய்த வித்து எது என்றும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டு மென்றால், இரண்டிலுமே கைப்படி அளவு எடுத்த அதை பூமியில் விதையுங்கள். இரண்டுமே அழுகி, அதில் இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விதை முளைத்து மண்ணுக்கு மேலே கிளம்பி வராது'' என்றார். ஆனால் தேவன் வளர்த்த அந்த விதையோ மீண்டும் ஜீவிக்கும். ஏன்? ஏனெனில் செயற்கையான வித்து உயிர்ப்பிக்கப்பட்டு, முளைப்பிக்கப்படவில்லை. அதாவது அதனுள் ஜீவன் இல்லை. 88நீங்கள் கிறிஸ்தவராக காட்சியளிக்கலாம், கிறிஸ்தவரைப் போல் நடந்து கொள்ளலாம்; மற்றும் உங்களால் முடிந்த அளவு நற்கிரியையும் செய்யலாம். உங்கள் சபைக்கு உண்மையாகக் கூட நீங்கள் இருக்கலாம். ஆனால் தேவனுடைய ஜீவனாக இருக்கும் நித்திய ஜீவனானது உங்களுக்குள் வந்து, பரிசுத்த ஆவியினால் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு முளைப்பிக்கப்பட்டாலொழிய, மற்றபடி பயனில்லை. பாவ சங்கீர்த்தனம் பண்ணுதலினால் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவி என்னும் வரத்தினால் தான் முளைப்பிக்கப் பட முடியும். நீங்கள் அதை எவ்வாறு பெறுகிறீர்கள்? பெந்தெ கொஸ்தே நாளில் மருத்துவர் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார், அது என்னவெனில்... “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்பது தான் அது. பரிசுத்த ஆவியின் வரம் தான் நித்திய ஜீவன் ஆகும். தேவன் பரிசுத்த ஆவியாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டவர்களைத் தான் மீண்டும் எழுப்புவார். ஜீவனோடிருக்கிறது அது ஒன்று மாத்திரமே, அதை மட்டுமே தேவன் எழுப்ப முடியும். பார்த்தீர்களா? அது ஒன்று மாத்திரமே தேவனிடம் போக முடியும். அது தெளிவாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். தேவன் அதை அருளு வாராக. அது தெளிவாக இருக்கிறது. 89நிக்கொலாய் மதத்தினர் சடங்காச்சார ரீதியிலாக இருந் தார்கள். அவர்கள் அஞ்ஞான சபையை விவாகம் செய்து கொண்டு, அஞ்ஞான பலிபீடங்களை உள்ளே கொண்டு வந்து அதை கிறிஸ்த வேடம் பூண்ட பீடங்களாக ஆக்கினார்கள். ஒரு அஞ்ஞான கடவுளை உள்ளே கொண்டு வந்து, பேசவும், சொல்வுமான ஒரு அத்தியட்ச கரின் ரூபத்தில் அதை வைத்தார்கள். அதை அங்கே அமர வைத்து, அதற்கு அங்கியணிவித்து, ஒரு தேவனைப் போல் காட்சியளிக்க ஆவன செய்தார்கள். பார்த்தீர்களா? அது வெளியே இருக்கிறதான தாக அல்ல, அது உள்ளே இருக்கிறதாகவே இருந்தது. அதாவது இயற்கையும், செயற்கையுமான இருவித வித்துக்கள் புறத்தோற்றத் தில் ஒன்று போலவே தோற்றமளித்தன. ஆனால் வேறுபாட்டை உண்டாக்கியது எதுவென்றால், உட்புறம் தான். பாருங்கள், ஒன்றின் உள்ளே ஜீவன் இருந்தது. ஆதி கத்தோலிக்க சபையின் பிறப்பிடம் நிக்கொலாய் மதத்தினரின் கிரியைகள் மற்றும் போதகத்திலிருந்து தான், அவளே ஸ்தாபன சபைகளின் தாய் ஆவாள். 90இப்பொழுது நீங்கள் கூறலாம்: “நல்லது சகோ.பிரன்ஹாம் அவர்களே, நான் கத்தோலிக்கனாக இல்லாத வரைக்கிலும்...'' என்று. இப்பொழுது ஒரு நிமிடம், நாம் இங்கே ஒரு வினாடி நிறுத்துவோம், வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். ஒரு நிமிடம்... நேராக அந்தப் பகுதிக்குத் திருப்புங்கள். இது யாரைப்பற்றிய வெளிப்பாடாக இருக்கிறது? இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு அவரது சபைகளுக்கு அளிக்கப்படுதலாக இருக்கிறது. நான் வாசிக்கையில் கவனமாக கேளுங்கள். ஏழு கலசங்களையுடைய அந்த எழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந் திருக்கிற மகாவேசியோடே பூமியில் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே; வெளி.17:1 இந்தக் காரியத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சியை பெற்றிருக்க நான் கேட்கிறேன்; வேதத்தில் “ஸ்திரீ'' என்று அடையாளமாகக் கூறப்பட்டது சபையைக் குறிக்கிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? நல்லது. இதே அதிகாரத்தில் கூறப் பட்டுள்ள ”மகாவேசி'', ''ஏழு மலைகள் மேல் அமைந்திருக்கிற நகரம்' தான் அவள் என்று எத்தனை பேர் அறிவீர்கள்? சரி. ''தண்ணீர்கள்'' என்னப்படுவது வேதத்தில் யாரைக் குறிக்கும் என்பதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? அவள் இங்கே “திரளான தண்ணீர்கள்'' மேல் அமர்ந்திருக்கிறாள், 'தண்ணீர்'' என்று அல்ல, ”தண்ணீர்கள்'' என்று கண்டிருக்கிறது. தண்ணீர்கள் என்பதற்கு ''ஜனங்கள்'' என்று அர்த்தம். 15ம் வசனத்தில் நீங்கள் அதைப் பற்றி பார்க்கலாம். “... அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்கள் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக் காரருமாம்'' (பாருங்கள்? பாருங்கள்?) வெளி.17:15 91இந்த ஸ்திரீயானவள் விசுவாசத்தை விட்டு விட்டவள் ஆவாள். அப்படிப்பட்டவளாக அவள் இல்லையா? இது உபதேசமாக இருக்கிறது. எனவே, நீங்கள் இப்பொழுது உங்களுடைய மனச்சாட்சியை உங்களுக்குப் பின்னால் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? அவ்வருவருப்பான ஸ்திரீ எப்படி அழைக்கப்படுகிறாள்? ''வேசி'' என்று அவள் அழைக்கப்படு கிறாள். தன்னுடைய திருமண பிரதிக்கினைக்கு உண்மையில்லா தவள் தான் ஒரு வேசி என்னப்பட்டவள். சபையானது, கத் தோலிக்க சபையானது, கத்தோலிக்க சபையானது, தான் கிறிஸ்து வின் மணவாட்டி, கிறிஸ்துவின் மனைவி என்று உரிமை கொண் டாடுகிறாள். கன்னியாஸ்திரீகள் கூட தங்கள் தலைமயிரை முழு வதும் வெட்டிவிட்டுக் கொண்டு, பந்தபாசமே இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ''கிறிஸ்துவுக்கே அவர்கள் பந்தபாசமுள்ள வர்கள்'' என்று கூறப்படுகிறது. அது சரி தானே? நிச்சயமாக. அல்லது வேறு யாராகிலும்... நானுங்கூட ஒரு கத்தோலிக்க பின்னணியைக் கொண்டவன் ஆவேன். என்னிடம், “நமது விசுவாசத்தைப் பற்றிய உண் மைகள்'' என்ற கத்தோலிக்கப் புத்தகம் உள்ளது. அவர்களுடைய மற்ற புத்தகங்களும் உள்ளன. ப்ராடெஸ்டெண்டுகள் மற்றும் பாப்டிஸ்டுகள், ஆகியோரே! நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள் என்பதைப் பற்றிய புத்தகங்கள் என்னிடம் உள்ளன. நான் அவைகளை படிக்கிறேன், ஏனெனில், அவர்கள் யாராவது வந்து என்னிடம் ஏதாவது கூறினால், 'போ! உங்களுடைய புத்தகத்தி லிருந்தே எடுத்து சுட்டிக் காட்டுவேன்'' என்று சொல்ல முடியும் அல்லவா? எனவே இது வெறியேறுவதற்கான வேளையானது வந்துவிட்டது. முதலாவதாக, தேவன், மக்கள் அறிந்து கொள்ளும்படி செய்ய, தேசம் முழுவதிலும் அசைவாடி, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து காண்பிக்க வேண்டும். தேவனுடைய ஆடுகள் அவருடைய சத்தத்தை அறியும். அவர்கள் அறிவார்கள். அவர்கள் சரியாக அறிவார்கள். நீங்கள் முதலில் கண்டு பிடிக்க வேண்டும்... அறிந்து கொள்ளாமலேயே நீங்கள் புறப் பட்டுச் சென்றால்... அப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அப்பொழுது முன்னைவிட இன்னும் அதிகமாக தீங்கு உண் டாக்குகிறீர்கள். அதை தேவன் தாமே கவனித்துக் கொள்வாராக. பாருங்கள்? 92'அந்த மகாவேசிக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பை நான் உனக்கு காண்பிப்பேன்', அவள் தான் அந்த ஸ்திரீ என்று இருந் தால், அப்பொழுது அவள் இல்லாத ஏதோ ஒன்றை தான் விசு வாசிப்பதாகக் கூறிக்கொள்ள வேண்டுமே. அவள் விபச்சாரம் செய்து கொண்டிருந்தாள்! அது சரிதானே? அது சபை என்றால், அவள் தேவனுக்கு எதிராக விபச்சாரம் செய்கிறாள் என்பது புலப்படுகிறது. அது சரிதானே? விபச்சாரம் என்பது இங்கே ஆவிக்குரிய வேசித்தனம் ஆகும். அவள் தேவனுடைய வார்த்தை யல்லாத ஒரு காரியத்தைக் குறித்து மக்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறாள். அது சரிதானே? உண்மையல்லாத ஒரு காரியத்தை அவள் போதித்துக் கொண்டிருக்கிறாள். அதுவே நிக்கொலாய் மதத்தினரின் காரியமாகும். இங்கேயும் அது வருவதைக் கண்டீர்களா? போப்புகளை நியமித்து, மதகுருமார்களை நியமித்து, பரிசுத்த ஆவியானவரை அகற்றிவிட்டு, 'அற்புதங் களின் நாட்கள் கடந்து போய்விட்டன'' என்று கூறுகிறார்கள். வேதம் கூறுகிறது: “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று. வேதம் கூறுகிறது: 'நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள் ளுங்கள்'' என்று. ஆனால் அவர்களோ, ”பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்று கூறி, தெளிக்கிறார்கள். சுற்றிலும் ஊற்றுகிறார்கள். ஓ, என்னே! பார்த்தீர்களா? 93இப்பொழுது இந்த ஸ்திரீ என்ன செய்கிறாள் என்பதைப் பாருங்கள்; ''.... பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணி னார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே'' “குடித்து வெறி கொண்டிருந்தார்களே'! உங்களைக் கொலை செய்வார்கள், மரணாக்கினைக்குள்ளாக்குவார்கள். சுட்டுக் கொல்வார்கள். எதையும் அவர்கள் செய்வார்கள், சகோதரரே. அவர்கள் அந்தவிதமாக காரியத்தால் குடித்து வெறித்திருக் கிறார்கள். “மது''. அதை தான் அவள் பூமியின் குடிகளுக்கு ஊற்றிக் கொடுக்கிறாள். நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லட்டும்! என்னுடைய தாயும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள் தான். ”நானும்...'' என்று நீங்கள் கூறலாம். சரி. ''அது பயங்கரமானது'' என்று நீங்கள் கூறலாம். ப்ராடெஸ்டெண்டுகளே, ஒரு நிமிடம் பொறுங்கள். ஹு (நான் இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகிறவர்களுக்காகப் பேசு கிறேன், பாருங்கள்). ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டு போனான். அப் பொழுது.. சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். வெளி.17:3 94சிவப்பு நிறம் எதைக் காண்பிக்கிறது? அது ''ராஜரீகத்தைக் குறிக்கிறது. இராஜாக்களின் ராஜஸ்திதிக்கு உரிய நிறம் அது. “....தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான... ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடைய“ இந்த ஏழு தலைகளும், ஏழு ''மலைகளாம்'', அதின் மேல் தான் அந்நகரம் அமைந்துள்ளது. அந்த ஸ்திரீதான் அந்த நகரமாகும் என்பதை நாம் அறிவோம். '... அந்த ஸ்திரீ இரத்தாம்பர ஆடை தரித்திருந்து...'' “ஸ்திரீ''. மிருகம் சிவப்பு நிறமுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஸ்திரீ இரத்தாம்பர ஆடை தரித்திருந்தாள். நான் அன்றொரு நாளில் மூன்று விதமான திரைகளைக் குறித்து உங்களை எச்சரிக்க வில்லையா? இன்னும் எவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதை நினைவில் கொள் ளுங்கள். ”ருஷியாவை கவனியுங்கள்'' என்று நான் அநேகம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கூறியது போல்... அங்கே மூன்று விதமான திரைகள் உள்ளன. ஒன்று இரும்புத்திரை (iron) மூங்கில் திரை (Bamboo) நாடு ஒன்றுள்ளது. அதுவே செஞ்சீனம் ஆகும். இந்திர நீலத்திரை (Purple) ஒன்றும் உள்ளது. அந்த திரையை கவனித்திருங்கள். அதுவே வஞ்சிக்கிறவன் ஆகும். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு (நிக்கொலாய் மதஸ்தரின் முதல் பலிபீடம் எப்படிப்பட்டதாயிருந்தது என்று நான் ஏற்கனவே பேசியுள்ளதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? ஸ்திரீ சபைக்கு அடையாளமாய் இருக்கிறாள்) தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள் (உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பலிபீடம் பொன்னினால் மூடப்பட்டிருந்தது. இங்கு பொற்பாத்திரம் உள்ளது. அதிலிருந்து அவள் வேசித்தன மாகிய மதுவை ஜனங்களுக்கு ஊற்றிக் கொடுத்தாள்). வெளி.17:4 95அவள் ஜனங்கக்கு அதைத்தான் கொடுத்துக் கொண்டிருக்க, அவர்கள் அதை விழுங்கிக் கொண்டே இருந்தார்கள். நிச்சயமாக! அவர்கள் அவளது வேசித்தனமாகிய மதுவால் குடித்து வெறித் திருக்கிறார்கள். ஐரிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இன்னும் மற்றவர்கள், அந்த சபைக்கெதிராக ஒரு காரியத்தை நீங்கள் சொல்லிவிட்டால் உங்களது தொண்டையை அறுத்துவிடு வார்கள். நிச்சயமாக அவர்கள் அவ்வாறே செய்வார்கள். “மேலும், இரகசியம், மகா பாபிலோன் .... என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. பாபிலோன் எங்கே இடம் மாறி வந்தது? பாபிலோனி லிருந்து அது பெர்கமுவுக்கு வந்தது. சாத்தான் தன்னுடைய சிங்காசனத்தை பாபிலோனிலிருந்து பெர்கமுவுக்கு இடமாற்றம் செய்து விட்டான். நீங்கள் இதை கண்டு கொள்ளத்தக்கதாக வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் நான் ஆராய வேண்டு மென விரும்புகிறேன். மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய். அவள் என்னவாயிருந்தாள்? வேசிகளுக்கு தாயாயிருந்தாள். அவர்கள் புத்திரர்களாயிருக்கவில்லை. அப்படியாயிருந்தார்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி)... அவர்களுடைய சபை. ஆம் ஐயா, அவர்களுடைய சொந்த புத்தகத்திலேயே, ''வேதத்தில் சபையானது 'பாபிலோன்' என்று அழைக்கப்பட வில்லையா?'' என்று எழுதப்பட்டுள்ளது. சரி. 96அவள் ஒரு வேசியாயிருந்தாள், விபச்சாரியாயிருந்தாள், அவள் வேசிகளுக்கு தாய் ஆகவும் இருந்தாள். அப்பொழுது அவளுக்கு குமாரத்திகள் இருக்க வேண்டும். அவர்கள் தாய் வேசிக்கு குமாரத்திகள் என்றால், அப்பொழுது அவர்கள் பெண்கள் என்று தெரிகிறது. அப்படியென்றால் அவர்கள் சபைகளாக இருக்கிறார்கள். ப்ராடெஸ்டெண்ட் சபை எங்கிருந்து வந்தது? அது சரிதானே? ஒரு விபச்சாரிக்கும், வேசிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இரண்டும் ஒன்று தான். 97மார்ட்டின் லூத்தர் வெளியே வந்து, அதின் மூலம் சபையை வெளியே வந்த அவர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அதே நிக் கொலாய் மதஸ்தரின் போதகத்திற்கு உள்ளே சென்று அக் கொள்கையின்படி, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். இப்படி ஆனவுடன், அவர்களுக்கு ஜெனரல் ஓவர்சீர்கள் மற்றும் இன்னபிற மனித ஆளுகைக்காரர்கள் உண்டாயினர்; அதே ஞானஸ்நானத்தைக் கடைப்பிடித்தனர். அதேவிதமான சடங்குகள், ஆச்சாரங்கள், மற்றும் கத்தோலிக்க ஞானோபதேசம், 'மரியே வாழ்க'' ... “மரியே வாழ்க”. அல்ல, அதன் பெயர் என்ன? அதற்கு ஒப்பானது, அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம்'' ஆகிய காரியங்களையும் பின்பற்றினார்கள். இது என்ன? ப்ராடெஸ்டெண்டுகள் பின்பற்றின இவை உண்மை யாக கத்தோலிக்க உபதேசம் தான். அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்'' - இதை வேதத்தில் எங்காவது காண்பியுங்கள். அப்போஸ்தலர்களுக்கு என்று ஏதாவது பிரமாணம் ஒன்று இருந் திருக்குமானால், அது அப்போஸ்தலர் 2:38 தான். யாவரும் அதைக் கைக்கொள்ள வேண்டும் என்று அது கட்டளையிட்டது. எந்த வொரு அப்போஸ்தலனாவது, எப்பொழுதாவது, “நான் பரிசுத்த ரோமன் கத்தோலிக்க சபையை விசுவாசிக்கிறேன், பரிசுத்த வான்களின் ஐக்கியத்தை விசுவாசிக்கிறேன்'' என்று சொல்லும் பிரமாணத்தை உருவாக்கினார்களா? 98திறவு கோல்களையுடையவனாயிருந்த பேதுருவும், “தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் கிறிஸ்து இயேசுவைத் தவிர வேறு யாரும் இல்லை'' என்று கூறினான். ஆனால் ப்ராடெஸ் டெண்டு சபையினரை பாருங்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் திருப்தியடைந்திருக்க வில்லை. வெளியே வந்த ஒவ்வொருவரும், தங்களுடன் ஒரு பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்துடன் வெளியே வந்தார்கள். அது முற்றிலும் உண்மை. மார்ட்டின் லூத்தர் கூட அன்னிய பாஷைகளில் பேசியுள்ளார். அது உண்மையான காரியம். அவர், “தேவனே, இது என்ன நான் உதிர்த்த இந்த பயங்கரமான வார்த்தைகள், அவை என்னவென்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார். நிச்சயமாக அவர் அதை விசுவாசித்தார். காலங்கள் தோறும் அவர்கள் ஆவியைப் பெற்றிருந்தார்கள். ஆனால் தங்களுடைய எழுப்புதலுக்குக் காரணமானவர்கள் மறைந்த பிறகு, அவர்கள் எப்பொழுதும் விலகிப் போய் ஸ்தாபனத்தைத் தான் ஏற்படுத்திக் கொண்டார்கள். லூத்தரன் சபையை ஸ்தாபனம் ஆகவிடாமல் பார்த்து அதே எழுப்புத லோடு தொடர்ந்து நீடித்திருக்க விட்டிருந்தால் அப்பொழுது, அது பெந்தெகொஸ்தேயாக இருந்திருக்கும். பெந்தெகொஸ்தே சபை யானது என்ன? நான் உண்மையான பெந்தெகொஸ்தே அனுப வத்தைப் பெற்றவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். இப்பொழுது உள்ள பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை நான் குறிப்பிடவில்லை. அது மீண்டும் இப்பொழுது, “பானையும், கிண்டியும்'' என்று நிலையில் உள்ளது. பாருங்கள்? ஆனால் பெந்தெகொஸ்தேயினரும், ஆதியில் நிக்கொலாய் மதத்தின் கிரியைகள் வந்தபோது சபை அதின் வழியில் சென்றது போல், இவர்களும் செய்கிறார்கள். எத்தனைபேர் அதை கண்டு கொண்டீர்கள்? அப்படியெனில், ''ஆமென்'' என்று கூறுங்கள். (சபையார் 'ஆமென்'' என்று சொல்லுகிறார்கள் - ஆசி). நீங்கள் புரிந்து கொண்டதாக கூறும் வார்த்தையை நான் கேட்பதற்காகவே... 99“வேசிகளின் தாய்'' என்பதைப் பாருங்கள். அவர்கள் எவ்வாறு வேசிகளாக ஆகினர்? தேவனுடைய வார்த்தைக் கெதிராக சோரம் போனதால் அவ்வாறு ஆனார்கள். தேவனுடைய வார்த்தையானது, ”மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத் தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று உரைத் துள்ள போது, ஒவ்வொருவரும் அப்படியே ஆதியில் ஞானஸ்நானம் பெற்றிருக்க, இவர்களோ, ''பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்று கொடுத்த ஆரம்பித்தார்கள். வார்த்தையை விட்டு சோரம் போய் விபச்சாரம் செய்தல் அச்செய்கை! அது சரிதானே? பாப்டைஸோ (Baptizo) என்ற கிரேக்க வார்த்தைக்கு முழுக்குதல் என்று அர்த்தமாகையால், வேதத்தில் ஞானஸ்நானத்திற்கு பாப்டைஸோ என்ற வார்த்தையே உபயோகிக்கப்பட்டிருக்க, நீங்கள் எங்கிருந்து இந்த தெளித் தலையும், தலையில் ஊற்றுதலையும் செய்து அதுவே ஞானஸ்நானம் என்று போதித்து அவ்வாறு செய்கிறீர்கள்? அது எங்கிருந்து உள்ளே வந்தது? பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குப் பதிலாக, அதற்கு பதிலீடாக அந்த இடத்தில் கைகளைக் குலுக்கி கொள்ளுதல். பரிசுத்த நற்கருணையில் மொறுமொறுப்பான பிஸ்கட்டை விழுங்குதல் மற்றும் இன்னபிற காரியங்களை செய்தலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்க முண்டாகி, பரிசுத்த ஆவி இறங்கி வந்து ஜனங்களை நிரப்பி, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசவும் ஆர்ப்பரிக்கவும்படி செய்தது. ஆவியினால் நிறைந்திருந்த பொழுது, அவர்கள் பிறர் பார்வைக்கு குடித்தவர்களைப் போல காணப்பட்டார்கள். ஆவியைப் பெறுவதற்குப் பதிலீடாக, கைகளைக் குலுக்குதல், ஒரு சபையில் தன் பெயரைப் பதிவு செய்து கொள்ளல் மற்றும் அதுபோல ஏனைய காரியங்களையும், இவ்வாறு வார்த்தையைவிட்டு சோரம் போய் நீங்கள் செய்துள்ள ஆவிக்குரிய வேசித்தனங்களை விட்டு நீங்கள் எப்படி விலகப்போகிறீர்கள்? 100அதைப்பற்றி நீங்கள் உங்களை வினவிப் பாருங்கள். உங்கள் சுய சிந்தையை நீங்கள் இடித்து கீழே தள்ளி, உங்கள் இருதயத்தை திறந்து உத்தமமாக இருங்கள். சகோதரரே, நாம் சாலையின் முடிவில் இருக்கிறோம். இக்கூட்டங்கள் வீணாக ஏற்பாடு செய்யப் படவில்லை. இவைகள் தேவனால் கட்டளையிடப்பட்டவை யாகும். இது நிச்சயமாக அப்படித்தான் என்று நான் விசுவாசிக் கிறேன். நான் அவருடைய ஊழியக்காரன் என்பதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? இங்கே வந்து இக்கூட்டங்களை நடத்துவதற் குரிய நடத்துதலை தேவன் என் இருதயத்தில் வைத்தார் என்பதை நான் இயேசுவின் நாமத்தினால் கூறுகிறேன். இதைச் செய் வதற்காக நான் ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லை. நான் வேறு எங்காவது இந்த சமயத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபித் துக் கொண்டு, அல்லது மீன்பிடிக்கப் போய்விடவோ சென்று, என் சம்பளத்தை வாங்கிக் கொள்ளலாம். சபையிடமிருந்து நான் சம்பளம் பெற்று வருகிறேன். ஆனால் தேவன் அதைப்பற்றி என் உள்ளத்தில் பேசினார். அவர் என் உள்ளத்தில் அதைப் பற்றி கூக்குரலிட்டுக் கொண்டேயிருந்தார். எனவே என்னால் அதை விட்டு விலகமுடியவில்லை. என்னால் முடிந்த அளவு நான் அதைச் செய்து வருகிறேன். நான் கர்த்தருடைய நாமத்தினால் இங்கே இருந்து கொண்டு, எனக்குச் செய்யத் தெரிந்த யாவற் றையும் செய்து கொண்டிருக்கிறேன். அது உங்களை கடந்து செல்ல விட்டு விடவேண்டாம். 101இப்பொழுது ப்ராடெஸ்டெண்டுகளே! கத்தோலிக்க மற்றும் பிராடெஸ்டெண்டுகள் சபை என்று நான் குறிப்பிடுகையில் அதில் என் கருத்து என்ன? ஒன்றைப்போலவே தான் மற்றதும் உள்ளது என்பதுதான். அது மிகவும் சரியாக அப்படியே உள்ளது. பெர்கமு என்றால் “விவாகம் செய்து கொண்ட'' என்று அர்த்தமாகும். “பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு' என்ற வசனத்தை எடுத்துக் கொள்வோம். நமக்கு நேரம் இருக்கிறதா? இயன்ற அளவு விரைவாக நான் முடிப்பேன்; அல்லது நீங்கள் கொஞ்சம் காத்திருந்து, காலையில் மீண்டும் வர இயலுமா என்று பார்ப்பீர்களா? அல்லது இப்பொழுது இன்னும் சிறிது நேரம் காத்திருந்து தொடர்ந்து படிப்போமா? சரி. இங்கே உஷ்ணமாக இருக்கிறது. நீங்கள் இந்த வெப்பத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? இந்த உஷ்ணமாக இடத்தை விட்டு சீக்கிரமாக புறப்பட்டுவிட நாம் முயன்று கொண்டு இருக்கிறோம். இங்கு இவ்வாறு தான் இருக்கும். ஆனால் நித்தியத்தில்... 102அவ்வாறு அவர்கள் அப்படிப்பட்ட சபையை நிறுவிய போது என்ன நடந்தது? என் பிள்ளைகளே, மிகவும் கவனமாகக் கேளுங்கள். என்ன நடந்தது? அவர்கள் சபையை விட்டு பரிசுத்த ஆவியை அகற்றினர். அவர்களுடைய அத்தியட்சகர்கள் எவரும், மரித்தோரை உயிரோடெழுப்புவதையோ, அற்புதங்கள் செய்வதையோ செய்யவில்லை என்பது ஆச்சர்யமல்ல. இந்த பரிசுத்த வான்களில் சிலரை, தங்களுடைய சபையில் இருந்தவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த பரிசுத்தவான்கள் பெற்றிருந்த அனுபவத்தை அவர்கள் எதிர்த்தனர், ஆனால் அவர்கள் கடந்து சென்ற பிறகு, அவர்களை தங்கள் சபையின் பரிசுத்தவான்கள் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அந்த வாலிபப் பெண்ணாயிருந்த ஜோன் ஆஃப் ஆர்க் என்பவள் பற்றி, கத்தோலிக்கரே, ப்ராடெஸ்டெண்டுகளே, நான் உங்களைக் கேட்கிறேன். அவள் தன்னுடைய நாளில் பிரான்ஸில் ஒன்றும் இல்லை. கத்தோலிக்க சபை அப்பொழுது பரிசுத்தவான் களை ஒடுக்கியது. ஆனால் தேவன் அப்பெண்ணின் மேல் அசை வாடினார். அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தாள். அவள் என்ன செய்தாள்? கர்த்தர் அவளுக்கு நடக்கப் போகிறவைகளை பற்றி தரிசனங்களைத் தருவதுண்டு, அதினால் அவள் வரப்போகிற காரியங்களைப் பற்றி முன்னுரைக்கக் கூடியவளாக இருந்தாள். வியாதியஸ்தருக்காக அவள் ஜெபித்தாள். ஒரு தடவை மரித்துப் போன ஒரு குழந்தைக்காக அவள் ஜெபித்தபோது, உயிர் அதற்குள் திரும்பவும் வந்தது. அதுதான் பெந்தெகொஸ்தே யாகும். பாருங்கள்? கத்தோலிக்க சபையை அவள் எதிர்த்தபடி யினால், கத்தோலிக்க சபையை அவள் எதிர்த்தபடியினால், கத்தோலிக்க சபை அவளுக்கு என்ன செய்தது? அவளை ஒரு விசாரணை மன்றத்தின் முன்னால் கொண்டு வந்து, அவளை “சூனியக்காரி'' என்று நியாயந்தீர்த்து, கம்பத்தில் கட்டி வைத்து எரித்துக் கொன்றனர். 103இப்பொழுதோ நீங்கள் அந்தப் பெண்மணியை, “பரிசுத்த ஜோன் ஆஃப் ஆர்க்'' என்றும் பரிசுத்தவாட்டி பட்டம் போட்டு அழைக்கிறீர்கள். ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னால், சபை தாங்கள் செய்தது தவறு என்று கண்டு கொண்ட போது, அவர்கள் மனமாறுதல் அடைந்து, அவளை பரிசுத்தவாட்டி ஆக்கிவிட் டார்கள். அவளுக்கு மரண தண்டனை விதித்த குருமார்களின் உடல்களை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து, அவைகளை நதியில் வீசியெறிந்து விட்டார்கள். இப்படியெல்லாம் செய்து விட்டபடியினால், கத்தோலிக்க சபையின் கரங்கள் இரத்தப்பழிக்கு நீங்கலாகி இருக்க முடியுமோ? ''ஒவ்வொரு இரத்த சாட்சியின் இரத்தமும் அவளது கைகளில் காணப்பட்டது'' என்று வேதம் கூறுகிறது. ”ஒவ்வொரு கொலையும், கொன்று குவிக்கப் பட்ட ஒவ்வொரு இரத்த சாட்சிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தமெல்லாம் நிக்கொலாய் மதஸ்தரின் காலம் முதற்கொண்டு, பாபிலோனில் காணப்பட்டது'' என்று கர்த்தருடைய தூதனானவர் கூறினார். அதைப்பற்றி எண்ணிப்பாருங்கள். (நன்றி சகோ.பென் அவர்களே). அதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். 104இன்னும் கொஞ்சம் இருக்கிறது. கிறிஸ்தவ சபையானது பாபிலோனுக்கு விவாகம் செய்து வைக்கப்பட்டது. பெர்கமு என்றால் “விவாகம்''. இப்பொழுது “பிலேயாமின் போதகம்'', ''பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.'' ஓ, நான் இவைகளை நேசிக்கிறேன். அவை ஒன்றில் நீங்கள் இன்னும் தங்கித்தரித்து ஆராய்ந்து பார்த்தால்... நீங்கள் இதைக் கண்டு களித்து, அடுத்து ஏதாவது ஒன்றை ஆராய கடந்து செல்ல வேண்டும். ஏனெனில் அவை முழுவதும் தங்கக் கட்டிகளாக இருக்கின்றன. நான் தங்கத்தை தேடிக் கொண்டு போகிறவன். நான் தங்கச் சுரங்கத்திற்குச் சென்று, அதிலிருந்து இந்த தங்கக் கட்டிகளை வெட்டியெடுத்து, அவைகளை பாலிஷ் செய்து, பிரகாசிக்கச் செய்ய விரும்புகிறேன். அவைகள் ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கிறவையாக இருக்கின்றன. அவரே அல்பாவும் ஒமெகாவுமாயிருக்கிறார். அவரே இத் தங்கத்தின் முழு மச்சமாக இருக்கிறார். என்னே, நமக்கு மாம்சத்தில் தோன்றிய தேவன் ஆவார். 105இப்பொழுது ஒன்பது மணி ஆகிவிட்டது. ஆகவே நான் இதற்கு நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறதில்லை. இன்னொரு காரியமும் உள்ளது, அதை இன்றிரவில், நாம் தேவனுக்கு சித்தமானால், பார்க்க விரும்புகிறேன். எண்ணாகமம் 22 முதல் 25 முடிய. நீங்கள் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை நீங்கள் வாசியுங்கள். என்னோடு சேர்ந்து இதை இப்பொழுது வாசியுங்கள். எண்ணாகமம் 22 முதல் 25 முடிய. இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் என்பதை நாம் அறிவோம். அது சரி தானே? அவர்கள் பெந்தெகொஸ்தேயினராக இருந்தனர். அவர்கள் மத்தியில் ஆவி யானவர் இருந்தார். நேற்றிரவில் அளிக்கப்பட்ட செய்தியை ஞாப கத்தில் வைத்துள்ளீர்களா? மோசே சிவந்த சமுத்திரத்தை கடந்த பிறகு, அவன் பின்னால் திரும்பிப் பார்த்த போது அச்சிவந்த சமுத்திரத்தில் இரத்தமாக இருக்கக் கண்டான். எகிப்தில், தன்னையும் இஸ்ரவேலரையும், அடித்துத் துன்புறுத்தி கொடுமை யாக வேலை வாங்கிய ஆளோட்டிகளின் இரத்தத்தை உயர்த்தி ஆவியில் பாடித் துதித்தான். நாம் ஒவ்வொருவரும் ஒரு மோசேயாகி ஆகி, கர்த்தராகிய இயேசு நமக்காய் சிந்தின சிவப்பான இரத்தத்தை நாம் திரும்பிப் பார்த்து, அதில் மரித்துக் கிடக்கிற ஒவ்வொரு பழைய குடிகாரனையும், பழைய பாட்டில் களையும், பழைய அருவருப்பான ஸ்திரீயையும், மற்றும் நாம் செய்த பழைய அழுக்கான கிரியைகளையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் அவை மரித்துக் கிடக்கிறதாக காணலாம். அது நம்மை ஆவியில் பாடி களிகூரச் செய்கிறது. சிகரெட்டுகளும், புகையிலையும், கெட்ட பழக்க வழக்கங்களும், மற்றும் இன்னபிற காரியங்களும் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்திற்குள் மரித்துக் கிடக்கிறதை நாம் காணலாம். அப்பொழுது நாம் நமது கைகளை உயர்த்தி ஆவியில் பாடிக் களி கூறலாம். 106தீர்க்கதரிசினியாகிய மிரியாம் செய்ததைப் பாருங்கள். அவள் ஒரு தீர்க்கதரிசி என்பதை நீங்கள் நினைவில் வைத்திருங்கள். அவள் தம்புரூவை கையில் எடுத்து அடித்துப் பாடி, ஆவியில் நடனமாடினாள். இஸ்ரவேலின் குமாரத்திகளும், சிவந்த சமுத்திரக் கரையில், மிரியாமைப் பின்பற்றி, தம்புரூவை அடித்துக் கொண்டு, பாடி ஆவியில் நடனமாடினார்கள். அது உண்மையான பெந்தெகொஸ்தேயாக இருந்தது. பிறகு அவர்கள் மோவாபுக்கு வருகிற பொழுது நடந்ததைக் கவனியுங்கள். நாம் இப்பொழுது பிலேயாமின் போதகம்'' என்ற விஷயத்திற்கு வருகிறோம். அதைப் பற்றி வேத வாக்கியங்களில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். மோவாபியர் இஸ்ரவேலின் சகோதரர் தான். மோவாப் எங்கிருந்து வந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சரி. மோவாபியரை நான் கலப்பின வித்து என்று அழைக்கிறேன். ஏனெனில் மோவாப் லோத்தின் குமாரத்திகளிடமிருந்து பிறந்தவர்களில் ஒருவன். லோத்துக்கு அவனுடைய இரு குமாரத்திகள் மூலம் இரு புத்திரர்கள் பிறந்தனர். அவ்விருவரில் மோவாப் ஒருவன். அந்த மோவாபியரின் கோத்திரந்தான் மோவாப் தேசத்தை உருவாக் கியது. ஆபிரகாம் லோத்தின் சிறிய தகப்பனார் ஆவார். இருவரும் ஒரே வம்சத்தில் பிறந்தவர்கள்தான். நாம் அதை அறிவோம். நம்முடைய நாடகங்கள் சிலவற்றில், சமீபத்தில் கூட அவை நடத்திக் காண்பிக்கப்பட்டன. அதில் மோவாபியர் அஞ்ஞானி களாக சித்தரிக்கப்பட்டனர். அப்படியல்ல, அவர்கள் அஞ்ஞானி களல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டுகிறேன். அவர்கள் விசுவாசிகள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அணிவகுத்து வரும் பணியில் கிரம மாக நடந்து கொண்டு வருகையில், அவர்களுடைய மோவாபின் தேசம் இருந்தது. அவர்கள் மோவாபியருக்கு தூதர்களை அனுப்பி, “நாங்கள் உங்கள் சகோதரர், உங்களுடைய தேசத்தின் வழியாக கடந்து செல்ல விடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். 107இப்பொழுது, இங்கே, மோவாப் நிக்கொலாய் மதத் தினருக்கு அடையாளமாய் இருக்கின்றனர். அதை நீங்கள் இன்னும் சிறிது நேரத்தில் காணலாம். இஸ்ரவேலானது உண்மையான சபைக்கு அடையாளமாயிருக்கிறது. பிலேயாம் என்பவன், அவர்களுடைய அத்தியட்சகர்களில் ஒருவனாக, போப்புகளில் ஒருவனாக (இப்பொழுது கவனியுங்கள்), அவர் களுடைய மாம்ச சிந்தையுள்ள கிறிஸ்தவ மதத்திற்கு என்று இருந்தான். அவன் வரம் பெற்று இருந்தான் என்பதை நாம் காணலாம். அதில் சந்தேகமேயில்லை. அவர்களில் அநேகர் வேத தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள், மற்றும் அருமையான பேச்சாளர்கள், மற்றும் பெரிய மனிதர்கள் ஆவர். உங்களால் அதை மறுக்க முடியாது. ஆனால் “தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்''. 108அந்த மூல பெந்தெகொஸ்தே அனுபவத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள்! அதனிடத்தினின்று விலகிப் போக வேண்டாம். விலகிச் சென்றால், நீங்கள் இழந்து போனவர்களாக ஆவீர்கள். அந்த ஆசீர்வாதத்தோடு நிலைத்திருங்கள். அதுதான், ஆசீர் வாதத்தினால் ஆசீர்வதிக்கிறவர் அவரே. இஸ்ரவேலர் பயணம் செய்து வருகையில் நடந்ததைக் கவனியுங்கள். இந்த சடங்காச்சார, கலப்பட சபையிடமாக அவர்கள் வந்தடைந்து, அவர்களிடம், “நாங்கள் ஒரு எழுப்புதலை நோக்கி உங்கள் வழியாக கடந்து செல்ல வேண்டியவர்களா யிருக்கிறோம். நாங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதொரு தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்கள் தேசத்தின் வழியாக கடந்து செல்ல அனுமதிப்பீர்களா? எங்களுடைய கால்நடைகள் புல்லை மேய்ந்துவிட்டாலோ, அல்லது தண்ணீரைக் குடித்து விட்டாலோ, அதற்கு நாங்கள் பணம் செலுத்தி விடு கிறோம்'' என்றார்கள். அதற்கு மோவாபிய இராஜாவாகிய பாலாக் என்ன செய்தான்? அவன் மிகவும் கலவரமடைந்தான். அவன் தன்னு டைய சபையிலோ, அல்லது தனது தேசத்திலோ அவ்விதமான ஒரு கூட்டம் நடைபெற விரும்பவில்லை. எனவே அவன் என்ன செய்தான்? பாலாக் அப்பொழுது போப்பாக இருந்த அல்லது அத்தியட்சகராக இருந்த, கூலிக்காரத் தீர்க்கதரிசியான பிலே யாமுக்கு ஆள் அனுப்பினான். பிலேயாம், தேவனை விட பணத் தையே அதிகம் நேசித்தான். பாலாக் பிலேயாமுக்கு, 'நீர் இங்கே வந்து அவர்களை சபித்தீரென்றால், நான் உம்மை ஒரு பெரிய மனுஷனாக ஆக்கிவிடுவேன்'' என்று சொல்லிவிட்டான். தேவன் பிலேயாமிடம் பேசினார்... இந்த இராத்திரியில் எத்தனை பிலே யாம்கள் இருக்கக் கூடும் என்று நான் அதிசயப்படுகிறேன். மெதோடிஸ்டு ஊழியக்காரர்கள், பாப்டிஸ்டு ஊழியக்காரர்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், பிலேயாமைப் போலவே தேவனைப் பற்றி அறிந்து வைத்துள்ளார்கள். (இரக்கம் வேண்டும்) நான் படித்திருக்கிற அதே வரலாற்றையும், அதே புத்தகத்தையும் நீங்கள் படித்திருந்தால், பிலேயாமைப் பற்றி நீங்கள் காண முடியும். 109“வந்து இந்த ஜனங்களை சபியும்'' என்று பாலாக் பிலேயா முக்கு சொல்லியனுப்பி விட்டான். அதற்கு பிலேயாம், “நான் தேவனை கேட்பேன்'' என்றான். தேவன் சொன்னார்: “நீ போக வேண்டாம்'' என்று. அடுத்த நாள் காலையில் தூதர்கள் திரும்பிச் சென்று இராஜாவிடம் பிலேயாம் சொன்னதை எடுத்துரைத்தார்கள். மறுபடியும் பிரபுக்களை பாலாக் அனுப்பி, ''நான் உன்னை பெரிய மனுஷன் ஆக்கிவிடுகிறேன், நீ வா'' என்று சொல்லி அனுப்புகிறான். எனவே, பிலேயாம் தொடர்ந்து தேவனிடம், மீண்டும் போகலாமா என்று கேட்கிறான். தேவன், ''அப்படியானால் நீ போ'' என்று கூறுகிறார். பாருங்கள், நீங்கள் சத்தியத்தை பின்பற்ற விரும்பா விடில்... நிக்கொலாய் மதத்தினரே, தேவன் உங்களுடைய விருப்பத்தின்படி அவர் அனுமதிக்கிறாரே என்று எண்ணலாம். தேவனுடைய மூல சத்தியம் இருக்கிறது! ஆனால் நீங்கள் தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தை தான் எடுத்துக் கொள்கிறீர்கள். “தேவன் எங்களுக்கு பரிசுத்த ஆவியைத் தருகிறார். அவர் எங்களை ஆசீர்வதிக்கிறார், நாங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுள்ளோம்'' என்று நீங்கள் கூறலாம். நீங்கள் பிலேயாம்கள்! பிலேயாமின் போதகத்தைப் பாருங்கள். பிலேயாம் பிடிவாதமாக இருந்ததால், தேவன் அவனை போகச் சொல்லி விட்டு விடுகிறார். அவன் தன் இஷ்டப்படி நடந்து கொள்ள விட்டுவிடுகிறார். நீங்கள் அஸ்திவாரமான சத்தியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். வேதத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். ''ஓ, தேவன் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார்'' என்றெல்லாம் நீங்கள் கூறலாம். அவர் அதைச் செய்தார் என்று நானும் அறிவேன். 110தேவன் பிலேயாமிடம், “நீ போகலாம், நீ போக விரும் பினால், அந்த வழியாக நீ போக வேண்டியது அவசியம் என்றால், நீ அந்த ஸ்தாபன மார்க்கத்தில் போக விரும்பினால், அதை நீயே தெரிந்து கொள். அதில் நீ போகலாம்'' என்று கூறினார். பிறகு, பிலேயாம் தன்னுடைய கோவேறு கழுதையின் மேல்... இல்லை, கழுதையின்மேல் குதித்து ஏறி, புறப்பட்டச் சென்றான். நடந்த முதல் காரியம் என்னவெனில், அவனுடைய வழியில் கர்த்தருடைய தூதனானவர் குறுக்கே நின்றார். அந்த தீர்க்கதரிசி, அல்லது போப், அத்தியட்சகர், கார்டினல், இப்படி யாக இதில் எந்த பதவியை அவன் வகித்தானோ அப்படிப்பட்ட இவன், ஐப்பிராத்து நதிக்கரையில் வாழ்ந்து வந்த இவன், தான் பதவி உயர்வை அடையப் போகிறதைப் பற்றிய சிந்தையில் இருந்ததால், ஆவிக்குரிய காரியங்களுக்கு அவன் குருடனாயிருந் தான். “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்'' என்று கூறப்பட்டது, பேதுரு மேல் அல்லது ரோமாபுரியில் உள்ள ஒரு கல்லின் மேல் கட்டப்படுவதாகும் என்று எண்ணப்படுவது போல, பிலேயாமும் அது சுதந்தர வீதம் என்றெண்ணினான். ஆனால் அவன் அந்த இடத்திற்குச் சென்றபோது, உருவப்பட்ட பட்டயத்தோடு கர்த்தருடைய தூதனானவர் அவனது வழியில் அவனுக்கு குறுக்காக நின்றார். அவன் அவரைக் காண முடியாதபடி குருடாக்கப்பட்டிருந்தான். அவன் ஏறியிருந்த கழுதையோ வெனில், அவரைக் கண்டு விட்டபடியினால் மேற்கொண்டும் போகாமல், பிலேயாமின் காலை சுவரோடு வைத்து உரசியது. அவன் மறுபடியும் சென்றான், மறுபடியும் கர்த்தருடைய தூதனா னாவர் குறுக்காக நின்றார். தேவன் ஒவ்வொரு வாசலையும் அடைப்பார். இந்த கழுதை இன்னமும் போகாமல் நின்றது. பிலேயாம், கழுதை போகாமல் நின்றுவிட்டபடியினால், அதை அடித்தான். அந்த எளிய கழுதை தன் தலையில் அடிக்கப்பட்டு அங்கே கிடந்துவிட்டது. 111அவனை மாற்றியது எது, தான் தவறாக இருக்கிறோம் என்று அவனை உணரச் செய்தது எது என்பதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். அக்கழுதை அந்நிய பாஷைகளில் பேச தேவன் அனுமதித்தார். அது ஒரு கோவேறு கழுதையல்ல. ஒரு கழுதை தான். அவன் ஏறியிருந்தது கோவேறு கழுதை என்று கூறவேண்டாம். கலப்படமாய் பிறந்த கோவேறு கழுதை அந்த அனுபவத் தைப் பெற முடியாது. பாருங்கள், அக்கழுதை மூல வித்தினின்று வந்ததாய் இருக்கிறது. ''அடையாளங்கள் கடந்து போய்விட்டன, அனைத்தும் கடந்து போய்விட்டன'' என்று மோவாப் கூறுகிறது. இஸ்ர வேலுக்கோ அடையாளங்கள் பின்தொடர்ந்தன. ஆனால் இந்த எளிய கழுதையானது பிலேயாமிடம் “நான் இத்தனை ஆண்டுகளாக உம்முடைய கழுதையாயிருக்கவில்லையா? நான் எப்பொழுதாவது...'' கண் சொருகிப்போன அந்த அத்தியட் சகர், கழுதையின் மேல் உட்கார்ந்து, அதை இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அக்கழுதை அவனோடு பேசியது, கழுதை அக்கோவேறு கழுதையிடம் அந்நிய பாஷைகளில் பேசியது. 'ஆம், நீ என்னுடைய கழுதை தான்'' என்று கூறினான். 'உம்மை நான் எப்பொழுதாவது சுமந்து செல்லத் தவறியது உண்டா ?'' என்று கேட்டது. “இல்லை, நீ அப்படிச் செய்யவில்லை. ஆனால் என்னிடம் பட்டயம் இருந்தால் நான் உன்னைக் கொன்று போடுவேன். இக்கூட்டத்தை நிறுத்திப் போடுகிறேன். நான் அந்த உருளும் பரிசுத்தர் கூட்டத்தை இத்தேசத்தின் வழியாக கடந்து வர விடாமல் தடுப்பதற்காக போகும் என்னுடைய பிரயாணத்தில் இருக்கிறேன். நான் உன்னை கொன்று போடுவேன்'' என்று கூறினான். 112“நல்லது, இது விசித்திரமாயுள்ளதே, இக்கழுதை பேச நான் கேட்கிறேன்'' என்று கூறி அவன் சுற்று முற்றும் பார்த்தான். ஓ பிலேயாமே! ஹு! தேவன் எப்பொழுதும் மக்களோடு அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறார். ''அவர் பெந்தெகொஸ்தே நாளில் மட்டும் தான் பேசினார்'' என்று நீங்கள் கூறலாம். ஓ, இல்லை. இல்லை, இல்லை. பெல்ஷாத்சார் என்ற பாபிலோனின் இராஜா நடத்திய விருந்தில், அவர் அந்நிய பாஷையில் பேசினார், அதை சுவரில் எழுதினார். அவர்கள் மத்தியில் ஒரு மனிதன் இருந்தான். அவன் அந்நிய பாஷைகளை வியாக்கியானம் செய்யும் வரத்தைப் பெற்றிருந்தான். எனவே அவன், சுவற்றில் கையுறுப்பு எழுதியது என்ன என்பதை வியாக்கியானித்துச் சொன்னான். அதே காரியம் இன்றும் உள்ளது. 113எனவே, வியாக்கியானம் செய்ய யாரும் அங்கே இல்லாததால், தேவன், இந்த பிலேயாம் (இந்த கார்டினல்) விழிப்படைந்து, அது என்ன என்று உணர்ந்து கொள்ளச் செய்தார். அதன்பிறகும் அந்த குருடான பிலேயாம், மேற்கொண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான் என்பதை அறிவீர்களா? நிச்சயமாக. அவ்விதமாகத்தான் அவர்கள் இன்றைக்கும் செய்கிறார்கள். மோவாபியர்கள், நிக்கொலாய் மதத்தினர் தொடர்ந்து அப்படியே செய்கிறார்கள். தேவன் அஸ்திவாரமான உபதேசத்தை மட்டும் கொண்டிருத்தனால் கனம்பண்ண வேண்டியராயிருக்கிறாரென்றால், அப்பொழுது அவர் மோவாபையும் ஆசீர்வதிக்க கடமைபட்ட வராயிருக்கிறார். ஏனெனில் பிலேயாம் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். சரியாக அவன் செய்தான். ஏழு என்ற எண்: ஏழு சபை காலங்கள். அதன் ஆவிக்குரிய சம்மந்தத்தைக் கண்டீர்களா? அதை நினைவில் வைத்துக் கொள் ளுங்கள். ஆவிக்குரிய சம்மந்தம் என்பதை அதற்கு இன்னும் ஒரு நிமிடத்தில் நான் வரப்போகிறேன். பாருங்கள், ஆவிக்குரிய சம்மந்தம், ஏழு பலிபீடங்கள், ஏழு காளைகள் (சுத்த மிருகங்கள்), ஏழு ஆட்டுக் கடாக்கள், கிறிஸ்து வருவதற்கு பல நூற்றாண்டு களுக்கு முன்பே அவருடைய வருகையை அறிவிப்பதாய் உள்ளன. அவர்கள் விசுவாசித்தார்கள். அவர்கள் எதை விசுவாசித் தார்கள்? அவர்கள் யேகோவா தேவனில் விசுவாசம் கொண்டிருந் தார்கள். அவர்கள் வேறெதை விசுவாசித்தார்கள்? சுத்தமான மிருகத்தை பலி செலுத்த வேண்டுமென்பதை அறிந்திருந்தார்கள். அது சரியானது தான். மேசியா வருகிறார் என்பதை தாங்கள் விசுவாசிப்பதாக அவர்கள் கூறிக்கொண்டனர். ஏனெனில் ஒரு ஆண் ஆட்டை (ஆட்டுக்கடாவை) அவர்கள் பலியாக செலுத்தி னார்கள். 114இக்காரியத்தை நீங்கள் பாப்டிஸ்ட்டுகளின் செயலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களும் சரியாக இப்படிக்கொத்த காரியங்களை செய்யவில்லையா என்பதைப் பாருங்கள். அது முற்றிலும் உண்மை . அப்படியானால், என்ன வேறுபாடு அங்கேயுள்ளது? மலையடிவாரத்தில் இங்கே இஸ்ரவேலர் பாளயமிறங்கியிருந்தனர். மலையுச்சியில் மோவாபியர் எந்த தேவனுக்கு எவ்விதமான பலியைச் செலுத்தினார்களோ, அதே விதமான பலியை, அதே தேவனுக்குத் தான் இஸ்ரவேலர் செலுத்தினார்கள். அதே தேவனிடம் தான் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். கலப்பின வித்தாக இருக்கிற நிக்கொலாய் மதத்தினரை அங்கே உங்களால் காண முடியவில்லையா? அதைக் கண்டீர்களா? உண்மையான ஆவிக் குரியவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்களுக் கிடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது? ஒரு சாராருக்கு அடையாளங் கள் பின் தொடர்ந்து வந்தது, மற்ற சாரார் சடங்காச்சாரக்காரர்களாக இருந்தனர். ஒரு சாராருக்கோ அடையாளங்கள் பின் தொடர்ந்தன. 115அதேவிதமான காரியம் தான் நிசாயா ஆலோசனை சங்கத் திலும் நடைபெற்றது. நிக்கொலாய் மதத்தினராகிய சடங்காச்சார கிறிஸ்தவ மதத்தினர் அங்கே இருந்தனர். பரிசுத்த ஆவியானவர் திரும்பி வந்து, ''பிலேயாமின் போதகத்தைக் கைக் கொள்ளு கிறவர்கள் உன்னிடத்திலுண்டு'' என்று கூறுகிறார். பாருங்கள்? ''நான் நிக்கொலாய் மதத்தினரின் கிரியைகளை, போதகங்களை வெறுக்கிறேன், அது பிலேயாமின் போதகமாயுள்ளது, இஸ்ரவேலருக்கு முன்பாக இடறலை போடும்படி அவன் போதித் தான்''. அதை அவன் எவ்வாறு செய்தான்? பிலேயாம் அந்த ஜனங்களை சபிக்கும்படி புறப்பட்டுச் சென்ற போது, தேவன் சொன்னார்: ''நான் உன் நாவை கட்டிப் போடு வேன், நான் சொல்லுவதைத் தான் நீ சொல்ல முடியும், நான் உரைப்பதற்கு மேலகதிமாக வேறெதையும் நீ உரைக்க முடி யாது. நான் ஆசீர்வதித்தவர்களை நீ சபிக்க முடியாது'' என்றார். எனவே அவன் மலையிலிருந்து கீழே உற்றுப் பார்த்தான். இந்த மாய்மாலைக்காரனை பாருங்கள்! ஓ, நாம் இதைப் பற்றி விடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கலாம், பாருங்கள். அவ்வளவு விஷயம் இதில் இருக்கிறது. இந்த பாலாக் இராஜாவைப் பாருங்கள், அவனே எல்லாவற்றிற்கும் தலைமையாக இருந்தான். அவன் இந்த கள்ளத்தீர்க்கதரிசியிடம், “நீ அங்கே போய் அவர்களுடைய பின் பகுதியைப் பார்'' என்று கூறினான். 116அதே விதமாகத்தான், தேவனுடைய சிறு மந்தையிடம் பெரிய சபைகள் சொல்ல விரும்புகின்றன. “நடந்தது என்ன என்று உனக்குத் தெரியுமா? அவர்களில் ஒருவனை நான் அறியேன். அடேயப்பா! அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் இதைச் செய்தான், அதைச் செய்தான். அவர்கள் பெந்தெகொஸ்தே காரர்கள், நிச்சயமாக'' என்று பேசுகிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய உண்மையை நீங்கள் அறிந்தால், பத்திரிக்கைகள் அவர் களுடைய காரியங்களைப் பற்றி மூச்சுக் கூட விடாது. ஆனால் எங்காவது ஒரு சிறிய பெந்தெகொஸ்தேகாரர் நல்வழியை விட்டு விலகிவிட்டால் போதும், அப்பொழுது இம் முழுத் தேசம் அதைப் பற்றி எப்படியாக வம்படிப்பார்கள் என்பதைப் பாருங் கள். நிச்சயமாக அப்படித்தான் செய்கிறார்கள். ஆம், ஐயா! ஆனால், பாலாக், பிலேயாமிடம், ''அவர்களுடைய மோசமான பின் பகுதியைப் போய் பார்'' என்று கூறினான். அதற்கு பிலேயாம், ''ஆம் நான் அவர்களுடைய பின்பகுதியைப் போய் பார்ப்பேன். அவர்கள் மோசமாக நடந்து கொள்வதை அந்தப் பின்பகுதி காண்பிக்கும். அவர்களுடைய கீழ்த்தரமான வாழ்க் கையை வெளிக்காட்டும், அவர்களுடைய பின்பகுதியை நான் போய் பார்ப்பேன், அவர்களுடைய கெட்ட பாகத்தை நான் பார்ப்பேன்'' என்று கூறினான். ஏனெனில் அவன் அவர்களுடைய மோசமான பகுதியை பார்த்தால், அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அது உண்மை . அட்டவணையில் உள்ள ஒவ் வொரு பாவத்தையும் அவர்கள் செய்திருந்தார்கள். அது சரிதான். ஆனால் பிலேயாம் அவர்களின் மத்தியில் உள்ள அடிக்கப்பட்ட கன்மலை, வெண்கல சர்ப்பம், அவர்களின் மத்தியில் இருந்து வருகிற ராஜாவின் ஜெயகெம்பீரம், சுகமளித்தல், அடையாள அற்புதங்கள் மற்றும் அவர்களுக்கு மேலாக தொங்கிக் கொண்டு இருந்த அக்கினி ஸ்தம்பம் ஆகிய இவைகளை காணத் தவறி விட்டான். கண் சொருகிப்போன குருடனான அந்த தீர்க்கதரிசியால் அதைக் காண முடியவில்லை. இல்லை ஐயா. அனால் அவனோ இஸ்ரவேலருடைய அசுத்தமான பின்பகுதியைக் காண்பித்துக் கொண்டிருந்தான். “அவர்களில் ஒருவன் இன்னொருவனின் மனைவியுடன் ஓடிப்போய் விட்டதை நான் அறிவேன். இதைப் பற்றி எனக்குத் தெரியும், அவன் கொஞ்சம் பணம் திருடிவிட் டான்'' என்றெல்லாம் பின்பகுதியைப் பற்றி பேசுகின்றர். அது சரி தான். அது சரிதான். நான் அதை ஒத்துக் கொள்வேன். ஆனால் அவர்கள் மத்தியிலும் அதே காரியங்கள் உள்ளன. ஆனால் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. பாருங்கள். எனவே பாலாக் அவனுக்கு அவர்களுடைய மோசமான பாகத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தான். 117ஆனால் தேவன் பிலேயாமிடம், “நான் என்ன சொல்லு கிறேனோ அதை மட்டுமே நீ உரைக்க வேண்டும்'' என்றார். பிலேயாம் ஆவியினால் நிறைந்து தரிசனங்கண்டான். இஸ்ர வேலரை சபிப்பதற்குப் பதிலாக அவன் அவர்களை ஆசீர்வதித் தான். ஆமென்! அவன் சரியாக செய்தான். தேவன் அடிப்படையான உபதேசங்களை மட்டும் பெற்றிருக்கிறவர்களை ஏற்றுக்கொள்கிறார் என்றால், இந்த வேத பாட சாலைகள், வேதக்கல்லூரிகள், பிஹெச்.டி. பட்டங்கள், டி.எல்.டி. பட்டங்கள், எல்லாவிதமான டி.டி. பட்டங்கள் இவைகளை தேவன் மதிக்க வேண்டுமெனில், அப்பொழுது மோவாபியர் செலுத்திய பலிகளையும் தேவன் அங்கீகரித்தாக வேண்டும். பாருங்கள்? ஆனால் அவரோ, இந்த இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனையை ஏற்றுக்கொண்டு அவர்களை ஏறகெனவே ஆசீர்வதித்துள்ளார். ஏனெனில், ஆவியானர், இராஜா, “இராஜாவின் ஜெய கெம்பீரம் அவர்களுக்குள் இருக்கிறது'' என்று கூறப்பட்டது. என்ன? என்ன? அவர் ”பரிசுத்தவான்களின் இராஜா''. மகிழ்ச்சி ஆராவாரம் அங்கே உண்டு. அதனுடைய இராஜா? இன்னொரு இராஜ்யத்தின் இராஜா. இவர்கள் மதஸ்தாபனங்களாக இருக்கவில்லையென்பதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். நான் உங்களுக்கு நிரூபித்துக் காட்டட்டுமா? அதற்காக ஒரு வேதவாக்கியத்தை நான் இங்கே குறித்து வைத்துள்ளேன் என்று நினைக்கிறேன். ஆம், ஐயா. இஸ்ரவேல் ஒரு மதஸ்தாபனமாக இருக்கவில்லையென் பதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். எண்ணாகமம் 23:9-ஐப் பாருங்கள். அவர்கள் அவ்வாறில்லை என்பதை நீங்கள் அங்கே காணலாம். மோவாபியரோ ஒரு மதஸ்தாபனமாக இருந் தனர். 8ம் வசனத்தையும் எடுத்துக் கொள்வோம். “தேவன் சபிக்காதவர்கனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக் காதவனை நான் வெறுப்பதெப்படி?” எண்.23:8 அவர் கூறுவதை இப்பொழுது கவனியுங்கள். “கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, (தேவன் தான் காண்கிறார், பள்ளத்தாக்கிலிருந்து அல்ல, கன்மலைகளின் உச்சியிலிருந்து அவர் பார்க்கிறார். ஓ! அவரது கண்கள் அடைக்கலான் குருவியின் மேலுள்ளது, அவர் என்னை நோக்கிப் பார்க்கிறார் என்று நான் அறிவேன்)... கன்மலை யுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, (ஏதோ ஒரு பள்ளத் தாக்கிலிருந்து அவர்களது மோசமான பின் பகுதியை அல்ல, அவர்கள் முழுவதையும் நான் பார்க்கிறேன்'' என்று தேவன் கூறினார்)... கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்” எண்.23:9 118இவ்வசனம் அதைத் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் ஒரு மத ஸ்தாபனமாக இருக்கவில்லை. அவர்கள் தேசாந்திரிகளாக, கூடாரங்களில் வசித்தவர்களாக, மூலைமுடுக்குகளில், முக்கிய மில்லாத புறப்பகுதிகளில் வாழ்ந்தார்கள். அவர்களை புறக்கணித்து புறம்பாக்கினார்கள். அவர்கள் வேறு எங்கோ போக வேண்டு மென்று தேவன் விரும்பினார். அவர்கள் அலைந்து திரிந்தார்கள். ஜமெய்காவில் சமீபத்தில், ஒரு அருமையான பெந்தெ கொஸ்தேயைச் சேர்ந்த வேதக்கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் நின்று கொண்டு இருந்தார். நான் அவரிடம், 'ஓ, கர்த்தர் ஆதி பெந்தெகொஸ்தே சபையை எவ்வளவாய் ஆசீர்வதித்தார், அவர்களுக்கு சொந்தமாக ஒன்றுமேயில்லை. அவர்கள் பரதேசி களாக அலைந்து திரிந்தார்கள்'' என்று கூறினேன். 'ஊ, சகோ.பிரன்ஹாம்?'' என்றார் அவர். “ஆம் சகோதரனே'' என்றேன் நான். (அவர் ஒரு அருமை யான சகோதரர், நான் அவரை நேசிக்கிறேன்). “நீர் அங்கே அதில் தவறாக இருக்கிறீர் என்பதை நான் உமக்கு காண்பிப்பேன்'' என்று பதிலுரைத்தார் அவர். நான் சொன்னேன். “நான் எங்கே தவறாக இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதால், அதைப்பற்றி சுட்டிக் காட்டினால் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். ஏனெனில் தேவனும், நான் தவறவிடக் கூடாது என்று விரும்புவதை அறிந்துள்ளார்'' என்று. ”நல்லது நான் தவறாக இருந்தால் அதைப்பற்றி நிச்சயம் அறிந்து கொள்ள விரும்புகிறேன் சகோதரரே, நன்றி உமக்கு'' என்றேன். “நீர் எப்பொழுதும் அந்த பெந்தெகொஸ்தே மக்களை புகழ்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறீர்'' என்றார் அவர். நான் “ஆம்'' என்றேன். அவர் கூறினார்: “அவர்கள் செய்ததெல்லாவற்றிலும் மிகவும் பயங்கரமான தவறை, தங்கள் ஆஸ்திகளை விற்று விட்டதன் மூலம் செய்து விட்டார்கள் என்றார். அவர் மேலும், ''சபைக்கு உபத்திரவம் வந்து போது, அவர்கள் போய் இருந்து கொள்ளத்தக்க வீடு ஒன்று அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் வீட்டை யெல்லாம் விற்றுவிட்டபடியினால், அவர்களுக்கு வேறு போக் கிடம் இல்லை, எனவே அவர்கள் அலைந்து திரிந்தார்கள். 'அது சரியானபடி தேவனுடைய சித்தமாயிருந்தது'' என்று கூறினேன். “ஏன்'' என்றார் அவர். 'அவர்களுக்கு ஒரு வீடு உண்டாயிருந்தால், அவர்கள் திரும்பிப் போய் இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களோ, இங்குமங்கும் சிதறிப் போய், பரிசுத்த ஆவியானவர் வந்திருக் கிறார் என்னும் செய்தியை பரப்ப வேண்டியவர்களாயிருந் தார்கள்'' என்று நான் பதிலளித்தேன். 119தேவன் தவறு செய்கிறார் என்று ஒரு போதும் சொல்லா திருங்கள். அவர் ஒரு போதும் தவறு செய்வதில்லை. எக்காரியத் தையும் எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை அவர் அறிந்தேயிருக் கிறார். அவர்கள் தங்களுடைய ஆஸ்திகளை விற்று விட்டு, நாடோடி களைப் போல் ஆகி, எவ்விடத்திலும் செய்தியை பரப்பினார்கள். அப்பொழுது அக்காலத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டி, எல்லாவற்றையும் விட்டு விட்டு நாடோடிகளாகத் திரிந்த அவர்களைக் கொண்டு செய்தியானது உலகமெங்கும் பரவி, யாவரும் அதை அறிந்திருந்தார்கள். அந்த மக்கள் ஒரு மத ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்களாயிருக்கவில்லை. பார்த்தீர்களா? “பிலேயாமின் போதகத்தால் நிறைந்திருக்கிறது'' என்று தேவன் மதஸ்தாபனத்தின் நிலைமையைக் குறித்து அழைக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிலேயாம், அவர்களை இந்த மதஸ்தாபன அமைப்புக்குள் கொண்டுவர இயலாத பொழுது, என்ன செய்தான் தெரியுமா? நாம் முடிவான கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். எனவே இப்பொழுது மிகவும் கவனமாகக் கேளுங்கள். அன்றைக்கு பிலேயாம் என்ன செய்தானோ அதே காரியத்தைத் தான் நிசாயா ஆலோசனை சங்கத்திலும் இவர்கள் செய்தார்கள். எனவேதான் தேவன், ”பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், நிக்கொலாய் மதஸ்தரின் போத கத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு'' என்று கூறினார். 120நிக்கொலாய் மதஸ்தினரான மக்கள் தான், பின்வாங்கி, மதஸ்தாபன அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினவர்கள். அது இறுதியாக.... அது சத்தியமானது என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அதிலிருந்துதான் ஸ்தாபனங்கள் வந்தன. தேவனுடைய சத்தியம் அதைப்பற்றி உரைக்கிறது. முடிவாக அவர்கள் உலகிலேயே மிகப் பெரிய மதஸ்தாபனத்தை உருவாக் கிக்கொண்டார்கள். அவர்கள் உருவாக்கியது என்ன? ஒரு கத்தோலிக்க ஸ்தாபனம். கத்தோலிக்கம் என்றால் என்ன அர்த்தம்? ''யூனிவர்சல்'' என்று அர்த்தம், அதாவது 'சர்வ வியாபகமான'' 'அகில உலக'' என்று பொருள். உலகளாவிய அளவில் ஒரு ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. “இந்த சிறிய குழுக்களெல்லாம் ஒரே சபை அமைப்புக்குள் வந்து விட வேண்டும்'' என்று கூறப்பட்டது. நீங்கள் இதைக் கவனிப்பீர்களானால். ஓ, நான்... இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருக்கிறோம். 121கவனியுங்கள்! பாபிலோன் எது? யார் அதை ஸ்தாபித்தது? நிம்ரோது தான் பாபிலோனைக் கட்டினான். அவன் என்ன செய்தான்? அவன் ஒரு பெரிய கோபுரத்தைக் கட்டினான். ஒரு பெரிய நகரத்தை நிர்மாணித்தான். மற்ற பட்டணங்களெல்லாம் பாபிலோனுக்கு கப்பங்கட்டும்படி செய்தான். ஸ்தாபன அமைப்பு! அதுவே இவைகளின் பின்னணியாகும். நிச்சயமாக. அதே காரியம், மறுபடியும் இந்த சபைக்காலத்திற்குள்ளாக வந்து, மீண்டும் ஸ்தாபன அமைப்பை ஏற்படுத்தி, அகில உலக நாடு களையும் அதற்குள் கொண்டுவந்துவிட்டது. வேதவாக்கியத்தில் அதைப்பற்றி சரியாக உரைக்கப்பட்டுள்ளது: '.... அந்த வேசி யானவள் வேசித்தனமாகிய மதுவை பூமியின் குடிகளுக்குக் குடிக்கக் கொடுத்தாள்'' என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவள்'' என்று கூறிக்கொண்டு, அவள் வேசித்தனம் செய்து, அவர்களுக்கு ஞானோபதேசம், ஜெபப்புத்தகம் மற்றும் இன்னபிற காரியங்களைக் கொடுத்தாள். இது அவளுடைய விபச்சாரக் கிரியையாகும். ப்ராடெஸ்டெண்டுகள் அவ்வண்ணமாகவே வந்து, சரியாக அவளது பாதையை பின்பற்றினார்கள். சரி, இன்னும் சிறிது தொடர்ந்து சென்று பார்ப்போம். சரி, சரி. அவர், “இவை பிலேயாமின் போதகம்'' என்றார். 122இஸ்ரவேலரை சபிக்க இயலாது என்பதை கண்ணுற்ற பிலேயாம் மேற்கொண்டு என்ன செய்தான்? பிலேயாம் பாலாக்கிடம், இஸ்ரவேலரை மோவாபியருடைய தேவர்களின் பண்டிகைக்கு அழைப்பது ஒரு பெரிய பண்டிகைக் கொண் டாட்டம் உண்டாயிருந்தது. அப்பண்டிகை, 'பாகால் பேயோரின் பண்டிகை'' என்றழைக்கப்பட்டது. அது அத்தேவனை அவர்கள் வணங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பண்டிகையாகும். பிலேயாமம் பாலாக்கிடம், “பாலாக்கே, நான் உமக்கு ஒரு நல்ல யோசனையைத் தருகிறேன். நீர் மட்டும்... தேவன் அவர்களை சபிக்கவே மாட்டார். இதை நான் உனக்கு தெரிவிக்கிறேன். எனவே நாம் என்ன செய்யலாம் என்பதை உமக்குச் சொல்லுவேன். அவர்களிடமிருந்து நாம் தப்ப முடியாது. ஆனால் அவர்களை நீர் விருந்துண்ண அழைத்தால், அப்பொழுது அந்த முழுக் கூட்டத்தையும் உம் வழிக்கு இழுத்துக்கொள்ளலாம்'' என்றான். 123பாருங்கள், கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் இதை போலத் தான் கான்ஸ்டன்டைனும் செய்தான். எனவே தான் பிலேயாமின் போதகம்'' என்று இக்காலத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் என்ன செய்தார்கள்? பிலேயாமின் போதகமானது பிறகு இஸ்ரவேலருக்குள் வந்துவிட்டது. மோவாபியர் அனைத்து இஸ்ரவேலரையும் இந்தப் பெரிய விருந்துக்கு அழைத்தார்கள். அவ்விருந்துக்கு இஸ்ரவேலர் எழுந்து போனார்கள். அங்கே போன போது, அந்த சௌந்தர்யவதிகளான, மோசமாக உடையுடுத்தின மோவாபிய பெண்களை இஸ்ரவேலர் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆம், அங்கே அடிவாரத்தில் பாளயமிறங்கின தங்களுக்குள் இருக்கும் சாதாரண பெண்களைப் போல் மோவாபிய பெண்கள் இருக்கவில்லை. “ஓ, அவர்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள், எப்படி அழகாக அவர்கள் தோற்றமளிக்கிறார்கள். அவர்கள் தங்கள் அழகையெல்லாம் வெளியே காண்பிக்கிறார்கள்'' என்றெல்லாம் கூறினார்கள். அவர்கள் அக்காரியத்தில் விழுந்துபோய், விபச்சாரம் பண்ண ஆரம்பித்தார்கள். தேவன் அவர்களை சபிக்காமற்போனால், பிலேயாம் அவர்களை இந்த ஸ்தாபன அமைப்புக்குள் கொண்டு வந்தால், அதின் மூலம் அவர்கள் மேல் தேவனுடைய கோபத்தை தேவன் சொரிய காரணமுண்டாக்கி, அவர்களை தேவனே கொன்று போடச் செய்து விடலாம் என்று பிலேயாம் திட்டமிட்டிருந்தான். தான் அவர்களை சத்திய பாதையை விட்டு வழிவிலகச் செய்து விட்டால், தேவன் தாமே அவர்களைக் கொன்றுபோட்டுவிடுவார் என்பதை அவன் அறிந்திருந்தான். 124பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறுவதற்கு பதிலாக, புறப்பட்டுச் சென்று ஏதாவது ஒரு சபையைச் சார்ந்து கொண்டு விடுவீர்களாயின், அப்பொழுது நீங்கள் மரித்துப் போனவர்களாயிருக்கிறீர்கள்! உங்களுக்காக அல்ல இது, ஒலிநாடாவின் மூலம் இச்செய்தி சென்றடையப் போகும் மக்கள் உள்ளத்தில் இவைகள் பதிய வேண்டும் என்றே கருதி நான் இவைகளை வலியுறுத்திக் கூறுகிறேன். “செத்தவனாயிருக்கிறான்''! சர்தை சபையின் காலத்தில் லூத்தரிடம், ”நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும்'' என்று பொருள். 'நீ உயிருள்ளவன் என்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்''. அதைத் தான் தேவன் அங்கே கூறினார். சபையானது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு விவாகம் செய்வதை விட்டு விலகி, மத ஸ்தாபன அமைப்புக்கு தன்னை விவாகம் செய்வித்துக் கொண்டு விட்டபடியினால், அவர்கள் ஆவிக்குரிய வேசித்தனத்தை செய்து, மரித்துப் போய் விட்டார்கள். உங்கள் நிலைமை அவ்வாறுதான் உள்ளது. சபைகளுக்குப் பேசிய போது தேவன் இவ்வாறு தான் உரைத்தார் என்று வேதம் கூறுகிறது. ஆம், பாருங்கள்? 125இப்பொழுது நான் ஒன்றை வாசிக்க விரும்புகிறேன். தேவன் என்ன செய்தார்? அவர்கள் இந்த தீமையான காரியத்தைச் செய்தபோது, அவர்கள் விபச்சாரக் குற்றத்தில் அகப்பட்டார்கள். ஒரே நேரத்தில் அவர்களுக்குள் 42,000 பேரை தேவன் கொன்றுபோட்டார். விபச்சாரம் செய்ததற்காக அவர்களில் நாற்பத்திரண்டாயிரம் பேர்களை ஒரேயடியாக தேவன் கொன்று போட்டார். சபைக்காலத்தில் அது எவ்வாறு கூறப்பட்டுள்ளது? “கிறிஸ்தவன்'' என்று நீங்கள் உங்களை அழைத்துக்கொண்டுவிட்டு, அதே சமயம் உலகப்பிரகாரமாக நடந்துகொள்கிறீர்கள். இதுவே ஆவிக்குரிய விபச்சாரமாக இருக்கிறது. இந்த பழைய, ஒன்றுக்கும் உதவாத கோட்பாடுகளை விட்டு விலகுங்கள். ஓ, சகோதரனே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். உளுத்துப்போன சடங்காச்சாரியங்களிலிருந்து விலகுங்கள். அவைகள் மரித்தவை யாக இருக்கின்றன. (அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்தை மனப்பாடமாக ஒப்பித்தல், ஜெபப் புத்தகங்களில் எழுதப் பட்டுள்ள ஜெபங்களை வாசிப்பது, மற்றும் இன்னபிற கோட் பாடுகள்). இயேசு ஒருபோதும் ஜெபத்தை புத்தகத்திலிருந்து வாசித்து ஜெபம் சொல்ல வேண்டுமென தன் ஜனங்களுக்குச் சொல்லவில்லை. ”ஜெபம் பண்ணுங்கள், ஜெபம் பண்ணுங்கள்'' என்றே கூறியுள்ளார். சரி. பிலேயாமைப் போலவே, கான்ஸ்டன்டைனும் விருந்துக் கழைத்தான். இப்பொழுது கவனியுங்கள். பிலேயாமின் அஞ்ஞான பண்டிகை விருந்தைப்போலவே, கான்ஸ்டன்டைனும் அஞ்ஞான விருந்து படைத்தான். சரி, பெர்கமு சபை அவ்விருந்துக்கு வரும்படி அழைக்கப்பட்டது. இந்த விஷயத்தைக் கவனியுங்கள். 126நான் ஒரு குறிப்பை இங்கே எழுதி வைத்துள்ளேன். நான் இதைக் குறிப்பிடாமல் அப்படியே விட்டுவிடப் போகிறேன். சரி. இக்குறிப்பை கவனித்தில் எடுத்துக்கொள்ள நான் விரும்பினேன். பெர்கமு விருந்துக்கழைக்கப்பட்டது. சரி, நிசாயா ஆலோ சனை சங்கத்துக்குப் பிறகு ஒரு விருந்துக்கு அவர்கள் அழைக்கப் பட்டார்கள். அவர்கள் விண்டர் சொலாஸ்டைஸ்'' என்ற விருந்துக்கு அழைக்கப்பட்டனர். (பூமத்திய ரேகைக்கு மிகவும் தெற்காக சூரியன் சாய்ந்திருக்கையில், அப்பொழுது டிசம்பர் 21-ல் பூமியின் வடக்குப் பிராந்தியத்தில் உண்டாயிருக்கிற நேரத்திற்கு இப்படிச் சொல்லப்படுகிறது - அச்சமயம் சூரிய வணக்கக்காரர்கள் ஓர் விருந்து கொண்டாடுவது வழக்கம் - மொழிபெயர்ப்பாளர்). அதனுடைய அர்த்தம், சூரிய வணக்கத்திற்குரியது ஆகும். அது ஒரு அஞ்ஞான கடவுள் வணக்கமாகும். அது டிசம்பர் 21ம் தேதி வருகிறது. ஒரு ஆண்டில் மிகவம் குறைந்த அளவே பகல் இருக்கிற நாள் அதுதான். டிசம்பர் 25ம் தேதி வரைக்கிலும் இந்த நேர அளவு மாறுவதில்லை. அனைத்து அஞ்ஞானிகளும் அதை சூரிய வணக்க நாளாகக் கொண்டாடினார்கள். சூரியக் கடவுளின் பிறந்த நாள் எனக் கொண்டாடப்படட் டிசம்பர் 21ம் தேதி தான் வருடத்தின் மிகக் குறைந்த அளவு பகற்காலம் உள்ள நாளாகும். சபைகளைப் பற்றிய வரலாற்றைப் படித்தறிந்தவர்கள் எவரும், அந்நாளில் விக்கிரக ஆராதனைக்காரர்கள் சூரியக் கடவுளின் பிறந்த நாள் எனக் கொண்டாடினார்கள் என்பதை நன்கு அறிவர். அது ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோமர்கள் தங்களது வட்டவடிவமான விளையாட்டரங்களில் அந்நாளில் பெரிய விளையாட்டுக்களை நடத்துவார்கள். அதைப்பற்றி “பென் ஹர்'' திரைப்படத்தில் எத்தனை பேர் பார்த்தீர்கள்? ரோமானியர்கள் அவ்விதமான விளையாட்டுக்களை சூரியனின் நாளில் ரோம அரங்கசாலைக்குள், சூரியக்கடவுளின் பிறந்த நாள் கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். பாருங்கள்? 127அவர்கள் இந்த பெரிய விருந்து கொண்டாடுதலைச் செய்து, அதற்கு நிக்கொலாய் மதஸ்தரை அழைத்தார்கள். ஓ, அது பூரணமாக உள்ளதல்லவா? 'பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு “ என்று வார்த்தைக் கேற்ப இது இல்லையா? பாருங்கள், பெர்கமுவிடம் தேவன், அவர்களுக்குக் கிடைத்திருந்த அந்த பெரிய பந்தயங்களைப் பற்றி சொல்லுகிறார். 128இந்த நிக்கொலாய் மதத்தினர், “இது நல்லது, அருமையாக இருக்கிறது, இந்த பெரிய பண்டிகை வருடத்திற்கொருமுறை கொண்டாடப்படுகிறது, ஆம்'' என்று எண்ணினர். ஆகவே, இந்த ஆர்ச்பிஷப் மற்றும் இப்படிப்பட்ட பதவிகளை வகித்தவர்களுக்கு வந்த அழைப்பினாலே, அவர்கள் சூரியக்கடவுளுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடர்ச்சியாக ஆசரிக்க விரும்பினர். இவ்வாறாக அவர்கள் வேசித்தனங்களை, விபச்சாரங்களை உள்ளே கொண்டுவந்தனர், கத்தோலிக்க சபையை உருவாக்கினர். அதில் ஒவ்வொரு ப்ராடெஸ்டெண்ட் சபையுமே அங்கம் வகிக்கின்றன (ஸ்தாபனம்). தேவனுக்கு ஸ்தாபனம் எதுவும் கிடையாது. அவர் அந்தப் பெயரைக் கேட்கவே வெறுப்படைகிறார். வேதம் அவ்வாறு கூறுகிறது. அவர்கள் அதைச் செய்தபொழுது என்ன சம்பவித்தது? இப்பொழுது அந்த அஞ்ஞானப் பண்டிகைக்கு கிறிஸ்தவ நாமகரணம் சூட்டி அதை ஆவிக்குரியதாக சம்பந்தப்படுத்திக் காண் பிக்க விரும்பினர். எனவே அவர்கள் (கர்த்தராகிய இயேசுவாகிய) தேவ குமாரனின் பிறந்த நாளை (Son of God's birthday) அது ஏற்பட்ட ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றினார்கள். (எந்த அறிஞரும் அவர் ஏப்ரலில் தான் பிறந்தார் என்றறிவர். ஆவிக்குரிய வெளிப்பாடுகளைப் பெற்ற எந்தவொரு மனிதனும், அவர் பிறப்பு இயற்கையோடு சரியாக ஒத்திருந்தது என்றும், இயற்கை பூத்துக் குலுங்கும் மாதம், ஆட்டுக்குட்டிகள் மற்றும் யாவும் பிறக்க ஏற்றதான இயற்கையின் சரியான வேளையாகிய ஏப்ரலில் தான் அவர் பிறந்தார் என்பதை அறிவர்). அப்படி மாற்றிவிட்டு, அவ்வஞ்ஞானப் பண்டிகைக்கு கிறிஸ்துமஸ் எனப்பெயர் சூட்டிக் கொண்டாடினார்கள். இப்பொழுது அதில் சாண்டா க்ளாஸ் என்பதையும் சேர்த்து விட்டார்கள். ஓ, இரக்கமுண்டாகட்டும். பாருங்கள்? இன்னும் அதிகமான அஞ்ஞான பண்டிகைகளும் கிறிஸ்தவத்தோடு சேர்த்துக்கொள்ளப் பட்டு கொண்டாடப்பட்டது. அவ்வளவுதான். பிலேயாமின் விருந்துக் கழைத்தலை அங்கே காண்கிறீர்கள். 'பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு''. இதுதான் அது. (ஓ தேவனே, அதை வெளிப்படுத்தும், பிதாவே). பாருங்கள்? ஏப்ரலில் இருந்து பிறந்தநாளை மாற்றினார்கள். 129வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்: “ஏனைய ஜீவன்களெல்லாம் புறப்பட்டு வரும் மாதமாகிய ஏப்ரலில் தான் இயேசுவும் பிறந்திருக்க வேண்டும் என்பதற்கு அனைத்து சான்றுகளும் உள்ளன'' என்று. ஆனால் அவர்கள் அஞ்ஞான சூரியக் கடவுளின் பிறந்த நாளான டிசம்பர் 21ம் தேதிக்குப் பதிலாக ஐந்து நாட்களை தள்ளிவைத்து, டிசம்பர் 25 என்று வைத்துக் கொண்டு (பாருங் கள்?), அந்நாளில் இக்கொண்டாட்டத்தை ஏற்படுத்தி, அதின் மூலம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்றவாறும், அஞ்ஞானிகளையும் திருப்திப்படுத்தவும் இவ்வாறு சமரச ஏற்பாடு செய்தார்கள். அஞ்ஞானமும் கிறிஸ்தவமும் கைகோர்த்துக் கொண்டன. கத்தோலிக்க மதம், அஞ்ஞான மூடநம்பிக்கைகள் நிறைந்த ஒரு கூட்டமாகத்தான் உலகில் இருந்து வருகிறது. கிறிஸ்தவத்திற்கு புறம்பாக்கப்பட வேண்டியவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருக்கிற ஒரு ஸ்தாபனம் அது. அது சரிதான். அது உண்மை . இதற்கு உட்பட்டு இணங்கி நடந்து கொள்ளும் ப்ராடெஸ் டெண்டுகள், தாய் வேசியின் மகளுக்குரிய எல்லா சிறப்போடும் நடந்துகொள்கிறார்கள். சரியாக அப்படியே நடந்துகொள்கிறார்கள். தெய்வீகத் தன்மைக்கு எதிரானதாக இருக்கும் எந்த வொன்றையும் ஏற்காமல் எதிர்க்கக்கூடியவர்களாக நாம் இருப்ப தற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக. பாருங்கள்? ஓ! 130தாங்கள் செய்து கொள்ளும் வேதவிரோத காரியத்தை ஆவிக்குரிய சம்மந்தமுள்ளதாக ஆக்க இந்த பிஷப் என்ன சொன்னார் தெரியுமா? “நமக்கு இவ்வாறு செய்து கொள்ளுவதற்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் இயேசுவும், ''நீதியின் சூரியன்'' ஆகத்தானே இருக்கிறார் என்று அந்த அத்தியட்சகர் கூறினார். மத்தேயு 28:19ல் உள்ள ”பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்“ என்று சொல்லப்பட்டதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது போல், தங்கள் வேதப்புரட்டுக்கு சாதகமாக வசனத்தை தவறாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஆவிக்குரியதான வர்ணம் பூசுவதற்கு அவர்களுக்கு ஒரு சாக்குப்போக்கு, சந்து நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அது அவ்வாறில்லை. “இரண்டு அல்லது மூன்று சாட்களின் வாயினால் எந்தவொரு காரியமும் உறுதிப்படும்'' என்று வேதம் கூறுகிறது. தேவன் அதைக் கூறினார். அதை அவர் மூன்று தடவைகள் கூறியிருக்கிறார். எந்த ஒன்றையாவது சாட்சிகளினால் உறுதிப்படுத்த தேவன் விரும்பிய பொழுது, அப்பொழுதெல்லாம் அவர், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரையும் அழைத்துச் சென்றார். அவர் செய்த காரியங்களிலெல்லாம் அவ்வாறாக இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை அவர் வைத்துக்கொண்டார். அவர் செய்த வைகளை நிரூபிக்க அவ்வாறு செய்தார். வேதம் முழுவதும் அவர் அவ்வாறே செய்தார். 131ஆனால், பாருங்கள், இந்த சிறிய காரியங்கள் வரவேண்டிய தாயுள்ளது, அவ்வாறு இருப்பதற்காக அவர்கள் அதை எடுத்துக் கொள்கின்றனர். தேவன் அதை உலகத்தோற்றத்திற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அங்கே அவர்கள் அந்த ஆவிக்குரிய சாயம் பூசுவதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, “அவர் தேவனுடைய குமாரனாக (S-O-N of God) இருக்கிறார். நாம் அந்த அஞ்ஞான சூரியக்கடவுளின் பிறந்த நாளை (S-U-N God's birthday) எடுத்து, அதை தேவ குமாரனின் பிறந்த நாளாக (S-O-N OF GOD'S birthday) ஆக்கிவிடலாம், ஏனெனில் அவரும் நீதியின் சூரியனாக வேறு (S-U-N OF RIGHTEOUSNESS) இருக்கிறார்''. ப்ராடெஸ் டெண்டுகள் இன்னமும் அந்த பிழைக்கு உடந்தையாக இருக்கிறார் கள். அவர்கள் நிச்சயமாக வேதத் திலுள்ளதை தங்களுக்கு சௌ கரியமாக உள்ள ஒரு விஷயத்திற்காக புரட்டி மாற்றி விடுவார்கள். ஓ, என்னே ! நான்... ஒரு நிமிடம் இங்கே நிறுத்துவோம். இன்னும் ஒரு சிறு காரியம் இங்கேயுள்ளது. இதையும் நாம் பார்த்து விடுவோம். கடைசியாக உள்ள இந்த வசனங்களை நாம் வேகமாக எடுத்துக்கொள்வோம். நமக்கு இயலுமா? ஆம், நல்லது, நாம் இப்பொழுது மிகமிக விரைவாக இந்த வசனத்தைப் பார்ப்போம். அதிலுள்ள முக்கியமான கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம். “ஆகிலும் சில காரியங்களைக் குறித்து உன் பேரில் எனக்குக் குறை உண்டு... பிலேயாம்... (நான் அதை ஏற்கனவே எடுத்துக்கொண்டு விட்டேன்) ”...நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளு கிறவர்களும் உன்னிடத்திலுண்டு...'' “நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்...'' வெளி.2:16-17 132என்னே! கான்ஸ்டண்டைன் அக்காரியத்தைச் செய்த போது... அவர்கள் அந்த பெரிய பண்டிகையை குறித்தபொழுது... நான் அதைவிட்டு விலகிப் போய்விட்டேன். நான் அதைப்பற்றி குறிப்பை படிப்பதற்கு முன்னால், நான் கொஞ்சம் காத்திருக்கப் போகிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் என்னை பின்னால் உள்ள காரியங்களை எடுத்துப் பேசும்படி செய்தார். “நீ அதை சொல்லாமல் அடக்கி வைக்க வேண்டாம்'' என்று உரைக்கப் பட்டது. இங்கே அது வருகிறது ஊ - ஹூ, ஊ - ஹூ, நல்லது, அதன் காரணம் என்னவெனில்... 133அவர்கள் அந்த பெரிய காரியத்தை நியமித்தபோது, (நீங்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக, என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லுவேன்) அது தான் ஆயிரவருட காலத்திற்கு பிந்திய காலம் பிறந்ததாக இருக்கிறது. ஏனெனில் சபையானது ஐசுவரியமடைந்துவிட்டது, அது எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஐசுவரியமடைந்துவிட்டது. அது இப்பொழுது என்ன நிலையை அடைந்துவிட்டது? மிகவும் அதிகாரமுள்ளதாக ஆகி விட்டது. அது அரசாங்கத்திற்கும் மேலாக மேலாண்மை உள்ளதாக ஆகிவிட்டது. இப்பொழுது சபையும் அரசும் ஒன்றாக இணைந்து விட்டன. இப்பொழுது தேவனுக்கு ஒரு இராஜ்யம் கிடைத்து விட்டதா? பிசாசானவன் இயேசுவுக்கு உலகத்தின் இராஜ்யங்களை யெல்லாம் காட்டி, “இவை ஒவ்வொன்றும் என்னுடையவை, எனக்குப் பிரியமானதை அவைகளுக்குச் செய்கிறேன்'' என்று கூறினான். அப்படியிருக்க தேவனையும் பிசாசையும் ஒன்றிணைத்து விட முடியுமா? ஓ, நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது! நிச்சயமாக அவ்வாறு நீங்கள் செய்ய முடியாது. அதனால்தான் அரசானது ஸ்தாபனமாக உள்ளது. தேவன் இந்த ஸ்தாபனம் அல்ல. நீங்கள் தேவனை ஸ்தாபம் ஆக்க முடியாது. 134ஆனால் அவர்கள் அன்றைக்கு அவ்வாறு ஆக்கிவிட்டார்கள். கிறிஸ்தவ மதம் என்றழைக்கப்பட்ட தங்களுடைய சபையை ரோமன் இராஜ்யத்தோடு முழுவதும் இணைத்துக் கொண்டார்கள். அங்கு இருந்த ரோம அத்தியட்சகர் தான் எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாரம் உள்ளவராக இருந்தார். அவரை போப் என்று அழைக்கத் துவங்கினர். ஆனால் அவர் முதலில் அத்தியட் சகராகத்தான் இருந்தார். முதல் போப்பாக ஆனவர் மூன்றாம் போனிபேஃஸ் என்பவர் ஆவார். 135இவ்வாறாக அவன் ஒரு போப்பை அங்கே ஏற்படுத்திய போது, அவர்களுக்கு மனித உருவில் கிடைத்துள்ள ஒரு கடவுள் என்றே கருதினர். அவர்களுக்கு ஒரு பெரிய பலிபீடம் இருந்தது. அவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் உண்டாயிருந்தன. அவர்களுக்கு மகத்தான சலவைக்கற்கள், பொருந்திய முத்துக்களினால் அலங்கரிக்கப்பட்ட பீடங்கள் இருந்தன. பெரிய ஆலயக் கட்டிடங்கள் அவர்களுக்கு இருந்தன. அவர்கள் அரசாங்கத்தின் மேலும் ஆதிக்கம் உடையவர்களாக இருந்தனர். என்ன சொன்னார்கள் தெரியுமா? ''அதுவே ஆயிரவருஷ அரசாட்சி'' என்று அவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். ''யூதர்களுக்குள்ள வாக்குத்தத்தங்களெல்லாம் இப்பொழுது அவர்களுக்கு கிடை யாது, அவர்களை தேவன் கைவிட்டார்'' என்றார்கள். (தேவன் அவ்வாறு தன்னால் செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார்). இவ்வாறு கூறி, கர்த்த ராகிய இயேசு வருவதற்கு முன்னால், ஆயிர வருஷ அரசாட்சியைக் கொண்டு வந்து விடலாம் என்று முயன்றார்கள். ஆனால் இயேசு வருகிறபொழுதுதான் ஆயிர வருட அரசாட்சி ஆரம்பிக்கிறது. அந்த இடத்தில் தான், 'ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு உள்ள காலம்'' என்ற கொள்கையின் பிறப்பிடமாகியது. அக்காரணத்தினால்தான் கத்தோலிக்கர்கள் இன்று வரையிலும் இயேசுவின் வருகையைக் குறித்து உபதேசிக்கிறதில்லை. “அதெல்லாம் சபையில் இருக்கிறது. இதுவே ஆயிர வருஷ அரசாட்சி. சபைக்கு யாவும் சொந்தமாக இருக்கிறது. இதுதான் அது'' என்று கூறினர், பாருங்கள், இயேசுகிறிஸ்து திரும்பி வராமலேயே ஆயிரவருட அரசாட்சி நடக்கிறது என்ற அவர்களின் கொள்கையைப் பார்த்தீர்களா? இச்சபையின் காலம் கான்ஸ்டன்டைன் கொலை செய்யப்படும் வரைக்கிலும் நீடித்தது. அது கி.பி.312 முதல் 606 முடிய உள்ள காலம் வரை நீடித்தது. மூன்றாவது போனிபேஃஸ் என்பவன் அகில உலகத்திற்கும் அத்தியட்சகராக, அல்லது அகில உலக சபையின் முதல் போப்பாக ஆக்கப்பட்டான். நாம் இப்பொழுது 17ம் வசனத்தை எடுத்துக்கொண்டு, முடித்துவிடுவோம். தேவனுக்கு ஸ்தோத்திரம். பாருங்கள்? “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ள வன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப் பட்டதும், அதைப் பெறுகிறவனேயன்றி வேறொரு வனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது” வெளி.2:17 136இதை நாம் நாளை இரவு வரை காத்திருந்து பார்ப்போமா, அல்லது இப்பொழுதே பார்த்து விடுவோமா? (சபையார், “இப்பொழுதே'' என்று பதிலளிக்கிறார்கள் - ஆசி.) 285. பரமபிதாவே, இப்பொழுது இந்த ஜனங்களும், இந்த ஒலி நாடாக்கள் போகிற எல்லா இடங்களில் அதைக் கேட்கிற ஜனங்களும் இதைப் புரிந்து கொள்ளும்படி கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் உதவி செய்தருளும். எனக்கு நீரே இந்த தெய்வீக வியாக்கியானத்தை அளித்தீர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளச் செய்யும். ஆமென். ....ஜெயங் கொள்ளுகிறவனுக்கு.... நீங்கள் முதன்மையாக இதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய காரியம் என்னவெனில்: ஒவ்வொரு சபைக் காலத் திற்குரிய செய்திகளை தேவன் சபையை விளித்துக் கூறவில்லை. ஆனால் அந்தந்த சபைக் காலத்திற்குரிய தூதனை விளித்தே அவைகளை கூறியுள்ளார். முதல் சபைக்கு என்ன சொல்லப்பட்டது என்று பாருங்கள். ''...எபேசு சபையின் தூதனுக்கு...'' (அது சரியா?) வெளி. 2:8-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். “...சிமிர்னா சபையின் தூதனுக்கு... நல்ல து, 12ம் வசனம்: “...பெர்கமு சபையின் தூதனுக்கு...'' (அது சரியா?) 137செய்தியானது சபையின் தலைவனுக்குத் தான் கொடுக்கப் படுகிறது. அச்செய்தியிலிருந்து விலகிச் செல்லுகிறவனுக்கு தேவன் உதவி புரிவாராக. ஆனால் அது ஒரு தூதனுக்குக் கொடுக் கப்பட்டது. அத்தூதன் அவருடைய கரத்தில், அவருடைய ஆதிக் கத்திற்குள் இருந்துகொண்டு, அவருடைய வலது கரத்திலுள்ள ஒளியையும் வல்லமையையும் கொடுத்துக்கொண்டிருக்கிறதாக இருக்கிறான். அவர்களே அவருடைய வலது கரமாக இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் இப்பூமியில் இருக்கையிலேயே, அதிசிரேஷ்டமான உன்னத அதிகாரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் அவரிடத்திலிருந்து வரும் ஒளிகளாக, அந்த சபைக் காலத்திற்கு ஒளியைக் கொடுத்துக்கொண் டிருக்கிறவர்களாக இருக்கிறார்கள். ''சபையின் தூதனுக்கு“ என்பதைப் பாருங்கள். அந்தந்த சபைக் காலத்திற்கு பொறுப்பாயுள்ள நட்சத்திரமாகிய தூதர்களை அழைத்து அவர் இவைகளை கூறியுள்ளார். சபையின் காலத்திற்குரிய தூதன் வார்த்தையைப் பிரசங்கியாதிருந்தால், அவனே அதற்கு பொறுப்பாளியாயுள்ளான். அது உண்மை . நியாயத்தீர்ப்பில் அவன் அதற்கு பதில் சொல்லி யாக வேண்டும். 138சமீபத்தில் நான் கண்ட அந்த தரிசனத்தைப் பற்றி சொன் னேன். அதை எத்தனை பேர்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? நான் என் படுக்கையில் படுத்திருக்கையில், பரிசுத்த ஆவியானவர் வந்தார். நான் திரும்பிப் பார்க்கையில் அங்கே என் மனைவியைக் கண்டேன். நான் அங்கே கட்டிலில் படுத்திருந்தேன். அதே சமயத்தில் தேவ சமூகத்திற்குப் போனேன். அங்கிருந்த எல்லா மக்களையும் நான் பார்த்தேன். அதைப்பற்றி நான் கூறியதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் அனைவருமே நினைவில் வைத்துள்ளீர்கள். பாருங்கள்? நான் கேட்டேன்: ''ஏன், அவர்கள்...'' “அவர்கள் உம்முடையவர்கள்'' என்று அவர் கூறினார். 'அவர்கள் யாவரும் பிரன்ஹாம் குடும்பத்தினரா?“ என்று கேட்டேன். அவர், “இல்லை'' என்றார். அவர்கள் இலட்சக்கணக்கில் இருந்தார்கள். 'அவர்கள் உன்னுடைய ஊழியத்தில் மனந்திரும் பியவர்கள்' என்றார். “மனந்திரும்பியவர்களா?'' என்றேன் நான். “இதோ அங்கே நீ பார்த்த ஒரு பெண்மணியை இளவயதும் அழகும் உள்ளவள் என்று நீ மெச்சினாயே. உலகத்தில் அவள் 90 வயதை கடந்தவளாய் இருக்கையில், நீ அவளை கிறிஸ்துவண்டை நடத்தினாய்'' என்றார். ஓ, அப்படியென்றால் எனக்கு இது பயமாக இருக்கிறது'' என்றேன் நான். “நாங்கள் கர்த்தருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக் கிறோம்'' என்றார் அவர். “நான் அவரைக் காண விரும்புகிறேன்'' என்றேன். 139'அவரை நீங்கள் இப்பொழுது காண முடியாது, ஆனால் அவர் வருவார். நாங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அவர் வரும்போது முதலில் உம்மிடம் வருவார். நீர் பிரசங்கித்த சுவிசேஷத்தின்படியே நீங்கள் நிதானிக்கப்படுவீர்கள். நாங்கள் உம்முடைய குடிகளாக இருப்போம்'' என்று அவர் கூறினார். ''இவர்களுக்கெல்லாம் நான் பொறுப்பாளியா?'' என்று கேட்டேன். “எங்கள் யாவருக்கும்'', என்றார். ''நல்லது, ஒவ்வொருவரும்...?'' என்று சொன்னேன். ”நீர் ஒரு தலைவனாகப் பிறந்தீர்'' என்றார் அவர். ''ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவர்களா?'' என்று நான் கேட்டேன். “ஒவ்வொரு தலைவனும்'' என்று பதிலளித்தார் அவர். ''பரிசுத்த பவுலைப் பற்றி என்ன?'' என்று நான் கேட்டேன். ''அவர் தன் காலத்திற்கு பொறுப்பாளியாவார்'' என்றார். “நல்லது, நான் பவுல் பிரசங்கித்த அதே சுவிசேஷத்தையே பிரசங்கித்தேனே'' 140அப்பொழுது இலட்சக்கணக்கான சப்தங்கள்: ''நாங்கள் அதின் பேரில் தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்'' என்று ஏகமாய் கூறின. (சபையார் களிகூர்ந்து, 'ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி). “இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள்'' எனவே தேவனுடைய தூதனாகிய, சபையின் செய்தியாளன், தான் வசனத்தைப் பிரசங்கிக்காமல் இருந்தால், பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவனாயிருக்கிறான். சரி. “மறைவான மன்னா''. அதைப்பற்றி முடிந்த அளவு சிறப் பான வியாக்கியானத்தை நாம் தருவோம். ”மறைவான மன்னா'' என்பது எதற்கு சாயலாக இருக்கிறது? மறைவான மன்னா என்பது, வேதத்தில் சமூகத்தப்பம் எனப்படுவதாகும். அது ஆசாரியர் களுக்கு மட்டும் புசிப்பதற்கென உள்ளதாகும். எத்தனை பேர்கள் அதை அறிந்திருக்கிறீர்கள்? பாருங்கள்? அது சபையாருக்கு அல்ல... சபையாருக்கென உள்ள அப்பம் உண்டு, ஆனால் ஆசாரியனுக்கென்றே பிரத்தியேகமாக உள்ள ஒரு அப்பமும் உண்டு . 141இது தானே ஒரு சிறப்பான அப்பமாகும், மறைவான மன்னா அது. அது என்ன? நமது மன்னா யார்? கிறிஸ்துவே நமத மன்னா. யோவான் எழுதின சுவிசேஷம் 6ம் அதிகாரம் 48 முதல் 50 முடிய உள்ள வசனங்கள், வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள் ளுங்கள். இயேசு கூறினார், ''வானத்திலிருந்து தேவனிடமிருந்து வந்த ஜீவ அப்பம் நானே''. மன்னா. நல்லது, ''மறைவான மன்னா'' என்பது என்ன? சபையார் யாவருக்கும் இந்த மன்னா கொடுக்கப்படுவதில்லை. வார்த்தையைப் பற்றி வெளிப்பாடு சபையின் தூதனுக்குத்தான் ஊற்றப் படுகிறது. பாருங்கள்? வார்த்தையைப் பற்றிய வெளிப்பாடு அந்தந்த காலத்திற்கு உரிய தூதனுக்கு அளிக்கப்படுகிறது. அது மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டு, (அதுவே மறைவான மன்னா), சபையின் தூதனுக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் அதைக் கிரகித்துக் கொண்டீர்களா? கிறிஸ்து யார் என்பதைப் பற்றிய வெளிப் பாடு மற்றவைகளைவிட சற்று மேலானதாக, சற்று மேலான அழைப்பைக் கொண்டதாக இருக்கிறது. லூத்தர் அதை கண்டு கொண்டாரா என்பது தெரியவில்லை. ஓ, பரிசுத்த மார்ட்டின் அதைக் கண்டு கொண்டாரா என்பது தெரியவில்லை. ஐரேனியஸ் பற்றியும் தெரியவில்லை. சபையானது இம்மனிதர்களையெல்லாம் அவர்கள் இறந்த பிறகு பரிசுத்த வான்களாக நியமிக்கவில்லை. அவர்களெல்லாம் இவர்களுக்கு பரிசுத்தவான்கள் அல்ல ஆனால் அவர்களோ அடையாளங்கள் தங்கள் ஊழியத்தில் கொண்டவர்களாக இருந்தனர். கத்தோலிக்க சபையோ, தங்களுடைய அத்தியட்சகர்கள் போன்றவர்களை, அவர்கள் இறந்தபிறகு பரிசுத்தவான்கள் என்று அறிவித்தது. சமீபத்தில் ஒரு பெண்மணி ஒரு ஆங்கில புத்தகக் கடைக்குச் சென்று, “பரிசுத்த மார்ட்டின் வாழ்க்கை சரிதை” என்ற புத்தகத்தை வாங்கச் சென்றாள். அவள் “பரிசுத்த மார்ட்டின்'' என்று சொன்னதும். 142புத்தகக்கடைக்காரர், புத்தக அலமாரியை இழுத்துப் பார்த்து விட்டு, ''அவர் வரலாற்றில் அவ்வளவாய் அறியப்பட்டவரல்ல, அவர் இறந்த பிறகு அவரைப் பரிசுத்தவான் என சபை ஆக்க வில்லையே'' என்றாராம். பாருங்கள்? இன்று வரையிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் தேவனோ அவருடைய நாமத்தை அறிந்திருக்கிறார். மார்ட்டின் யார் என்று தேவன் அறிவார். 143பாருங்கள், அதுவே உள்ள வேறுபாடாகும். சிலர் தங்களுடைய நாமங்களை சில பெரிய ஸ்தாபனங்களில் பதிந்து கொண்டு விடவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தேவனுடைய ஜனங்களோ அவ்விதமான காரியத்தை புறக்கணித்து விடுகிறார்கள். அவர்கள் பெரிய ஆடம்பரமான காரியங்களை விரும்புகிறதில்லை. அவர்கள் பணிவாகவே இருக்க விரும்பு கிறார்கள். தாழ்மையையே விரும்புகிறார்கள். மேலே செல்லும் வழி கீழே உள்ளது. 'தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான். தன்னைத் தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்'' அவர் தன்னைத் தான் தாழ்த்தினார். ஏதோ ஒரு பெரிய ஆளாக உங்களை காண்பித்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எப்படியிருக் கிறீர்களோ அப்படியே இருங்கள். பாருங்கள்? தாழ்மையா யிருங்கள். தேவனுக்கு முன்பாக எளிமையாக இருங்கள். உங்கள் பார்வையிலும் நீங்கள் எளிமையாக இருங்கள். உங்களைப் பார்க்கிலும் மற்றவர்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். ''...உங்களில் பெரியவனாயிருக்க விரும்புகிறவன் உங்கள் யாவருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்'' என்று கூறப்பட்டுள்ளது. 144தன் அரையைக் கட்டிக்கொண்டு, சீஷர்களின் பாதங்களைக் கழுவின இயேசு கிறிஸ்துவைவிட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்? அவர் பாதங்களை கழுவிவிடுகிற ஒரு அடிமையைப் போல் ஆனார். பரலோகத்தின் தேவன், வானங்களையும் பூமியை யும் சிருஷ்டித்தவர், அங்கே கால்களில் படிந்த தூசியோடும், சாணத்தோடும் உள்ள பாதங்களோடும், அழுக்கான ஆடை களோடும் இருந்த அந்த மீன்பிடிக்கிறவர்களின் பாதங்களை (ஓ!) கழுவிவிடுகிற ஒரு அடிமை வேலைக்காரனைப்போல், கழுவி சுத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்க நாமோ, நம்மை ஏதோ பெரிதாக நினைத்துக்கொள்ளுகிறோம். 'நாங்கள் டாக்டர் பட்டம் பெற வேண்டும், பிஹெச்.டி. பட்டம் பெறவேண்டும்'' என்று எண்ணுகிறீர்கள். ஓ, என்னே ! அது கிறிஸ்துவுக்குரிய சிந்தையல்ல. அது அன்புள்ள இயேசு கிறிஸ்துவை காண்பிக் கிறதாக இல்லை. அவர் யாவர்க்கும் வேலைக்காரனாக ஆனார். அது உண்மை . அவர் நமக்குச் செய்தது போலவே நாமும் ஒருவருக் கொருவர் செய்யும்படி நமக்கு அவர் முன்னுதாரணமாக இருந்து நமக்குப் போதித்தார். ஓ அதுவே என்னுடைய கர்த்தர். அவர் பெரியவராக இருப்பதற்கு காரணம் அவர் சிறியவரானதால்தான். பாருங்கள், அதுவே அவரை அந்நிலைக்கு உயர்த்தியது. என் வாழ்க்கையில் சில பெரிய மனிதர்களை நான் சந்திக்கும் சிலாக்கியம் கிடைத்தது. தாங்கள் பெரிய மனிதர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த சில மனிதர்களை சந்திக்கும் சிலாக்கியமும் எனக்குக் கிடைத்தது. ஒரு உண்மையான பெரிய மனிதன், நீங்கள் தான் பெரியவர் என்று உங்களை நினைக்க வைக்கிறதற்கேதுவாக செய்து, தன்னை ஒன்றுமில்லாதவராகக் காட்டுகிறார். பாருங்கள்? இராஜாக்களையும், உண்மையிலேயே பெரிய மனிதராயிருக்கிறவர் களையும் சந்தித்திருக்கிறேன். உண்மையான, உறுதியான கிறிஸ்தவர்களை, நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒட்டுப் போடப்பட்ட உடைகளை உடுத்தினவர்களாக இருந்தார்கள். இன்னும் சிலர் பிரசங்க பீடத்திற்கு வருகையில், எளிமையாக உடையுடுத்தியிருப்பார்கள். அப்படியிருக்க... பாருங்கள்? ஓ, என்னே ! நல்லது, இது வரையிலும்... சரி. 145“மறைவான மன்னா ” என்பது சிறப்பானதொன்றாகும். அதில் என்ன அப்படிச் சிறப்பு உள்ளது. பரிசுத்த ஆவியின் ஆசீர் வாதங்களா அவை? இல்லை, அது முழு சபைக்கும் உரியதாகும். ஆனால் ''மறைவான மன்னா'' என்றால், அது தானே ஒரு விசேஷமான வெளிப்படுத்துதலாயிருக்கிறது. ஏனெனில் மற்றவர் களுக்கு அவன் போதிக்க வேண்டியவனாயிருக்கிற படியால், அது அவனுக்கு கொடுக்கப்படுகிறது. பாருங்கள்? மறைவான மன்னா என்பது, மற்றவர்களுக்கு போதிக்கும்படி, சபையின் தூதனுக்கு, வேதத்தின் பேரில் ஏனையோரைக் காட்டிலும் சற்று கூடுதலான அறிவை தேவன் கொடுத்தலாகும். அவன் அவ்வாறுதான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சரியா? நீங்கள் உங்களுடைய மேய்ப்பனைவிட (பாஸ்டரை விட) மேலாக இருந்து விடமுடியாது. அதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள் ளுங்கள். உங்களைப் போஷிப்பதற்காக தேவன் ஏற்படுத்தியுள்ள மேய்ப்பன் அவன். அவன் மேய்ப்பனாக (பாஸ்டர் ஆக) இருப்பானெனில், ஆடுகளைப் போஷிப்பதற்காக உள்ள மறைவான மன்னா எங்கிருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அது அப்படித்தானே? சற்று சிறப்பானது அது. இதை ஒரு நிமிடம் கவனித்துப் பாருங்கள். வெளிப்படுத்துதலாகிய மறைவான மன்னா. இப்பொழுது, ''வெண்குறிக்கல்லை அவன் பெற்றுக்கொள் வான்''. இந்த தூதன் ஒரு வெண்குறிக்கல்லைப் பெறுவான். அது ஒரு பாறை அல்லவா... அது உண்மை . வெண்மை 'சுத்தத்தை ''க் குறிக்கிறது. 146அவர் ஓர் சமயம் சீமோன் என்ற பெயரையுடைய ஒரு மனிதனைச் சந்தித்தார். அவனது பெயரை பாறை என்று அர்த்தம் கொள்ளும் “பேதுரு'' என்ற பெயராக மாற்றினார். ஏன்? அவனி டம் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன அல்லவா? அவனது பெயரை பாறை என்று அர்த்தம் கொடுக்கும் பெயராக மாற்றினார். இராஜ்யத்தின் திறவுகோல்களை உடையவனாக பேதுரு இருந்தான். “இதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாத ஒரு புதிய நாமத்தை அவனுக்குக் கொடுப்பேன்'' என்றார். அவன் யார் என்பதை அறிவான். ஆனால் மற்றவர்களுக்கு அவன் சொல்ல முடியாது. பாருங்கள்? பாருங்கள்? அவனைத்தவிர வேறு யாருக்கும் அது தெரியாது. பாருங்கள்? பேதுரு திறவுகோல்களைப் பெற்றிருந்ததை அறிந்திருந்தான். ஆனால் அவன் அதைப் பற்றி பெருமையடித்துக்கொள்ளவில்லை. பாருங்கள்? தங்களைப்பற்றி பெருமையடித்துக்கொள்ளும் இந்த நபர்கள் வாஸ்தவமாக ஒன்றுமேயில்லை. ''ஒரு வெண் குறிக்கல்லும், அதில் குறிக்கப் பட்டுள்ள ஒரு புதிய நாமமும்”. அம்மனிதனின் சொந்த பெயரல்ல அது. அப்பெயர் வேறு ஒன்று. அதை அவன் மட்டுமே அறிவான் (வெண்குறிக் கல்லைப் பெறுகிறவன் தான் அந்த நாமத்தை அறிவான்). சபையைப் போஷிப்பதற்காக அளிக்கப்படும் விசேஷித்த மன்னா அது, நினைவில் கொள்ளுங்கள். 147உண்மையான சபைக்கு இது நடக்கும்பொழுது, அதே காலத்தில்தான் (இது வெளிப்படும் இதே சமயம் தான்) அந்த நிக்கொலாய் மதத்தினர், சபைக்கு மேல் ஒரு தலைமைக் குருவை ஒரு போப்பை ஏற்படுத்தினார்கள். அவனுடைய சிங்காசனத்திற்கக் கீழே ஒரு வெண்மையான பாறையினால் செய்த பீடம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அது சரியா? அது சலவைக் கற்களால் ஆனது. அது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது அவனுக்கு விலையேறப் பெற்றதாக இருந்தது. ஆனால் இந்த கர்த்தருடைய தூதன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டின் மூலமாக, தான் யார் என்பதை, அதாவது அவன் ஒரு தேவபுத்திரன் என்பதை, அறிந்துகொள்ளுகிறான். இந்த நிக்கொலாய் மதத்தினர் தங்களுக்கென ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு, அவனுடைய பாதத்தின் கீழாக சலவைக் கற்களால் ஆன ஒரு பீடத்தை செய்து வைத்தபோது (பாருங்கள்?) தேவன் தன்னுடைய ஆவியினால் நிரப்பப்பட்ட தலைவனை, தன்னுடைய ஆவியால் நிறைந்திருக்கிற குழுவின்மேல் ஏற்படுத் தினார். அவன் அவருடைய தூதனாக இருக்கிறான். ஒரு நாமத்தை அவன்மேல் முத்திரையிட்டு அவர் வைக்கிறார். ஆனால் அவன் அதை யாருக்கும் வெளிப்படுத்தக்கூடாது; அவன் அதை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும், பாருங்கள், ''அதைப் பெற்றுக் கொள்ளுகிறவனைத் தவிர வேறொருவனும் அறியான்''. 148''மறைவான மன்னா, ஒரு வெண்குறிக்கல், ஒரு புதிய நாமம் அதைப் பெறுகிறவனுக்கே தவிர வேறு ஒருவனுக்குந் தெரியாது''. அவ்வாக்குத்தத்தம் அச்சபையின் தூதனுக்கு அழைத்துச் சொல்லப் பட்டது. லூத்தர் அதைப்பற்றி அறிந்திருந்தாரா என்பதைப் பற்றி நான் வியக்கிறேன். வெஸ்லி அதைப் பற்றி அறிந்திருந்தாரா என்று நான் வியக்கிறேன். ஏனைய மகத்தான தூதர்கள் அதை அறிந்திருந்தார்களா என்பதைப் பற்றி நான் வியக்கிறேன். இவ்வுலகத்தில் விரைவில் அந்த மகத்தான ஒளியின் தூதன் நம்மிடத்தில் வரவிருக்கிறார். அந்த மகத்தான பரிசுத்த ஆவி, வரப்போகும் அந்த வல்லமை, அது நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டை வழி நடத்தும். வரவேண்டிய அத்தூதனுக்கே அதைப் பற்றித் தெரியாமல் இருக்கக்கூடும். ஆனால் அவர் இந்நாட்களில் ஒன்றில் இங்கு இருப்பார். தேவன் அத்தூதன் யார் என்பதை நமக்கு தெரியப்படுத்துவார். அத்தூதன் தன்னைத்தானே யார் என்று தெரியப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் தேவனே அவனைப்பற்றி தெரியப்படுத்துவார். தேவன் தனக்குச் சொந்த மானவனை நிரூபித்துக் காண்பிப்பார். இயேசு இப்பூமியில் இருக்கையில், அவர்களுக்கு அவர் யார் என்பது தெரியவில்லை. அதைப்பற்றி இயேசு சொன்னார்: '...நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால் என்னை விசுவாசியாதிருங்கள். ஆனால் நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்தால், என்னை விசுவாசிக்க முடியாவிட்டால், என் கிரியைகளின் நிமித்தமாவது என்னை விசுவாசியுங்கள்'' என்றார். அது சரிதானே? ஓ அவர் அற்புதமானவராக இல்லையா? வெளிப்படுத்தின விசேஷத்தில், சபைகள் எங்கே என்ன நிலைமையில் உள்ளன என்பதைக் காண்கிறீர்கள் அல்லவா? அவர்கள் எவ்வாறு வெளியே தள்ளப்பட்டார்கள் என்பதை பார்த்தீர்களா? சபையானது எவ்வாறு வெளியே போய்விட்டது என்பதை கண்டீர்களா? நாளை இரவு அடுத்த சபைக்காலத்திற்குப் போகப் போகிறோம், கர்த்தருக்கு சித்தமானால். நான் உங்களை நீண்ட நேரம் இருக்கும்படி வைத்துவிட்டேன் என்பதற்காக வருந்துகிறேன். நீங்கள் ஒன்றைக் கற்றுக்கொள்ளு வீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னிடம் இன்னும் மூன்று, நான்கு பக்கங்களுக்கு குறிப்புக்கள் உள்ளன, ஆனால் அவைகளை எடுத்துக்கொள்ள எனக்கு நேரம் இல்லை. ஏனெனில், இப்பொழுது மிகவும் நேரமாகிவிட்டது, 9 மணிக்கு 17 நிமிடங்கள் உள்ளன. இதை நாம் புத்தகமாக வெளியிடும் போது அப்போது இக் குறிப்புகள் அதில் இடம் பெற்றுவிடச் செய்வோம். 149உங்கள் முழு இருதயத்தோடும் அவரை இப்பொழுது எத்தனை பேர்கள் நேசிக்கிறீர்கள்? எத்தனை பேர்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள்? நாம் ஸ்தாபனங்களில் அங்கம் வகிக்கவில்லையென்பதால், நாம் ஒரு ஸ்தாபனமாக இல்லையென்பதால், நான் இங்கே நின்று இவைகளைக் கூற முடிகிறது அல்லவா? சகோதரரே, நான் ஏன் என் வாழ்நாள் முழுவதும் ஸ்தாபனங்களுக்கு எதிராக போராடி வருகிறேன் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பாருங்கள், அது பரிசுத்த ஆவி. நான் ஏன் இவ்வாறாக இருந்து வந்திருக்கிறேன். என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பாக வரைக்கிலும் நான் அறியவில்லை. பாருங்கள்? எது என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது என்பதை அறியவில்லை. ஏன் நான் எப்பொழுதும் ஸ்திரீகள் தவறாக வாழ்வதைக் குறித்து குரல் கொடுத்துக்கொண்டேயிருந்திருக்கிறேன் என்பதும் எனக்கு தெரியாமல் இருந்தது. எனக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன். பாருங்கள்? கர்த்தர், இவைகளெல்லாம் தவறாக இருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறார். அவர்களுடைய காரியம் சரியானபடி வரலாற் றில் இடம் பெற்றுவிட்டது. வேதமானது, சபைக் காலங்களில் இன்னின்னவாறு நடைபெறும் என்று முன்கூட்டியே முன்னுரைத் துள்ளது. இப்பொழுது நாம் நடைபெற்றவைகளைப்பற்றி அறிந்து கொண்டு விட்டோம், அல்லவா? நாம் குறிப்பிட்ட சபைக் காலத்திற்குரிய வரலாற்றை எடுத்துப்பார்க்கையில், வேதம் முன்னுரைத்தபடியே அங்கே சம்பவமானது நிறைவேறி நடந்து விட்டதை நாம் பார்க்கிறோம். அது சரியல்லவா? அதற்குப் பிறகு நாம் வாழ்கிற சபைக் காலத்தைக் குறித்து நாம் பார்க்கையில், நம்முடைய சபைக் காலத்திற்கென அவர் முன்னுரைத்தது என்னவோ, அதே காரியம், தேவன் எவ்வாறு நடக்கும் என்று கூறினாரோ அதேவிதமாக அது சம்பவிக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஓ! நீங்கள் விரும்பவில்லையா...? ஓ நான் அவரைக் காண வாஞ்சிக்கிறேன், அவர் முகத்தை நான் ஏறிட்டுப் பார்ப்பேன் மகிமையின் தெருக்களில் என் குரலை நான் உயர்த்தி, கவலைகள் யாவும் ஒழிந்தன, சதா மகிழ்ந்திட முடிவில் வீடு வந்து சேர்ந்தேன் நான் அவரைக் காண வாஞ்சிக்கிறேன், (எத்தனை பேர் வாஞ்சிக்கிறீர்கள்?) அவரது இரட்சிக்கும் கிருபையை பற்றி சதாகாலம் பாடுவேன் மகிமையின் தெருக்களில் என் குரலை உயர்த்திக் கூறுவேன்: கவலைகள் ஒழிந்தன, என்றும் மகிழ்ந்திட முடிவில் வீடு சேர்ந்தேன். உங்களுக்கு முன்னும், பின்னும், சுற்றிலும் அமர்ந்திருக்கும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். அனைத்து மெதோடிஸ்டுகளுடனும், பாப்டிஸ்டுகளுடனும், ப்ரெஸ்பி டேரியன்களுடனும், அவர்கள் யாராயிருந்தாலும், அவர்களோடு கைகுலுக்கிக்கொள்ளுங்கள். நான் இத்தேசத்தில் பயணம் செய்கையில், பாடிக்கொண்டே போவேன், ஆத்துமாக்களை இரத்த ஆறு ஓடும் கல்வாரிக்கு நேராக நடத்துவேன் (சபைக்கு நேராக அல்ல) அநேகம் அம்புகள் ஆத்துமாவை எப்பக்கத்திலும் இருந்து குத்தினாலும், என் ஆண்டவர் என்னை தொடர்ந்து நடத்துகிறார், அவரை நான் பற்றிக் கொள்ளல் வேண்டும். 150நாம் இப்பொழுது எழுந்து நிற்போமாக: நான் அவரைக் கண்டு, முகத்தை ஏறிட்டுப் பார்த்திட விரும்புகிறேன், அவர் தம் இரட்சிக்கும் கிருபையைப்பற்றி சதாகாலம் பாடுவேன் (நம் கைகளை உயர்த்துவோமாக) மகிமையின் தெருக்களில் நான் என் சத்தத்தை உயர்த்தி, கவலைகள் ஒழிந்தன, என்றென்றும் மகிழ்ந்திட முடிவில் வீடு சேர்ந்தேன் என்று கூறுவேன். நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன். நான் எவ்வளாய் அவரை நேசிக்கிறேன்! அற்புதம்! அற்புதம்! அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பராம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார் அற்புதம் என் இயேசுவுக்கு தோத்திரம். நான் முன்பு காணாமற்போனேன், இப்போது கண்டு பிடிக்கப்பட்டேன், ஆக்கினையிலிருந்து விடுதலையானேன் இயேசு விடுதலையையும், முழு இரட்சிப்பையும் தருகிறார், அவர் என்னை இரட்சித்து, எல்லாப் பாவம், நிந்தையினின்றும் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது நாமத்திற்கு ஸ்தோத்திரம். 151யாவரும் நல்ல சப்தமாகப் பாடுவோம். அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தர், சமாதானப்பிரபு, வல்ல தேவனவர், ஒ என்னை இரட்சிக்கிறார், பாவம், நிந்தை யாவற்றினின்றும் அவர் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது நாமத்திற்கு ஸ்தோத்திரம். ஓ எவ்வளவு அற்புதமானவராக இருக்கிறார்! அற்புதம், அற்புதம், இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தர், சமாதானப்பிரபு, வல்ல தேவனவர், இரட்சிக்கிறார், பாவம், நிந்தை யாவற்றினின்றும் அவர் என்னைக் காக்கிறார், என் மீட்பர் அற்புதமானவர், அவரது நாமத்திற்கு ஸ்தோத்திரம். 152'அவர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்'' என்று சேர்ந்து சொல்லு வோமாக. (சகோ. பிரன்ஹாம் அவர்களும் சபையாரும் சேர்ந்து சொல்லுகிறார்கள் - ஆசி.) 'அவர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்'' என்னுடைய மீட்பர்! நாளை இரவு ஏழு மணிக்கு. நாம் மீண்டும் திரும்பி வரும் வரைக்கிலும், இதைச் செய்யுங்கள். துன்பமும் வருத்தமும் நிறைந்த பிள்ளையே உன்னுடன் இயேசுவின் நாமத்தை எடுத்துச் செல், மகிழ்ச்சியும், ஆறுதலும் அவர் நாமம் கொடுக்கும், செல்லுமிடமெங்கும் அதை எடுத்துச் செல். விலையேறப்பெற்ற நாமம் அது, (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எவ்வளவு இனிமையது (ஓ எவ்வளவு இனிமையது) பூமியின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமும் அதுவே விலையேறப்பெற்ற நாமம் அது (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எத்தனை இனிமையானது அது பூமியின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமும் அதுவே. ஜெபத்தில் நாம் தலைகளை வணங்குகையில், கடைசி பாட்டை அல்லது கடைசி சரணத்தை நாம் பாடுவோம். இயேசுவின் நாமத்தில் பணிந்து அவர் பாதத்தில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து, (தேவனாகிய கர்த்தாவே, இவர்களை குணமாக்கும் கர்த்தாவே!) வணங்குவோம், நம் பயணம் முடிகையில், நாம் அவருக்கு முடிசூட்டுவோம்.